அப்படி சொல்லாதடா சாரி மனசு வலிக்கிறது.. மஞ்சரேக்கருக்கு நச்சுன்னு குட்டு வைத்த அஸ்வின்.. செம பதிலடி!
சென்னை: கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சரேக்கரின் விமர்சனத்திற்கு தமிழக வீரர் அஸ்வின் கொடுத்த பதிலடி இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
மும்பையை சேர்ந்த கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்சரேக்கர் எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேச கூடியவர். மும்பையை தவிர பிற மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களை ஏளனமாக பேசுவதும், அவமானப்படுத்துவதும் இவரின் வழக்கம்.
முக்கியமாக தமிழக வீரர்கள், சிஎஸ்கே வீரர்களை மட்டம்தட்டி பேசுவது இவரின் வழக்கம். பல காலமாக ஜடேஜாவை இவர் தொடர்ந்து சீண்டி வந்து அவமானப்பட்டு இருக்கிறார்.

ஜடேஜா
ஜடேஜாவை ஒவ்வொரு முறையும் சஞ்சய் மஞ்சரேக்கர் மோசமான வீரர் என்று விமர்சனம் செய்வார். அதன்பின் ஜடேஜா அடுத்த போட்டியிலேயே அதிரடியாக ஆடி சஞ்சய் மஞ்சரேக்கருக்கு பதிலடி கொடுப்பார். பலமுறை சஞ்சய் மஞ்சரேக்கர் இப்படி அவமானப்பட்டு இருந்தாலும் வெட்கமே இன்றி ஒவ்வொரு முறையும் மீண்டும் ஜடேஜாவை சீண்டி, மீண்டும் அவமானப்பட்டு இருக்கிறார்.

அஸ்வின்
இந்த நிலையில் ஜடேஜாவிடம் வாங்கியது போதாது என்று இந்த முறை திடீரென அஸ்வினை சீண்டியுள்ளார். அதன்படி, இந்தியாவின் தலைசிறந்த ஸ்பின் பவுலர் என்று அஸ்வினை நான் கூற மாட்டேன். அப்படி கூறுவதில் ஒரு பிரச்சனை உள்ளது. அவர் இந்தியாவில் மட்டுமே நன்றாக ஆடுகிறார். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்தில் நன்றாக ஆடுவது இல்லை.

ஜடேஜா பவுலிங்
பவுலிங்கில் அஸ்வினுக்கு இணையாக ஜடேஜா இருக்கிறார். அதனால் அஸ்வின் தலை சிறந்த பவுலர் என்று கூற மாட்டேன் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கூறினார். மேலும் என்னை பொறுத்தவரை டான் பிராட்மேன், சோபர்ஸ், கவாஸ்கர், டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர்தான் தலை சிறந்த வீரர்கள். அஸ்வினை அந்த இடத்தில் நான் வைக்க மாட்டேன் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கூறினார்.

பதிலடி
இதற்கு அஸ்வின் ஒரே மீமில் தரமான பதில் கொடுத்துள்ளார். அந்நியன் பட டெம்ப்லேட்டை வைத்து, அப்படி சொல்லாதடா சாரி, மனசெல்லாம் வலிக்கிறது என்று மீம் போட்டு கிண்டல் செய்துள்ளார். சஞ்சய் மஞ்சரேக்கருக்கு தமிழ் புரியாது என்பது தெரிந்து, வேண்டுமென்றே இந்த மீமை போட்டு, கடுப்பேற்றி இருக்கிறார். அஸ்வினின் இந்த கூல் பதிலடி இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications