பாஜக வேண்டாங்க.. உதறி தள்ள ரெடியான எடப்பாடி? குறுக்கே புகுந்து தடுத்த 2 சீனியர்கள்.. பயப்படுறீங்களா?
சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக அதிமுக - பாஜக உறவு நீடிக்குமா என்பது குறித்த கேள்விகளை அவரின் பேட்டி எழுப்பி உள்ளது.
கடந்த சனிக்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்தார். இவரை ஓ பன்னீர்செல்வம் சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சந்திக்கவில்லை.
அமித் ஷாவை ஏன் எடப்பாடி சந்திக்கவில்லை? எதுவும் மோதலா? கருத்து வேறுபாடா என்ற கேள்விகள் எழும்ப தொடங்கின. இது குறித்து கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் மேலும் விவாதங்களை தீவிரமாக்கியது.

அமித் ஷா
அமித் ஷா குறித்த கேள்விக்கு எடப்பாடி அளித்த பதிலில், அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.

சந்திக்கவில்லை
அவரின் இந்த பேச்சு காரணமாக எங்கே பாஜக - அதிமுக கூட்டணி உடைகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக எடப்பாடிக்கு நெருக்கமான வட்டாரத்திடம் விசாரித்தோம். அவர்கள் அதிமுகவிற்குள் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை புட்டு புட்டு வைத்தனர். அதன்படி, பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதாவது பாஜகவை உதறி தள்ளுவதற்கு எடப்பாடி ரெடியாகிவிட்டார்.

பாஜக அதிமுக
ஆனால், எடப்பாடிக்கு ஆகப்பெரிய பலமாகவும், அவர் எடுக்கும் அனைத்து அரசியல் முடிவுகளுக்கும் ஒத்துழைப்பு தந்துவருபவர்களுமான முன்னாள் அமைச்சர்கள் 2 பேர், பாஜக கூட்டணியை உதறவேண்டும் என்கிற எடப்பாடியின் திட்டத்துக்கு எதிராக இருக்கிறார்களாம். இது குறித்து அந்த இரண்டு பேரும் எடப்பாடியிடம், ''பாஜகவுடன் கூட்டணிங்கிறது வெறும் வெற்றி தோல்வியை மட்டுமே கணக்கிடுவது
கிடையாது. அதையும் தாண்டி நிறைய விசயங்கள் இருக்கிறது. மீண்டும் மோடிதான் பிரதமராவார் என்று பல தரப்பிலும் சொல்லப்படுகிறது.

கூட்டணி
இந்த சூழலில், மத்திய அரசு நமக்கான அரசாக இருப்பதுதானே சரியாக இருக்கும்? பாஜக ஆட்சி தான் மீண்டும் வரப்போகிறது என்கிற சூழலில் பாஜகவை பகைத்துக் கொள்வதோ, கூட்டணியை உதறுவதோ ஆரோக்கியமானதாக இல்லை, என்று சொல்லியுள்ளனர். அதற்கு எடப்பாடி, ''பாஜகவுடன் கூட்டணி இல்லைன்னா ரெய்டு வந்துடும்னு பயபடுறீங்க? கூட்டணியில் தான் இதுவரை இருந்தோம், நமக்கு எதிராக ரெய்டு நடத்தாமலா இருந்தார்கள்? அரசியலை அரசியலாக எதிர்கொள்ள வேண்டும். திமுக கூட்டணியில் இல்லாமல் தைரியமாகத்தானே இருக்கிறது.

ஆலோசனை
அவர்கள் மீது வழக்கே இல்லையா? அவர்கள் இருக்கிறார்களே பிரச்சனை இன்றி.. அதிமுக ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என பாஜக சொல்வது நல்ல எண்ணத்தில் இல்லை. அதிமுக பிளவுப்படாமல் இருந்தால் தான் அதிமுகவின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய முடியும் என்றும், நம் வாக்குகள் இல்லாமல் பாஜகவால் ஒரு எம்.பி.சீட்டில் கூட ஜெயிக்க முடியாது என்பதும் மோடிக்கும் அமித்சாவுக்கும் தெரியும்.

பயமா?
அதனால்தான் நல்லப்பிள்ளை மாதிரி நம்மை எல்லாம் ஒன்றாக்க முயற்சிக்கிறது பாஜக. ஆக, பாஜகவின் இந்த முகமூடியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்'' என்று இரண்டு மாஜிக்களின் கருத்துக்களை மறுத்துப் பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள். அதாவது எடப்பாடி பழனிசாமி கிட்டதட்ட அதிரடி முடிவை எடுக்க தயாராகிவிட்டார். அவரை தடுக்க கூடிய பலம் வாய்ந்த 2 மாஜிக்கள் மூலமே அவரை தடுக்க முடியவில்லை என்கிறார்கள், அதிமுக வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications