பிளானே வேறயாமே! அதிமுக - பாஜக கூட்டணி உடையணும்.. அடித்து பேசும் திருமா.. இப்படி ஒரு காரணமா?

விசிக திருமாவளவனின் இந்த பேச்சு திமுகவில் சிலரை அப்செட் ஆக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா திடீரென்று நேற்று பேசினார். அவரின் இந்த பேச்சிற்கு பின் பல்வேறு முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பாமக - திமுக இணைந்தால் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம் , அதேபோல் பாஜக இருக்கும் கூட்டணியில் இணைய மாட்டோம் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்தார். சென்னையில் பாஜகவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது திருமா இதை தெரிவித்தார்.

அதில், பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். அது திமுக கூட்டணியாக இருந்தாலும் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம்.

கூட்டணி

கூட்டணி

அவர்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் அதில் இருக்க மாட்டோம். இந்தியாவில் யாருக்காவது இப்படி சொல்ல தைரியம் இருக்கிறதா?, தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த யுத்தம் விடுதலை சிறுத்தைகளுக்கும் பாஜகவிற்கு இடையிலான யுத்தம். நான் கருத்தியல் ரீதியாக சவால் விடுகிறேன். கருத்தியல் ரீதியாக மோதிக்கொள்ள தயாரா? கருத்தியல் ரீதியாக சண்டை போட தயாரா? ஓட ஓட விரட்டி அடிப்போம், என்று கூறினார். திமுக - பாமக நெருக்கம் ஆகி வருவதாக செய்திகள் வந்த நிலையில்தான் திருமா இப்படி கூறினார். இந்த நிலையில்தான் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விசிக எம்பி திருமாவளவன் பேசியதற்கு எதிர் வினையாக அன்புமணி இப்படி பேசி உள்ளார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு வழக்கில் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். கூட்டணியில் இல்லாத ஒரு தலைவர், வேறு கூட்டணியில் உள்ள கட்சியில் நடக்கும் விவாகரத்திற்கு வாழ்த்து சொன்ன சம்பவம் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.எங்கே எடப்பாடி பழனிசாமியுடன் திருமா நெருக்கம் ஆகிறாரோ, திமுக - விசிக கூட்டணி உடைகிறதோ என்ற கேள்விகள் எழ தொடங்கின. முத்தாய்ப்பாக நேற்று பாஜக அதிமுக கூட்டணி குறித்து திருமா வெளிப்படையாக பேச தொடங்கினார்.அதில், திமுக முதுகில் ஏறி சவாரி செய்து வெற்றிபெற பாஜக முயற்சி செய்கிறது. அதிமுக இல்லாமல் தனித்து போட்டியிட பாஜகவிற்கு தைரியம் இல்லை. பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி

கூட்டணி

அவரின் இந்த பேச்சால்... எங்கே அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தால், அந்த கூட்டணியில் இணையும் திட்டத்தில் திருமா இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான கேள்விகளை திருமாவுடன் நெருக்கமாக இருக்கும் சில நிர்வாகிகளிடம் வைத்தோம்.அவர்கள் நம்மிடம் தெரிவித்த 4 விஷயங்கள் பின்வருமாறு... விஷயம் 1 - அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி வென்றதை திருமா வாழ்த்த காரணம் ஓபிஎஸ்தான். ஓபிஎஸ் பாஜகவுடன் இருப்பதால், அவரை திருமா விரும்பவில்லை. அதனால் எடப்பாடியை வாழ்த்தினார். பாஜகவை எதிர்க்கும் மனநிலையில் இருந்து வந்த வாழ்த்து அது. மற்றபடி கூட்டணிக்கான அழைப்பு கிடையாது.

பாஜக

பாஜக

விஷயம் 2 - பாமக, பாஜக வந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று திருமா சொன்னது, அவரின் கொள்கை நிலைப்பாட்டை காட்டுகிறது. அதே சமயம் சில தலித் தொடர்பான விவகாரங்களில் திமுக - விசிக இடையே கொஞ்சம் கருத்து வேறுபாடு உள்ளது. பாமகவும் வந்தால் இது மோதலாக மாறும் என்பதால் திருமா இதை எச்சரிக்கை போல தெரிவித்துள்ளார் என்கிறார்கள். விஷயம் 3 - திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் எண்ணம் விசிகவிற்கு கிடையவே கிடையாது ஆனால் அதிமுகவுடன் நெருக்கமாக இருப்பது போல காட்டிக்கொண்டால் திமுக கூட்டணியில் நமக்கு முக்கியத்துவம் கிடைக்கும். அதிக இடங்களை பெறலாம் என்றும் விசிக நினைக்கிறதாம். கடைசியாக விஷயம் 4 - பாஜக - அதிமுக கூட்டணி உடைந்தால் பாஜக தனித்து விடப்படும். தனது கொள்கைக்கு கிடைத்த நற்செய்தியாக இது இருக்கும் என்பதால் திருமா இப்படி பேச தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+