"சம்பவம்" நடக்குது.. பாஜகவே எதிர்பார்க்கல.. சோனியாவின் "தில்" முடிவு.. யார் அந்த 4 பேர்.. சபாஷ் காங்
காங்கிரஸ் கட்சிக்கு 4 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் தலைவர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், சோனியாக காந்தி மிக முக்கிய முடிவு ஒன்றை எடுக்க போகிறாராம்.. இதைக் கேள்விப்பட்டு, அக்கட்சி தொண்டர்கள் குஷியில் உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் புதிய தலைவருடன், பிரியங்கா, சிதம்பரம், முகுல் வாஸ்னிக், சச்சின் பைலட் ஆகியோர் செயல் தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
ஒருவழியாக, 3 வருடங்கள் கழித்து காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் வரப்போகிறார்.. அதற்கான தலைவர் பதவி தேர்தல் வரும் 17ம் தேதி நடக்கிறது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மல்லிகார்ஜுன கார்கேவும், நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரும் நேரடியாக மோத உள்ளனர்..
இதற்கான வாக்குசேகரிப்பில் இருவருமே ஈடுபட்டு வருகின்றனர்.. கடந்த வாரம்கூட, சசிதரூர் சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு வாக்கு சேகரிக்க வந்திருந்தார்..

திருநாவுக்கரசர்
அவருக்கு வாக்கு சேகரிப்பதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.. ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் என யாரும் பெரிய அளவில் இதில் கலந்து கொள்ளவில்லை என்றார்கள். ஆனால், மல்லிகார்ஜூன கார்கே சென்னை வந்தபோது, கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விஜய்வசந்த் எம்பி, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன், என இப்ப சீனியர் தலைவர்கள் திரண்டு வந்து அவரை வரவேற்றிருந்தனர்..

PLAN A
இந்த தலைமை தேர்தலை பொறுத்தவரை, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர்கள், செயலர்கள், மாநில தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் என, 9,000க்கும் மேற்பட்டோர் ஓட்டு அளிக்க உள்ளனர்... மொத்தம் 7,000 ஓட்டுக்கள் பதிவாகும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.. இதில், கார்கேவுக்கு, 5,000 வாக்குகளும், சசிதரூருக்கு 2,000 ஓட்டுக்களும் கிடைக்கும் என்றும் உத்தேசமாக சொல்கிறார்கள்.. இதில், தமிழகத்தில் மட்டும் 710 ஓட்டுக்கள் உள்ளன. அதில் 200 ஓட்டுக்கள் வரை சசிதரூருக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாம்..

PLAN B
சோனியா, ராகுல் காந்தியின் மறைமுக ஆதரவு பெற்றுள்ள கார்கே வெற்றி பெறுவார் என்று கட்சி வட்டாரத்தில் நம்பப்படுகிறது... 19ம் தேதி இதற்கான வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. வரும் 19ம் தேதி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், புதிய தலைவர் பொறுப்பேற்க உள்ளார்... இதையடுத்து, சோனியா ஒரு முக்கிய முடிவை எடுக்க போவதாக சொல்கிறார்கள்.. அதன்படி, நாடு முழுதும் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மண்டலங்களாக பிரித்து, அவைகளுக்கு தலா ஒரு செயல் தலைவரை நியமிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

யார் 4 பேர்?
அதன் அடிப்படையில், கிழக்கு மண்டலத்திற்கு பிரியங்கா, மேற்கு மண்டலத்திற்கு சச்சின் பைலட், வடக்கு மண்டலத்துக்கு முகுல் வாஸ்னிக், தெற்கு மண்டலத்திற்கு ப.சிதம்பரம் ஆகியோரை நியமிக்க வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு தகவல் வட்டமடிக்க துவங்கி உள்ளது.. இந்த 4 பேரை தவிர்த்து, வேறு சில மூத்த தலைவர்களும் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம்.. ஆனால், புதியதாக நியமிக்கப்படும் செயல் தலைவர்கள் 4 பேரும், கார்கே தலைமையில் கட்சி பணிகளை, மாநிலங்கள் வாரியாக பிரித்து பணியாற்றுவார்கள் என்றும் காங்கிரஸ் கட்சி தரப்பில் சொல்லப்படுகிறது.

வாவ் பிளான்
இந்த தகவல் உண்மையாக இருக்கும்பட்சத்தில், காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தக்கூடும் என்றே நம்பப்டுகிறது.. காரணம், விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ளது.. இதற்காக பாஜக, கடந்த 8 மாதங்களுக்கு முன்பேயே தேர்தல் பணிகளை மறைமுகமாக கையில் எடுத்து விட்டது.. மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சியமைக்க, ஏகப்பட்ட வியூகங்களை கையில் எடுத்து வருகிறது.. சில முக்கிய மாநிலங்களில் வலுவான இடத்தில் பாஜக இருந்து வந்த நிலையில், அந்த வாய்ப்புகள் சமீபகாலமாக நழுவி கொண்டிருக்கிறது.. காங்கிரஸை பாஜக ஓவர்டேக் செய்துவந்தால், பாஜகவை ஆம் ஆத்மி ஓவர்டேக் செய்ய துவங்கிவிட்டது.

சூப்பர் ப்ளான்
அதனால், பாஜகவின் தேர்தல் முன்னெடுப்பும், தீவிரமாக விரிவடைந்து வருகிறது.. ஆனால், காங்கிரஸோ, தன்னுடைய அடிப்படை விஷயத்தையே இதுவரை சரி செய்யாமல் இருந்ததால், அக்கட்சி தொண்டர்கள் சோர்ந்து போய் இருந்தனர்.. இப்போது தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதையொட்டி நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்க உள்ள சோனியாவின் முடிவு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. மேலும், 4 மண்டலங்களுக்கும், மேற்கண்ட 4 செயல் தலைவர்கள் அறிவிக்கப்பட்டால், இதுவே காங்கிரஸை எழுச்சி பெற செய்யும் என்றும் நம்பப்படுகிறது..

4 சீனியர்கள்
கடந்த 2017-லேயே காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவராக பிரியங்காவை நியமிக்க போவதாக ஒரு தகவல் வெளியானது.. இந்த தகவலை அனைவரும் வரவேற்கவே செய்தனர்.. ஆனால், உபி மாநிலத்துக்கு மட்டும் பிரியங்காவுக்கு பொறுப்பை கொடுத்து நியமித்து விட்டது, தொண்டர்களுக்கு அதிருப்தியையே அப்போது தந்ததாக செய்திகளும் வெளியாகின.. எனினும், நியமிக்கப்போகும் 4 பேருமே சீனியர்கள் என்பதால், கட்சி நிமிர்ந்து விடும் என்றே தெரிகிறது.. ஆக, காங்கிரஸ் கட்சியின் பலவீனத்தில்தான், பாஜகவின் ஒவ்வொரு வளர்ச்சியும் அடங்கி உள்ளது என்பதை, மேலிடம் இப்போதுதான் உணர தொடங்கி உள்ளதாக தெரிகிறது..!!!
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
சிவகார்த்திகேயனுக்கு சனி பிடித்துவிட்டது.. நாஞ்சில் சம்பத் சர்ச்சை பேச்சு.. மீண்டும் சிக்கிய தவெக











Click it and Unblock the Notifications