வில்லிவாக்கம் பம்பிங் ஸ்டேஷனில் திருட்டுத்தனம்.. யார் அந்த சென்னை மெட்ரோ அதிகாரி? அறப்போர் இயக்கம்
சென்னை: வில்லிவாக்கம் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை இப்படி திருட்டுத்தனமாக கால்வாயில் திறந்துவிட்டு அதை கொரட்டூர் ஏரிக்கு அனுப்ப உத்தரவிட்ட சென்னை மெட்ரா வாட்டர் அதிகாரி யார்? அவருக்கு என்ன தண்டனை கொடுக்க போகிறீர்கள்? படிப்பறிவுள்ள நாகரீக சமுதாயத்தில் ஒரு அரசாங்கம் செய்யும் செயலா இது? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் வில்லிவாக்கம், கொரட்டூர் போன்ற மாநகர பகுதிகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை திருட்டுத்தனமாக மழைநீர் வடிகால்களிலோ அல்லது கால்வாய்களிலோ திறந்துவிட மிகப்பெரிய தவறு மற்றும் சட்டவிரோதமானது ஆகும்.சுத்திகரிக்கப்படாத கழிவுநீரில் அபாயகரமான பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் இருக்கும். இது கால்வாய்களில் தேங்கும்போது, கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும்.

அத்துடன் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக மாசுபடும்.இது அந்தப் பகுதியில் சுற்றியுள்ள போர்கள் மற்றும் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். மழைநீர் செல்வதற்காக உருவாக்கப்பட்ட கால்வாய்களில் கழிவுநீரை மாநகராட்சியே திறந்து விடும்போது, அதில் உள்ள திடக்கழிவுகள் படிந்து தூர்ந்து போய்விடும். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வடியாமல் வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட இதுவே முக்கிய காரணமாக மாறிவிடுகிறது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி, கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்யாமல் நீர்நிலைகளில் விடுவது தண்டனைக்குரிய குற்றம். மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மின்சாரச் செலவை மிச்சப்படுத்தவோ அல்லது சுத்திகரிப்பு நிலையத்தின் சுமையைக் குறைக்கவோ இப்படிச் செய்வது பொதுமக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய தவறு ஆகும்.
இதனை நீங்கள் நேரில் கண்டால் சென்னை மாநகராட்சி யின் '1913' என்ற எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம். அதேபோல் "Namma Chennai" செயலி மூலம் ஆதாரங்களுடன் (வீடியோ/புகைப்படம்) புகார் அளிக்க முடியும். அதேபோல் சென்னையில் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளின் எண்ணான 044-4567 4567 என்ற புகார் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் கழிவுநீர் சட்டவிரோதமாகத் திறக்கப்படுவது குறித்து புகார் அளிக்கலாம்.
அதேபோல் உங்கள் புகாரை வீடியோவாக எடுத்து X (Twitter) தளத்தில் சென்னை மாநகராட்சி (@chennaicorp) மற்றும் அதிகாரிகளை டே செய்து பதிவிட்டால், மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள.. அப்படியான ஒரு புகாரைததான் அறப்போர் இயக்கம் கொடுத்துள்ளது.
அந்த புகாரில் "வில்லிவாக்கம் பம்பிங் ஸ்டேஷனில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை இப்படி திருட்டுத்தனமாக கால்வாயில் திறந்துவிட்டு அதை கொரட்டூர் ஏரிக்கு அனுப்ப உத்தரவிட்ட சென்னை மெட்ரா வாட்டர் அதிகாரி யார்? அவருக்கு என்ன தண்டனை கொடுக்க போகிறீர்கள்? படிப்பறிவுள்ள நாகரீக சமுதாயத்தில் ஒரு அரசாங்கம் செய்யும் செயலா இது?" என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி ள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
வில்லிவாக்கம் Pumping Stationல் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை இப்படி திருட்டுத்தனமாக கால்வாயில் திறந்துவிட்டு அதை கொரட்டூர் ஏரிக்கு அனுப்ப உத்தரவிட்ட சென்னை மெட்ரா வாட்டர் அதிகாரி யார்? அவருக்கு என்ன தண்டனை கொடுக்க போகிறீர்கள்? படிப்பறிவுள்ள நாகரீக சமுதாயத்தில் ஒரு… pic.twitter.com/8flcmKDmm5
— Arappor Iyakkam (@Arappor) January 13, 2026












Click it and Unblock the Notifications