டயர்ட் ஆகிட்டாங்களோ? தென் மாவட்டங்களில் பிசிறு தட்டிய அதிமுக! என்ன நடக்குது? எடப்பாடிக்கு தெரியுமா?
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க தொடக்கத்தில் இருந்த ஆர்வம் அதிமுகவிற்கு தென் மண்டலத்தில் இல்லை என்று கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் மொத்தம் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவு அனைத்தும் முடிந்து வரும் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தல் தொடர்பாக இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் அதிமுகவிற்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றே பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுகவே வெல்லும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக நேற்று இரவு வெளியான லோக்போல் நடத்திய சர்வேயில் தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களில் எல்லா இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. அதிமுக வசம் இருந்த ஒரு தொகுதியான தேனியும் திமுக பக்கம் செல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது
சுணக்கம்: இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிமுகவினர் சுணக்கம் காட்ட தொடங்கி உள்ளனர். பெரும்பாலான இடங்களில் வீடு வீடாக அவர்கள் பிரச்சாரம் செய்வது இல்லை.
வீடுகளுக்கு சென்று வாக்கு கேட்பது இல்லை என்று புகார் உள்ளது. எடப்பாடி பழனிசாமி வருகிறார். கூட்டம் நடத்துகிறார். அவர் இப்போது சென்னை போய்விட்டார் . அவர் போன பின் ஓரிரு நாட்கள் நிர்வாகிகள் உற்சாகமாக இருக்கிறார்கள். அதற்கு பின் அவர்கள் எந்த விதமான பணிகளையும் செய்வது இல்லை.
அப்படியே அமைதியாகிவிடுகின்றனர். களப்பணிகளை செய்ய ஆட்களே இல்லை. ஜாதி ரீதியாக ஆட்கள் வேறு பிரிந்து கிடக்கின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் அதிமுக பிரச்சாரம் லேசாக பிசிறு தட்டி உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து ஒன்இந்தியா யூ டியூப் சேனலில் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியும் இதை உறுதி செய்துள்ளார். அதில், எடப்பாடிக்கு 20 சதவிகிதம் வாக்குகள் வரும். அதுவும் கூட அதிமுகவிற்கு வரும் வாக்குகள். மற்றபடி வேறு வாக்குகள் வராது. அதைவிட அவர் குறைவாக வாக்குகள் பெறலாம். அவரால் ஒரு இடங்களில் கூட வெல்ல முடியாது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பழைய பலத்தோடு இருக்காது. தேவகவுடா கட்சி போல அந்த கட்சி மாறிவிடும். வன்னிய தலைவர்களை வைத்து சுருங்கி வேளாள கவுண்டர் + வன்னியர் கட்சி என்று சுருங்கிவிடும்., மொத்தமாக சரிந்துவிடும். எடப்பாடி பழனிச்சாமி சாதி அடிப்படையில் சென்றுவிட்டார். அது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்றுவிட்டார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா இதை செய்து இருக்க மாட்டார்கள். பாஜக வாக்குகள் அதிமுகவிற்கு சென்றுள்ளன. எடப்பாடி பழனிசாமி இதை உணரவில்லை. அதிமுக வாக்கு நாம் தமிழருக்கும் செல்கிறது. பறையர்கள், வண்ணார் , குயவர்கள், போன்றவர்கள் நாம் தமிழருக்கு செல்கின்றனர். நாயுடு, பிற மொழியாளர்கள், பிராமணர்கள் அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு செல்கின்றனர். தமிழ் தேசியம், இந்துத்துவா இரண்டும் அதிமுகவை அடிக்கிறது.
இந்துத்துவா இந்த முறை வலிமையாக இருக்கிறது. இது அதிமுகவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதிமுக இதனால் கண்டிப்பாக பெரிய அளவில் ஆதிக்கப்படும். பன்னீர்செல்வத்தை நீங்கியதால் முக்குலதோர் வாக்குகள் அதிமுகவிற்கு எதிராக செல்கின்றன. வெறும் வெள்ளாள கவுண்டர் கட்சியாக எடப்பாடிக்கு எதிராக அதிமுக மாறி உள்ளது.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக்












Click it and Unblock the Notifications