அடுக்குமாடி வீடுகளுக்கு "ஆப்பு"? அப்பார்ட்மென்ட்டில் பழைய வீடுகள் இடிந்தால் யார் பொறுப்பு? பரபர தகவல்
சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகள் விவகாரம் தொடர்பாக வீட்டு வசதி வாரியம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக 2 தகவல்கள் வட்டமடிக்கின்றன.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB), பொதுமக்களின் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே உருவாக்கப்பட்டதாகும். புதிய கட்டுமான தொழில்நுட்பங்கள் மற்றும் தரமான பொருட்களைப் பயன்படுத்தி அனைவருக்கும் வீடு வழங்குவதே இந்த வாரியத்தின் ஒரே நோக்கமாக இருந்து வருகிறது.

திருத்தங்கள்: இதை முன்னிறுத்தி பல்வேறு அதிரடிகளையும், திருத்தங்களையும் வாரியம் மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், அடுக்கு மாடி குடியிருப்புகள் குறித்த சில தகவல்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.
அதாவது, தமிழகத்தில் வீட்டுவசதி வாரியம் சார்பில், பல்வேறு மாவட்டங்களில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் குலுக்கல் முறையில், பயனாளிகளுக்கு வீடுகளும் ஒதுக்கப்பட்டன.. அதன்படி, வீடு ஒதுக்கீடு பெற்று, முழு தவணையையும் செலுத்தியவர்களுக்கு, அவர்கள் பெயரில் விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
வீட்டு வசதி வாரியம்: இந்த குடியிருப்புகள் எல்லாம் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளதால், இவைகளை இடித்து, புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும் என்று வீட்டுவசதி வாரியத்திடம் வீட்டு உரிமையாளர்களே கோரிக்கை வைத்திருந்தனர்.. இந்த கோரிக்கையை ஏற்று, உரிமையாளர்கள் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட, வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது.
இதற்காக, சென்னை, கோவையில், 60 குடியிருப்பு வளாகங்கள் தேர்வு செய்யப்பட்டதுடன், பழைய குடியிருப்பு மறுமேம்பாட்டுக்கு புதிய கொள்கை வெளியிடப்படும் என்று கடந்த வருடம் பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த திட்டம் கைவிடப்பட்டுவிட்டதாகவும், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இடிந்தால் இனி உரிமையாளரே பொறுப்பு என்றும் சோஷியல் மீடியாவில் 2 நாளைக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது.
சென்னை வீடுகள்: அதேபோல, 4 அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்து முக்கிய நடவடிக்கையை வீட்டுவசதி வாரியம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.. ஈரோடு மாவட்டம் சம்பத் நகரில், 40.60 கோடி ரூபாயில், 108 வீடுகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு திட்டம், கடந்த 2022ல் அறிவிக்கப்பட்டது..
ஈரோடு போலவே, சென்னையில் மயிலாப்பூர், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் பகுதிகளில் பழைய கட்டிடங்களை இடித்து, புதிய அடுக்குமாடி திட்டங்கள் செயல்படுத்தவும் அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இதற்கு, கடந்த வருடம் வாரிய நிர்வாக குழு ஒப்புதல் அளித்திருந்த நிலையில், கட்டுமான பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இந்த திட்டங்களுக்கு ஒப்பந்ததாரர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதன்காரணமாக இத்திட்டங்கள் அடுத்தக்கட்ட நகர்வுக்கு செல்ல முடியால் அப்படியே நின்றுபோய் உள்ளதாம்.
புதிய குழு அமைப்பு?: எனவே, இந்த திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காக, மறு மதிப்பீட்டு அறிக்கை அளிக்க, உயர் நிலை குழு அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. முக்கியமாக, நிதித்துறை இணை செயலர், நகர், ஊரமைப்பு துறையான டிடிசிபி பிரதிநிதி, பொதுப்பணி துறையின் முதன்மை தலைமை பொறியாளர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை பொறியாளர், வீட்டுவசதி வாரிய தலைமை பொறியாளர் உள்ளிட்ட ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றிருப்பார்கள் என்று பிரபல நாளிதழில் இன்று செய்தி வெளியாகியிருக்கிறது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications