ஆரணி மஞ்சுளா, ஈரோடு மைதிலி.. தாசில்தார் டூ ஆர்டிஓ வரை சிக்கினாங்களே? லஞ்சத்தில் வருவாய்த்துறை டாப்?
சென்னை: பத்திரப்பதிவு, வருவாய்த்துறைகளில் நாளுக்கு நாள் லஞ்ச புகார்கள் எழுந்து வரும்நிலையில், அவைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மிக தீவிரமாக எடுத்து வருகிறது தமிழக அரசு.. தவறு செய்வோர் யாராக இருந்தாலும் அவர்களது குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், தயவு தாட்சண்யம் இல்லாமல், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகிறது. இந்நிலையில், வருவாய்த்துறையில் அதிக லஞ்ச புகார்கள் உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அரசு துறைகளிலிலேயே, வருவாய்த்துறை, பதிவுத்துறை தான் அளவுக்கு அதிகமாக பணம் புழங்க வாய்ப்புள்ள துறைகளாகும்.. எனவேதான், லஞ்சம் ஏராளமான நடமாடக்கூடிய துறையில் இது முதன்மையாக உள்ளது.. அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை இப்படியான லஞ்சத்தில் சிக்கி கொள்கிறார்கள்.
அதிகாரிகள் சேவை விதிகளை மீறினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை தரப்பில் பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் போலி பட்டா வழங்கல், பிரதமர் வீட்டு வசதித் திட்டம் உட்பட ஏராளமான முறைகேடுகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.. எனினும், நிலத்தை அளப்பது, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.
அப்ரூவல்: இதில் சில பெண் அதிகாரிகளும் அடக்கம். சில மாதங்களுக்கு முன்பு பட்டா மாறுதலுக்காக லஞ்சம் வாங்கி நாகை விஏஓ செல்வி என்பவர் கைதானார்.. செல்வியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரை அழைத்துச் சென்றதை, அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்களாம். இதையடுத்து, ஆரணியில் வட்டாட்சியர் மஞ்சுளா என்பவரும் சிக்கி, வடஆற்காடு மாவட்டத்துக்கே அதிர்ச்சியை தந்தார்.
2 நாட்களுக்கு முன்புகூட, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் பதிவு பெற்ற இன்ஜினியர் ஒருவர், அப்ரூவல் கேட்டு, டிபிஓ பர்குணன் என்பவரிடம் அணுகியிருக்கிறார். அதற்கு அந்த அதிகாரி 48,000 லஞ்சம் கேட்டுள்ளார்.. அதேபோல நேற்றைய தினம் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சர்வேயர் குமரன் என்பவர், விண்ணப்பதாரருக்கு தனிப்பட்டா வழங்குவதற்கு 9,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இவர்கள் அனைவருமே கைதாகி வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 10 வருடங்களில் லஞ்சம் வாங்கியதாக கையும், களவுமாக பிடிபட்டவர்கள் அதிகம் என்றும், அதுவும் பட்டா மாறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக லஞ்சம் வாங்கியதில் வருவாய்த்துறை முதலிடத்தில் உள்ளதாகவும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
வருவாய்த்துறை: அதாவது, கடந்த 10 ஆண்டுகளில் லஞ்சம் வாங்கிய வழக்குகளில் 2023-24ல் அதிகபட்சமாக 155 வழக்குகளை போலீசார் விசாரித்து வருவதாகவும், 2023-24ல் லஞ்சம் வாங்கியதாக வருவாய்த்துறையினர் மீதுதான் அதிகபட்மாக 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வருவாய்த்துறைக்கு அடுத்தபடியாக, மின்வாரியம் மீது 26 வழக்குகள், ஊரக வளர்ச்சித்துறை - 22, உள்ளாட்சி அமைப்புகள் - 21 வழக்குகள், சர்வே - 18, போலீஸ் - 10, பத்திரப்பதிவு - 8, சமூகநலத்துறை - 4 வணிகவரித்துறை, கூட்டுறவு, வேளாண், கல்வித் துறைகளில் தலா 1, மருத்துவத்துறை - 2, தொழிலாளர் நலத்துறை - 3 வழக்குகள் குறித்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறதாம்.
அரசு அலுவலகங்கள்: அரசு அலுவலகங்களில் உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரியம், போலீஸ், தீயணைப்பு என பல்வேறு துறைகளில் லஞ்ச புகார்கள் எழுந்தபடிதான் உள்ளன.. எனினும், இதில் வருவாய்த்துறை முதன்மையாக உள்ளதாக கூறப்படுவது, மிகப்பெரிய அதிர்வலையை, தமிழக அரசு துறைகளில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications