சட்டசபை இடைத்தேர்தலில் 71.62 % வாக்குப் பதிவு... தேர்தல் ஆணையம் தகவல்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா, இல்லை தக்க வைக்குமா என்பதை தீர்மானிக்கும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக முடிவடைந்துள்ளது. இதில் 9 மணி நிலவரப்படி, மொத்தம் 71.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் 38 லோக்சபா தொகுதிகளுக்கும் 18 சட்டபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 9 மணி நிலவரப்படி எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்பதை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. முன்னதாக பேசிய தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ, தற்போதைய சூழ்நிலையில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.

கூட்டத்தை சமாளிக்க அரக்கோணம் கீழ்விஷாரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் யாருக்கும் காயமில்லை. தேர்தலின் போது எந்த சட்டஒழுங்கு பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் விளக்கமளித்த அவர், தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்றார்.
1. பூந்தமல்லி- 79.14%
2. பெரம்பூர்- 61.06 %
3. திருப்போரூர்- 81.05 %
4. சோளிங்கர்- 79.63%
5. குடியாத்தம்- 81.79%
6. ஆம்பூர் - 76.35%
7. ஓசூர் - 71.29%
8. பாப்பிரெட்டிபட்டி - 83.31 %
9. அரூர் - 86.96%
10. நிலக்கோட்டை - 85.50%
11. தஞ்சாவூர் - 66.10 %
12. மானாமதுரை - 71.22%
13. ஆண்டிப்பட்டி - 75.19%
14. பெரியகுளம் -64.89%
15. சாத்தூர்- 60.87%
16. பரமக்குடி - 71.69%
17. விளாத்திகுளம்- 78.06%
18. திருவாரூர்-77.38 %
அதிகபட்சமாக அரூரில் 86.96 சதவீதமும், குறைந்தபட்சமாக சாத்தூரில் 60.87 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications