"கே.டி. ராகவன்" வேற ரூட்டில் காலி.. பாஜக அழிவதற்கு "இவர்" மட்டுமே போதும்.. மனுஷ்யபுத்திரன் ஒரே போடு
திமுகவின் மனுஷ்யபுத்திரன்அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளார்
சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவை காலி செய்ய, வேறு யாருமே தேவையில்லை.. அண்ணாமலை மட்டுமே போதும் என்று திமுகவின் மனுஷ்யபுத்திரன் ஓபனாகவே விமர்சித்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டபோது, அவமரியாதையாக பேசி அதிர்ச்சியை கூட்டி இருந்தார்.
"மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி சுத்தி சுத்தி வரீங்களே" என்று மிக மோசமான சொற்களால் வர்ணித்ததுடன், "உங்களை சாப்பிட சொல்லிட்டுத்தானே போனேன்" என்று ஊடகத்தினரின் சுயமரியாதையை சுண்டிப் பார்க்கும் வகையில் மேலும் மேலும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்.
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு வக்கின்றி, நாய்.. பேய்.. என்று ஆளுந்தரப்பையும் விமர்சித்திருந்தார்.. இந்நிலையில், அண்ணாமலையின் இந்த செயல்பாடு குறித்து மூத்த பத்திரிகையாளரும், திமுக ஐ.டி-விங் ஆலோசகரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரன், நம் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் நம்மிடம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.. அதன் சுருக்கம்தான் இது:

கலங்கரை விளக்கம்
"நான் மிக நீண்ட காலமாகவே தமிழக அரசியலை பார்த்து வருகிறேன்.. இதே பாஜகவில் தமிழிசை போன்ற தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.. இல.கணேசன் போன்றோரெல்லாம் கடுமையான மாற்றுக்கருத்துக்களை சொல்வார்கள்.. ஆனால், மாற்று கருத்துக்கள் என்பது வேறு, அவதூறுகள் என்பது வேறு.. அந்த அவதூறுகளின் மொத்த உருவமாக, அண்ணாமலை இங்கே வந்திருக்கிறார்.. அவரது ஹஸ்டரி நமக்கு தெரியும்..

கப்பல்
"பாஜக இத்தனை காலம், இருட்டில் கப்பல் தள்ளாடி கொண்டிருந்தது.. இப்போதுதான் கலங்கரை விளக்கம் தெரிகிறது.. வெளிச்சம் தெரிகிறது பாஜக" என்கிறார்.. அப்படியென்றால், இவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், இதற்கு முன்பு இருந்த பாஜக தலைவர்கள் தமிழிசை எதுவுமே செய்யவில்லை என்கிறாரா? எல்லாரும் வேஸ்ட் என்கிறார்.. தான் மட்டுமே பாஜகவுக்கு பெரிய கலங்கரை விளக்கமாக வெளிச்சம் காட்டிட்டு இருக்கேன் என்கிறார்.. எப்படி இப்படி சூடு சொரணையே இல்லாமல், மற்ற பாஜக தலைவர்கள் சகித்து கொண்டிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை..

காலி நாராயணன்
உண்மையிலேயே அரசியலுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஒருவரை இங்கே கொண்டு வந்து பிளான் செய்கிறார்கள்.. நட்டு வைக்கிறார்கள்.. அந்த நபர் ஒரு பொலிட்டிக்கல் எரிச்சல்.. தமிழ் காக்கும் போராட்டம்தான் இதுக்கு சிறந்த உதாரணம்.. பாஜக என்றாலே அண்ணாமலை பெயர்தான் ஊடகங்களில் வர வேண்டும் என்று நினைக்கிறார்.. ஏற்கனவே ராகவனை காலி செய்தார், ஆனால் அவரை வேறு வழியில் காலி செய்தார்.. இப்போது திருப்பதி நாராயணன் மனசுக்குள்ளேயே குமுறிட்டு உட்கார்ந்திருக்கிறார்... தாம் முடக்கப்பட்டுவிட்டோமே என்று வெளியில் சொல்ல முடியாமல் நாராயணன் உள்ளார்.. ஊடகங்களில் இவர்கள் எல்லாம் அன்று மேலே வந்தவர்கள்.. ஆனால், இன்று இதையும் காலி செய்துவிட்டார் அண்ணாமலை..

கமலாலய நெட்வொர்க்
எச்.ராஜா போன்றோர் ஏற்கனவே மீடியாவை அவமானப்படுத்தியவர்தான்.. குரங்கு என்று இவர் திட்டுகிறார்.. மீடியாக்களையும் நான் குறை சொல்ல விரும்பவில்லை.. ஏன் என்றால், பெரும்பாலான டிவிக்கள் பாஜகவின் கட்டுப்பாட்டில் இன்று வந்துவிட்டன.. யாரை பேச அழைக்க வேண்டும், எந்த செய்தியை புரமோட் செய்ய வேண்டும், எந்த செய்தியை மறைக்கணும் என்று கமலாலயத்தில் இருந்து உத்தரவு வருகிறது.. மிகப்பெரிய நெட்வொர்க் நடக்குது.. பெரும்பாலான செய்தி ஆசிரியர்கள், டிவி முதலாளிகள், பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு விட்டனர்..

ஷூ பாலிஷ்
இதை மீறி பணிபுரியக்கூடியவர்கள் யாராவது கேள்விகேட்டால், அவர்களது வேலை போய்விடும்.. அதையும் மீறி துணிச்சலாக செயல்படக்கூடியவர்கள்தான் பத்திரிகையாளன்... இந்த அராஜகத்தை எதிர்த்து பத்திரிகையாளர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.. இல்லாவிட்டால், ஊடகங்களை தங்கள் காலில் உள்ள ஷூ போல பயன்படுத்துவார்கள் இந்த பாஜகவினர்.. ஷூக்கு பாலிஷ் போடுபவர்கள் போல பயன்படுத்துவார்கள்.. அதனால், ஊடகங்கள் விழித்து கொள்ள வேண்டிய நேரம் இது.. தன்னுடைய சுயமரியாதையை ஊடகங்கள் காப்பாற்றி கொள்ள வேண்டிய நேரமிது..

எமர்ஜென்ஸி
சில ஊடகவியலாளர்கள் அன்பளிப்புகளை பெறுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.. அதை பற்றி எனக்கு தெரியாது.. ஆனால், ஊடக சுதந்திரன்மீது இவ்வளவு வெளிப்படையான தாக்குதலும், அவமானமும் இதற்கு முன்பு எப்போதுமே இங்கு நடந்தது கிடையாது.. எமர்ஜென்சி காலக்கட்டத்தைவிட இன்றைக்கு மோசமாகிவிட்டது.. திமுக அரசுக்கு நெருக்கடி தரலாம் என்று அண்ணாமலை போன்றோரை வைத்து கொண்டு பாஜக நினைக்கிறது.. இதுக்கெல்லாம், தக்க பதிலடியை திமுக தரும்... திமுகவை அவமானப்படுத்த நினைத்தால், அதில் பாஜகவின் மானம்தான் போகிறது.. பாஜகவை நிரந்தரமாக தமிழ்நாட்டில் முடிவு கட்டுவதற்கு, அண்ணாமலையின் அரசியல் மட்டுமே போதும்" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications