தென்னக மக்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி..முக்கிய ரயில் சேவையை ரத்து செய்த தென்னக ரயில்வே! என்னாச்சு?
சென்னை: தென் மாவட்ட மக்களுக்கு வரப் பிரசாதமாக திகழ்ந்த அந்தியோதயா முன்பதிவு இல்லாத ரயில் சேவை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகரித்துள்ளது. இதேபோல நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரையிலான சேவையும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் தினமும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரயில் சேவையை பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு குறைந்த செலவில் வேகமாக சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக வேலை, கல்லூரிக்கு செல்லும் மக்கள் மின்சார ரயில்களால் அதிகம் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னையில் 55 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டது..
இந்நிலையில் தென் மாவட்ட மக்களுக்கு வரப் பிரசாதமாக திகழ்ந்த அந்தியோதயா முன்பதிவு இல்லாத ரயில் சேவையை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகரித்துள்ளது . சென்னை தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தினமும் இரவு 11 மணிக்கு அந்தியோதயா ரயில் இயக்கப்படுகிறது. இந்தியாவிலேயே தினமும் இயக்கப்படும் ஒரே அந்தியோதயா ரயில் இது மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
15 ரயில் பெட்டிகளுடன் இந்த ரயில் முன் பதிவில்லாமல் முழுக்க முழுக்க அன்ரிசர்வ் பயணிகளுக்காக இயக்கப்படுகிறது. இரவு பதினோரு மணிக்கு புறப்படும் இந்த ரயில் அடுத்த நாள் 12.50 மணிக்கு நாகர்கோயில் சென்றடைகிறது. தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் இந்த ரயில் அங்கிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி வந்து அங்கிருந்து திண்டுக்கல், மதுரை வழியாக நாகர்கோயில் செல்லும். செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் யார்டு ரயில்வே ஸ்டேஷனின் 2ம் கட்ட புனரமைப்பு பணியுடன் சேர்ந்து தாம்பரம் யார்டுவில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. பயணிகள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு கருதி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணியின் காரணமாக அந்தியோதயா முன்பதிவு இல்லாத ரயில் சேவை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகரித்துள்ளது. இதேபோல நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரையிலான சேவையும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதி வரை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து மதுரைக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தென் மாவட்ட பயணிகள் அதிகாலையில் சென்னைக்கு பயணம் மேற்கொள்ளும் போது செங்கல்பட்டில் இருந்து கிளாம்பாக்கம் அல்லது எலும்பூர் வரை மின்சார ரயிலில் பயணம் மேற்கொண்டிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலரும் அந்தியோதயா ரயில் சேவையை பயன்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில் அந்த அறையில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications