சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2.. 2021.. 2022.. தலைக்கு மேல கத்தி.. சுற்றிலும் அம்பு.. திமிறி எழும் எடப்பாடி பழனிசாமி.. பாஜக செக்?

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி உள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: வரும் 10-ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ள நிலையில், அதற்கான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.. அத்துடன், ஓபிஎஸ் தரப்பு என்ன செய்யும்? பாஜக அடுத்து என்ன செய்ய போகிறது என்கின்ற கேள்விகளும் வட்டமடிக்க துவங்கி உள்ளன.

பாஜகவை பொறுத்தவரை, ஒருங்கிணைந்த அதிமுகவையே விரும்புகிறது.. ஒற்றை தலைமை விவகாரத்தில் இதுவரை தலையிடாத பாஜக மேலிடம், தற்போது மறைமுகமாக அழுத்தம் தந்து வருவதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் பிரிந்தவர்கள் இணைய வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளதாக தெரிகிறது.. வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமி பிடிவாதம் காட்டி வருகிறார்.

பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுகிறாரா?- பரவும் தகவல்.. ராம சீனிவாசன் பரபர விளக்கம்! பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுகிறாரா?- பரவும் தகவல்.. ராம சீனிவாசன் பரபர விளக்கம்!

நாகராஜன்

நாகராஜன்

இந்த பிடிவாதம் ஓபிஎஸ் தரப்பை கடுப்பாக்கி வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், பாஜக துணை தலைவரான கரு.நாகராஜன் தந்த ஒரு பேட்டியில், திடீரென அதிமுக விவகாரம் குறித்து பேசியுள்ளார்.. 'தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் திமுகவை தோற்கடிக்க அனைத்து சக்திகளும் ஒன்று இணைய வேண்டும். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குழப்பம் முழுக்க முழுக்க அவர்களது உட்கட்சி பிரச்சனை. அதே நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தமிழக மக்கள் வரவேற்பார்கள்" என்று கூறியுள்ளார்.

ரியாக்‌ஷன்

ரியாக்‌ஷன்

இதுவரை பாஜக தரப்பில் யாருமே அதிமுக விவகாரம் குறித்து கருத்து கூறாத நிலையில், இவர்கள் இணைய வேண்டும் என்று வெளிப்படையாகவே கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது, மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது.. தொடர்ந்து பாஜகவின் கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி நிராகரிக்கும்பட்சத்தில், பாஜக மேலிடம் என்ன செய்யும்? எந்தமாதிரியான ரியாக்‌ஷன்கள் வெளிப்படும்? அதை எடப்பாடி பழனிசாமி எப்படி எதிர்கொள்வார்? நடக்க போகும் மா.செ. கூட்டத்தில் பொதுச்செயலாளர் தேர்வு குறித்த ஆலோசனையும் நடத்தப்படுமா? என்றெல்லாம் பல கேள்விகள் நம்முன் எழுகின்றன.

 டபுள் ரோல்

டபுள் ரோல்

இதை சில அரசியல் ஆலோசகர்களிடமும் முன்வைத்தோம்.. அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது: "அதிமுக இணைய வேண்டிய நிர்ப்பந்தத்தை பாஜக ஏற்படுத்தி வருகிறது.. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை ஏற்படாமல் போனால், இரட்டை இலை சின்னம் கிடைக்க செய்யாமலும் செய்ய வாய்ப்புள்ளது.. அதிமுகவையே அபகரிக்க வேண்டும் என்று ஆசைப்படும் எடப்பாடிக்கு இது முதல் சிக்கலாக எழக்கூடும்.. அதேபோல, கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் தேர்தல் இவைகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் தந்துவிட்டால் அதுவும் எடப்பாடிக்கு சிக்கல்தான்.

 இடியாப்ப சிக்கல்

இடியாப்ப சிக்கல்

காரணம், 2021 கடைசியில் நடந்த இந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள் இவர்கள் 2 பேர்தான்.. அதற்கான ஆவணங்களை அனுப்பி வைத்ததும் இவர்களேதான்.. அதுமட்டுமல்ல, 2022-ல் நடத்தப்பட்ட பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் கிடைக்காது.. காரணம், சுப்ரீம்கோர்ட்டில் அந்த வழக்கு உள்ளது.. எனவே, 2021-பொதுக்குழுவை ஆணையம் பரிசீலனை செய்தால், எடப்பாடிக்கு சிக்கல் வரும்.. அப்போது நான் இணை ஒருங்கிணைப்பாளர் கிடையாது எடப்பாடி சொல்ல நேர்ந்தால், அதிமுக இரண்டாக பிரிய நேரிடும்.. அந்தவகையில், எடப்பாடி என்ன செய்ய போகிறார் என்பதும் கேள்விக்குறியே... சுருக்கமாக சொல்லப்போனால், 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் நடந்த தேர்தலில் எது செல்லுபடியாகும் என்பதே ஓபிஎஸ + எடப்பாடி 2 பேரின் எதிர்பார்ப்பு.

 ஸ்ட்ராங் டீம்

ஸ்ட்ராங் டீம்

10ம் தேதி நடக்க போகும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எதை பற்றி பேச போகிறார்கள் என்று தெரியவில்லை.. ஆனால், பொதுச்செயலாளர் தேர்தலை தற்சமயம் இவர்களால் நடத்த முடியாது.. சுப்ரீம்கோர்ட்டில் எழுதியே தந்துவிட்ட நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வந்தால்தான், தேர்தலை நடத்த முடியும்.. வேண்டுமானால், தென்மாவட்டங்களில் பலம் சேர்ப்பது, கொங்குவில் இழந்த சரிவை மீட்டெடுப்பது, ஸ்ட்ராங்கான வழக்கறிஞர்கள் டீமை நியமிப்பது போன்ற பல விஷயங்கள் குறித்து எடப்பாடி டீம் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.

 கொங்கு பெல்ட்

கொங்கு பெல்ட்

ஆனால், ஓபிஎஸ்ஸை ஒதுக்கினால், அது எடப்பாடி பழனிசாமிக்குதான் நஷ்டம்.. எப்படி இருந்தாலும் ஓபிஎஸ், அதிமுக வாக்கைதான் பிரிக்க போகிறார்.. அந்தவகையில், பாஜகவையும் பகைத்து கொள்ள முடியாது, ஓபிஎஸ்ஸையும் தவிர்த்துவிட முடியாது.. இன்னொன்றையும் எடப்பாடி பழனிசாமி யோசிக்க வேண்டும்.. கடந்த முறை அதிமுக வெற்றிக்கு உதவியது பாமகதான்.. அதுவும் கொங்கு பெல்ட்டில் பாமகவுக்கென்று தனி வாக்கு வங்கி உள்ளது.. கொங்குவில் உள்ளதெல்லாம் எடப்பாடிக்கான செல்வாக்கு என்று சொல்லிவிட முடியாது.. பாமகவை இந்த முறை தனித்துவிட்டால், அது எடப்பாடிக்கே நஷ்டமாகும்.. இதெல்லாம் கணக்கு செய்து எடப்பாடி பழனிசாமி, என்ன முடிவு எடுக்க போகிறார் என்று தெரியவில்லை.

சாஃப்ட்கார்னர்

சாஃப்ட்கார்னர்

அதேபோல, ஓபிஎஸ் டெல்லி செல்வதாக 2 நாளுக்கு முன்பே வைத்திலிங்கம் சொல்லி இருந்த நிலையில், இதுவரை ஓபிஎஸ் பயணம் மேற்கொள்ளவில்லை.. ஒருவேளை, ஓபிஎஸ் வருகையை மேலிடம் தற்சமயம் விரும்பவில்லையா? அல்லது இருவரும் சேர்ந்துதான் தங்களை வந்து சந்திக்க வேண்டும் என்று கறார் காட்டுகிறதா? அல்லது ஓபிஎஸ்ஸே டெல்லி பயணத்தை தள்ளிப்போட்டுள்ளாரா? என்று தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும், ஓபிஎஸ் மீது பாஜக தலைவர்களுக்கு எந்த காலத்திலும் வருத்தம் இருந்ததில்லை என்பதால், எடப்பாடி பழனிசாமியின் அரசியல்தான் அனைவராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது" என்கின்றனர்.

English summary
Are BJP leaders unhappy with O Panneerselvam and Why is Edappadi Palaniswami calling a meeting of district secretaries
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X