கலர் மாறும் டெல்லி.. ராகுலை சந்திக்க தொடங்கிய ஐஏஎஸ் அதிகாரிகள்.. சீக்ரெட்டாக நடக்கும் திருப்பம்
சென்னை; ராகுல் காந்தியை அதிகாரிகள் சந்திக்க ஆரம்பித்துவிட்டனர். டெல்லியில் அதிகாரிகள் ராகுல் காந்தியை சந்திக்க தொடங்கிவிட்டனர், என்று டெல்லி அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தல் கிளைமேக்ஸை நெருங்கி உள்ளது. சனிக்கிழமை மாலை வர உள்ள எக்சிட் போல முடிவுகளிலேயே பெரும்பாலும் எந்த கட்சி வெல்லும் என்று தெரிந்துவிடும். இன்னும் சொல்லப்போனால் பல ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஏற்கனவே தேர்தல் முடிவுகள் எப்படி செல்லும் என்று தெரிந்து இருக்கும்.

தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. இறுதிக்கட்ட வாக்குபதிவிற்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன.
தற்போதைய மக்களவை தேர்தலில் ஏழாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் நாளில்.. அதாவது ஜூன் 1-ம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டணி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்திய கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் கூடுவார்கள் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நம்மிடம் பேசிய டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற போகிறது என்று எல்லோருக்கும் தெரியும். நிதானத்தில் இருக்கும் எல்லோருக்கும் தெரியும். கண்டிப்பாக காங்கிரஸ் ஆட்சி அமையும்.
ராகுல் காந்தியை அதிகாரிகள் சந்திக்க ஆரம்பித்துவிட்டனர். டெல்லியில் அதிகாரிகள் ராகுல் காந்தியை சந்திக்க தொடங்கிவிட்டனர். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியும். அங்கே காட்சிகள் மாறுகின்றன. அவர்களுக்கு முடிவுகள் முன்கூட்டியே தெரியும். அப்படிதான் அவர்களுக்கு தெரிகிறது. ஆட்சி மாற போகிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டனர்.
தங்களை காப்பாற்றிக்கொள்ள அதிகாரிகள் ரெடியாகி உள்ளனர். அவர்கள் ராகுலை சந்தித்து வருகின்றனர். அதை கேமரா முன் சொல்ல முடியாது. ஆட்சி மாறுகிறது என்பதை முடிவே செய்துவிட்டனர்.
இதற்கு முன் இப்படி எல்லாம் நடந்தது இல்லை. ராகுலை பார்க்கிறார். கார்கேவை பார்க்கிறார். கடந்த 5 வருடம் முன் இப்படி நடந்ததே இல்லை. அந்த அளவிற்கு நிலைமை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறி உள்ளது, என்று கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
நெருங்கும் கிளைமேக்ஸ்: நாடு முழுக்க 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் மூன்று கட்டத் தேர்தலில் முறையே 66.1, 66.7 மற்றும் 61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலை விட இதுவரை வாக்குப்பதிவு குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் 4ம் கட்ட தேர்தல் 9 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் நடந்தது. ஆந்திரப் பிரதேசத்தில் 25 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 67.25 சதவிகித வாக்குகள் பதிவானது.
கடந்த வாரம் 6 மாநிலங்களில் 5ம் கட்ட தேர்தல் நடந்தது. இதில் 60.48% வாக்குகள் பதிவாகி உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் நடந்த 6ம் கட்ட தேர்தலில் 61.75 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.. 7ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன.












Click it and Unblock the Notifications