A.R.Rahman Communal Row: யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை! விமர்சனங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் பதிலடி
சென்னை: இந்தி சினிமாவில் தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு தொடர்பாக தான் தெரிவித்த கருத்துகளுக்கு பாலிவுட் நடிகர், நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் யாரையும் புண்படுத்த விரும்பியதில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது: "அன்புள்ள நண்பர்களே! இசை எனது கலாச்சாரத்தை இணைத்து, கொண்டாடி, போற்றும் வழி. இந்தியா எனது உந்துசக்தி, குரு, வீடு. சில நேரங்களில் நோக்கங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன்.
ஆனால் என் நோக்கம் இசையின் மூலம் உயர்த்துவதும், கௌரவிப்பதும், சேவை செய்வதும் தான். நான் ஒருபோதும் வலியை ஏற்படுத்த விரும்பியது இல்லை, எனது நேர்மை உணரப்படும் என நம்புகிறேன். நான் யார் மனதையும் புண்படுத்த விரும்பியதில்லை.
இந்தியனாக இருப்பதில் தான் பெருமையடைவதாகவும், படைப்புச் சுதந்திரத்திற்கான வாய்ப்புகளை நாடு எனக்கு வழங்கியுள்ளது . சுதந்திரமான வெளிப்பாட்டிற்கு எப்போதும் இடமளித்து, பன்முக கலாச்சார குரல்களைக் கொண்டாடும் ஒரு சூழலை உருவாக்க உதவும். இந்தியனாக இருப்பதை நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்" என்று தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications