சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சல்லி சல்லியா நொறுங்கும் கணக்குகள்.. திமிறி எழும் எடப்பாடி பழனிசாமி.. ஓபிஎஸ் கைக்கு போகிறதா அதிமுக?

எடப்பாடி பழனிசாமிக்கான பாதகமான சூழல்கள் அதிமுகவில் ஏற்பட வாய்ப்புள்ளதா

Google Oneindia Tamil News

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் சறுக்கல்கள் ஆரம்பமாகி, ஓபிஎஸ்ஸுக்கான எழுச்சி துவங்கி விட்டதாகவே அவரது ஆதரவாளர்கள் கருதி வருகிறார்கள்.. நீதிமன்ற முடிவே இறுதியான தீர்ப்பாக இருந்தபோதும், வழக்கு விசாரணைகளையும் தாண்டி, கட்சிக்குள்ளேயே சலசலப்புகள் வெடித்து வருகின்றன.

அதிமுக யார் கையில் போக போகிறது? நடந்து முடிந்த பொதுக்குழு செல்லுபடியாகுமா? தீர்மானங்கள் ரத்தாகிவிடுமா? அல்லது தன்னுடைய ஆளுமையை இன்னொருமுறை எடப்பாடி பழனிசாமியே நிரூபித்து விடுவாரா? என்ற கேள்விகள் எல்லாம் வட்டமடிக்கின்றன.

90 சதவீதம் நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் இருப்பதாகவே சொன்னாலும், பொதுக்குழு நடத்த எடப்பாடிக்கு நீதிமன்றமே உத்தரவு தந்தாலும், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடமே ஒப்படைத்தாலும், ஓபிஎஸ் சளைக்கவில்லை.

சட்டப்போராட்டத்தை கையில் எடுத்தார்.. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் என மாறி மாறி கோர்ட் படியேறினார். சில கண்டனங்களையும் நீதிபதிகளிடம் வாங்கிக்கட்டிக் கொண்டார்.

திருச்சி ரெய்டு.. மூட்டையில் ரூ.100 கோடி நிலப் பத்திரங்கள்.. கந்து வட்டி புகாரில் 3 பேர் கைது!திருச்சி ரெய்டு.. மூட்டையில் ரூ.100 கோடி நிலப் பத்திரங்கள்.. கந்து வட்டி புகாரில் 3 பேர் கைது!

 ஆலோசனை + சுற்றுப்பயணம்

ஆலோசனை + சுற்றுப்பயணம்

ஆனாலும், இந்த ஒரு வார நிகழ்வை மட்டும் எடுத்துக் கொண்டால், பொதுக்குழு வழக்கு விசாரணைகள் துரிதமாக நடந்துள்ளன.. இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்ட நிலையில், நீதிபதி கேட்டிருந்த கேள்விகளை எல்லாம் பார்த்தால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சறுக்கலானதாகவே பார்க்கப்படுகிறது.. நீதிமன்ற விசாரணைகள் சரியான திசையிலேயே நகர்ந்து வந்தாலும், ஓபிஎஸ் தரப்பு குஷியாகி உள்ளது.. தெம்பும், நம்பிக்கையும் பிறந்துள்ளது.. ஆனால், எடப்பாடி தரப்புக்கு டென்ஷன்தான் எகிறி உள்ளது.. தீவிர ஆலோசனை + சுற்றுப்பயணம் என வேகம் எடுத்துள்ளார் எடப்பாடி.

 ஜவ்வு மேட்டர்?

ஜவ்வு மேட்டர்?

மெஜாரிட்டி ஆதரவாளர்களை தன்பக்கம் வைத்திருந்தும், நீதிமன்ற உத்தரவு எதுவோ, அதுதான் இறுதியானதாக இருக்கும்.. பொதுக்குழு குறித்து ஹைகோர்ட் எந்த தீர்ப்பு, யாருக்கு சாதகமாக வழங்கினாலும், இன்னொரு தரப்பு சுப்ரீம்கோர்ட்டுக்கு அப்பீலுக்கு போகவே நிறைய வாய்ப்புள்ளதாம்.. ஆக இந்த பிரச்சனை இப்போதைக்கு தீராது என்கிறார்கள்.. இன்னும் சொல்லப்போனால், எம்பி தேர்தல் வரை, இந்த கேஸ் இழுத்துக் கொண்டு போகும் என்றும் இதை மேலிட பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அரசியல் செய்ய பார்க்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..

டெம்ப்ரவரி

டெம்ப்ரவரி

இதுவும் ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.. உறுதியான நீதிமன்ற தீர்ப்பு வரை, எந்த அதிகாரத்தையும் எடப்பாடி செலுத்த முடியாது, அதிகாரத்தை பயன்படுத்தி எந்தவிதமான உத்தரவும் போடக்கூடாது என்று கடிவாளம் போடப்பட்டுள்ளதால், தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியை அவரால் அனுபவிக்கவும் முடியாத சூழல் உள்ளது.. சாவியை ஒப்படைக்க கூடாது என்று ஓபிஎஸ் சுப்ரீம்கோர்ட் வாசலை மிதித்தால், எடப்பாடி பழனிசாமியோ, கேவியட் மனுவை தாக்கல் செய்துவிட்டார்.. ஆக, இந்த விஷயத்திலும் சிக்கல் நீடிக்கிறது.

மைனஸ் பாயிண்ட்

மைனஸ் பாயிண்ட்

இந்த வழக்கு விசாரணையில், அரசியல் ரீதியான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் முன்வைக்க முயன்றபோது, அப்போது நீதிபதி குறுக்கிட்டு, "ஓபிஎஸ் நடத்தை பற்றியெல்லாம் பேசாதீங்க, என்ன சட்டமோ அதை மட்டும் பேசுங்க" என்று சொன்னதும் எடப்பாடிக்கு மைனஸ் பாயிண்ட்டாகவே பார்க்கப்படுகிறது.. அன்று பொதுக்குழு கூடியபோது, ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்தால் ஏற்பட்ட வன்முறை, பிறகு, முக்கிய ஆவணங்களை திருடி கொண்டு சென்றது தொடர்பாகவும் அன்றைய தினம் கோர்ட்டில் வாதங்களை முன்வைக்க எடப்பாடி டீம் தயாராக இருந்ததாம்..

கடிவாளம்

கடிவாளம்

ஆனால், இதற்கு ஆரம்பத்திலேயே கடிவாளம் போட்டுவிட்டதால், கையை பிசைந்து நிற்கும்படி ஆகிவிட்டதாக சொல்கிறார்கள்.. அதாவது, கடந்த முறை தீர்ப்பிலேயே ஓபிஎஸ் நடத்தை பற்றி இருக்கும்போது, இப்போது விசாரணையின்போதே நடத்தையை பற்றி பேச வேண்டாம் என்று குறுக்கிட்டதும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவானதாகவே பார்க்கப்படுகிறது.. அதுமட்டுமல்ல, ஒருவேளை பொதுக்குழுவை விதிகளை மீறி கூட்டப்பட்டு இருந்தால் அதற்கு ஏற்றபடி தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் ஏற்கனவே நீதிமன்றம் சொன்னதையும் ஓபிஎஸ் தரப்பினர் தங்களுக்கு சாதகமாகவே பார்க்கிறார்கள்.

 இடியாப்ப சிக்கல்

இடியாப்ப சிக்கல்

இந்த சூழலில்தான், ஒருபக்கம் சட்டப்போராட்டத்துடன், மறுபக்கம் டெல்லி ஆதரவை பலமாக பெற்றுள்ளார் ஓபிஎஸ்.. கடந்த காலங்களில் பாஜகவை எப்படியெல்லாம் எடப்பாடி எதிர்த்து வந்தார் என்பதையும் சிவி சண்முகம் முதல் அவரது ஆதரவாளர்கள் எப்படியெல்லாம் பாஜகவுடன் கூட்டணிவைப்பதை விமர்சித்தனர் என்பதையும், காங்கிரசுடன் நெருக்கம் காட்ட எடப்பாடி பிளான் செய்து வருவதையும் ஒன்றுவிடாமல் பாஜக காதில் சொல்ல ஆரம்பித்துவிட்டது ஓபிஎஸ் டீம்.. இதனால், மேலிடத்தின் கொஞ்சநஞ்ச ஆதரவும் எடப்பாடிக்கு இல்லாமல் போக, மேலும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 மாஸ் டூர்

மாஸ் டூர்

அதனால், கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமி சோர்ந்து போய்விட்டதாகவும் ஓபிஎஸ் தரப்பிலேயே தகவல்கள் கொளுத்தி போடப்பட்டு வருகின்றன.. மேலும், ஓபிஎஸ் கையிலேயே அதிமுக வந்துவிழும், அதற்கான காலம் கனிந்து விட்டது என்றும் சோஷியல் மீடியாவில் தகவல்கள் பரவி வருகின்றன.. ஆன, எடப்பாடி பழனிசாமி இன்னமும் தங்கள் நம்பிக்கையை கைவிடவில்லை.. ஓபிஎஸ் எந்த அளவுக்கு நீதின்றத்தை நம்புகிறாரோ, அதே அளவுக்கு எடப்பாடியும் நம்பியே இருக்கிறாராம்.. இதுதொடர்பான சட்ட ஆலோசனைகளை வழக்கறிஞர்களுடன் விடாமல்நடத்தி வருகிறார்.. சுற்றுப்பயணம் செல்லுமிடமெல்லாம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையும் செய்து கொண்டிருக்கிறார்.

சப்போர்ட்

சப்போர்ட்

அதுமட்டுமல்ல, எடப்பாடி ஆதரவாளர்கள் தங்கள் நம்பிக்கைகளை, தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருகின்றனர்.. "பொதுக்குழுவை எடப்பாடி ஒன்றும் முறைகேடாக கூட்டவில்லை.. நகர செயலாளர், ஒன்றிய செயலாளர், கட்சியில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இன்னாள், எம்எல்ஏக்கள் என எல்லாருமே சேர்ந்துதான் கூட்டினோம்.. இவர்கள் அனைவரும்தான் பொதுக்குழுவின், செயற்குழுவின் மொத்த அடையாளமும்.. இவர்கள்தான் எடப்பாடியை தேர்ந்தெடுத்து, இன்னமும் அவருடன் உறுதியாக நிற்கிறார்கள்.. அதேசமயம், எடப்பாடிக்கு எதிராக ஏதாவது ஒரு எம்எல்ஏவாவது இதுவரை கருத்து சொல்லி இருக்கிறாரா? அப்படி யாராவது அதிருப்தி தெரிவித்து, அந்த தகவல் இதுவரை எங்காவது இருக்கிறதா? அது தொடர்பான செய்திகள் வந்திருக்கிறதா? எதுவுமே கிடையாது..

 கீ தந்த விஷயம்

கீ தந்த விஷயம்

செல்லும் இடமெல்லாம் எடப்பாடிக்கு மட்டுமே செல்வாக்கு உண்டு.. பொதுக்குழுவில், எல்லாரும் சேர்ந்து ஓபிஎஸ்ஸை நீக்கியபிறகும், மீண்டும் கட்சி ஆபீசுக்கு வந்து வன்முறையை வெடிக்க செய்து, சர்வாதிகார போக்கில் நடக்கலாமா? சாவி நீதிமன்றமே தந்தும்கூட, நிர்வாகிகள் இத்தனை பேர் எடப்பாடியுடன் இருக்கிறோம் என்று தெரிந்தும்கூட, தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று அடம்பிடிப்பது சரியா? எப்படி பார்த்தாலும் நீதிமன்றம் இந்த விஷயத்திலும் எங்களுக்கு சாதகமான தீர்ப்பயே தரும்" என்கிறார்கள். இப்படி இரு தரப்பிலுமே ஆதரவு + எதிர்ப்பு என காரணங்கள் அடுக்கப்பட்டாலும், கோர்ட் என்ன சொல்ல போகிறது என்பதே முக்கியம்.. பார்ப்போம்..!

English summary
Are Edapadi palanisamys supporters upset and were high court questions seen as setbacks for edapadi team
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X