பெண்களை கொன்னுடுவேன்.. பிறகு "உறவு" வச்சுக்குவேன்.. அதான் பிடிக்கும்.. ஷாக் தந்த சைக்கோ கொலையாளி
அரக்கோணம் சைக்கோ கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்
Recommended Video
சென்னை: "பெண்களை அம்மிக்கல்லால்தான் கொலை செய்வேன்.. அவர்களை கொன்று விட்டு அந்த பிணத்துடனேயே உறவு வைத்து கொள்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று சைக்கோ கொலையாளியின் கொடூரத்தின் மறுபக்கத்தை கண்டு அதிர்ந்துள்ளனர் போலீசார்!
அரக்கோணத்தில், கடந்த ஜூலை 9-ம் தேதி, நிர்மலா என்ற பெண் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இவர் எதனால் கொலை செய்யப்பட்டார் என்ற விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். இந்த சம்பவம் நடந்து சரியாக 7-வது நாள், அதாவது ஜூலை 16-ம் தேதி, நிர்மலாவின் நெருங்கிய தோழியான இந்திராணி தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். அதனால் போலீசார் மிகவும் குழம்பி விட்டனர்.

கைது
இந்த சம்பவம் நடப்பதற்கு 2 நாளைக்கு முன்னாடிதான், ஆந்திரா எல்லையான நகரியில் ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். சரோஜா என்பவரின் தலையில் கல்லை போட்டு கொன்றதாக ஆனந்த் கைது செய்யப்பட்டிருந்தார்.

வாக்குமூலம்
அவரிடம் விசாரித்ததில் அரக்கோணத்தில் ஒரு பெண்ணை கொலை செய்ததாக சொல்லவும், நகரி போலீசார் அரக்கோணம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்துதான் இரு மாநில போலீசாரும் ஆனந்தின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ந்தே போய்விட்டனர்.

இந்திராணி
ஆனந்த சொன்னதாவது: "அரக்கோணத்தில் சவுண்ட் சர்வீஸ் கடையில் வேலை பார்த்து கொண்டிருந்தேன். இந்திராணி என்ற பெண்ணுடன் உறவு ஏற்பட்டது. இந்திராணிக்கு அவரது தோழியான நிர்மலாவுடன் சண்டை வந்தது. அதனால்தான் நிர்மலாவை கொல்ல வேண்டும் என்று என்னிடம் இந்திராணி சொல்லி கொண்டே இருந்தார். ஆனால் நான், நிர்மலாவை தனியாக சந்தித்து 2000 கொடுத்து, என்னுடன் ஜாலியாக இருக்க முடியுமா என்று கேட்டேன். அவர் என்னை பளார் என்று அறைந்துவிட்டார்.

அம்மிக்கல்
இதனால் எனக்கு ஆத்திரம் அதிகமானது. சம்பவத்தன்று நிர்மலா வீட்டுக்கு சென்று தலையில் அம்மி கல்லை போட்டு கொன்றேன். அந்த சடலத்துடன் உறவு கொண்டேன். ஆனால் நிர்மலா கொலை விஷயமாக இந்திராணியை போலீசார் விசாரணைக்காக துளைத்தெடுக்கவும், அவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். உடனே நான் நகரி பக்கம் தலைமறைவானேன். சரோஜா என்ற 55 வயது பெண்ணை கொன்றேன். அந்த சடலத்துடனும் உறவு கொண்டேன். பிறகு நகைகளை திருடி கொண்டு வந்துவிட்டேன்" என்று அதிர வைத்தார்.

நெக்ரோஃபீலியா
ஒரு பக்கம் சைக்கோ கொலையாளி என்றும், இன்னொரு பக்கம் நெக்ரோஃபீலியா என்ற நோயால் ஆனந்த் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிணத்துடன் உறவு கொள்ளவும், அதன் மூலம் இன்பம் அடைவார்கள் என்றும் சொல்கிறார்கள். இதுவரை எத்தனை பேரை ஆனந்த் கொன்றிருப்பார், உறவு கொண்டிருப்பார் என்று தெரியவில்லை. ஆனால் அவரது வாக்குமூலம் அனைவரையுமே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications