Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளிர் உரிமைத் தொகை.. நாளை உங்களுக்கு ரூ.1000 வரவில்லைன்னா.. என்ன செய்யணும்? சூப்பர் வழி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாளை முதல் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. ஒருவேளை நாளை முதல் உங்களுக்கு பணம் வரவில்லை என்றால் அதற்கான மேல்முறையீட்டு வழிகள் உள்ளன.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியிருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு மேல்முறையீடு செய்ய தமிழக அரசு வாய்ப்பளித்துள்ளது. தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பம் மறுக்கப்பட்டிருந்தால், அதற்கான முழுமையான நடைமுறையை அரசு வெளியிட்டுள்ளது.

Tamil Nadu Government Notification magalir urimai thogai

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு எஸ்.எம்.எஸ் மெசேஜ்கள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழ்நாட்டில் உள்ள தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை வழங்குகிறது. முன்னதாக நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், ஏராளமான பெண்கள் இத்திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தனர். அங்கு அதிகாரிகள் விண்ணப்பங்களைப் பெற்று தகுதியை சரிபார்த்தனர்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆவணங்கள், வருமான விவரங்கள் மற்றும் குடும்ப நிலையை கவனமாக சரிபார்த்து, தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்தனர். இந்த விரிவான சரிபார்ப்புக்குப் பிறகு, புதிதாக தகுதியானோர் பட்டியலை தமிழக அரசு இறுதி செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்களுக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இச்செய்தி, அவர்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 13ம் தேதி முதல் உதவித்தொகை கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறது.

முழுமையான உதவித்தொகை அனுப்பப்படுவதற்கு முன், பல பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஒரு ரூபாய் சரிபார்ப்புத் தொகையாக அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் நடைமுறை, விண்ணப்பதாரர் வழங்கிய வங்கிக் கணக்கு தகவல்கள் சரியானவை மற்றும் செயல்படுபவை என்பதை உறுதி செய்வதற்காகும்.

மகளிர் உரிமை தொகை - மேல்முறையீடு

விண்ணப்பித்த அனைவருக்கும், விண்ணப்பத்தின் நிலை குறித்த குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்பட்டு வருகிறது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், அதற்கான காரணம் குறுஞ்செய்தியில் தெளிவாகக் குறிப்பிடப்படும். இது, விண்ணப்பதாரர்கள் குறைகளை அறிந்து, மேல்முறையீடு செய்வதற்கு முன் சரிசெய்ய உதவும்.

மேல்முறையீடு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்கள் பகுதி மகளிர் நலத் தனி வட்டாட்சியரை அணுகலாம். குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டைச் செய்ய வேண்டும். நிராகரிப்புச் செய்தியுடன் சென்று, அதிகாரியின் அறிவுரைகளைப் பின்பற்றவும்.

எப்படி மேல்முறையீடு செய்வது?

மேல்முறையீட்டு மனுக்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரின் சீராய்வுக்கு அனுப்பப்படும். அதிகாரிகள் ஆவணங்களை மீண்டும் சரிபார்த்து, விண்ணப்பதாரரின் தகுதியை முடிவு செய்வார்கள். சிறுபிழைகள் அல்லது ஆவண முரண்பாடுகளால் தகுதியான பெண்கள் யாரும் விடுபடாமலிருக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசதிக்காக, இ-சேவை மையங்கள் மூலமாகவும் மேல்முறையீடுகளை சமர்ப்பிக்க அரசு வழிவகை செய்துள்ளது. அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்ல முடியாத பெண்கள், தங்கள் அருகிலுள்ள மையங்கள் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், தமிழக அரசின் முக்கிய நலத்திட்டம். இந்த மேல்முறையீட்டு அமைப்பு, தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணும் திட்டப் பலனைச் சிரமமின்றி பெறுவதை உறுதி செய்கிறது. விண்ணப்ப நிலை குறித்த முக்கிய குறுஞ்செய்திகளைத் தவறவிடாமல் இருக்க, கைபேசி எண்களை எப்போதும் செயல்பாட்டில் வைத்திருக்க அரசு வலியுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+