Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியா நொறுங்கிய எடப்பாடி கணக்கு.. திமிறி எழுந்த ஓபிஎஸ்.. அந்த "பாயிண்ட்"தான் காரணமா?

எடப்பாடிக்கு பாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், ஓபிஎஸ் தரப்பு குஷியில் உள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியின் ஒவ்வொரு சறுக்கல்களிலும் ஓபிஎஸ்ஸின் வெற்றி ஆரம்பமாகி உள்ளது.. அந்தவகையில், இன்றைய நீதிமன்ற தீர்ப்பும் பார்க்கப்படுகிறது.

Recommended Video

    OPS வசமான அதிமுக

    அதிமுக யார் கையில் போக போகிறது? நடந்து முடிந்த பொதுக்குழு செல்லுபடியாகுமா? தீர்மானங்கள் ரத்தாகிவிடுமா? அல்லது தன்னுடைய ஆளுமையை இன்னொருமுறை எடப்பாடி பழனிசாமியே நிரூபித்து விடுவாரா? என்ற கேள்விகள் எல்லாம் இந்த ஒரு மாத காலமாகவே வட்டமடித்து வந்தன.

    90 சதவீதம் நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் இருப்பதாகவே சொன்னாலும், பொதுக்குழு நடத்த எடப்பாடிக்கு நீதிமன்றமே உத்தரவு தந்தாலும், அதிமுக அலுவலக சாவியை எடப்பாடியிடமே ஒப்படைத்தாலும், ஓபிஎஸ் சளைக்கவில்லை.

     ஆலோசனை + சுற்றுப்பயணம்

    ஆலோசனை + சுற்றுப்பயணம்

    சட்டப்போராட்டத்தை துணிந்து கையில் எடுத்தார்.. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் என மாறி மாறி விடாமல் கோர்ட் படியேறினார். நீதிபதியை மாற்ற வேண்டும் என்பது உட்பட சில கண்டனங்களை கோர்ட்டில் வாங்கிக்கட்டிக் கொண்டார் என்றாலும், தன் முடிவில் பிடிவாதமாகவே இருந்தார். கடந்த 10 நாட்களை எடுத்துக் கொண்டால், 2 நாட்கள் மட்டும் பொதுக்குழு வழக்கு விசாரணைகள் துரிதமாக நடந்து முடிந்தன.. இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்ட நிலையில், நீதிபதி கேட்டிருந்த கேள்விகளை எல்லாம் பார்த்தால், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சறுக்கலானதாகவே பார்க்கப்பட்டது.

     அப்பீல்

    அப்பீல்

    நீதிமன்ற விசாரணைகள் சரியான திசையிலேயே நகர்ந்து வந்தாலும், ஓபிஎஸ் தரப்பு முன்பே குஷியாகி விட்டது.. தெம்பும், நம்பிக்கையும் பிறந்துவிட்டது.. ஆனால், எடப்பாடி தரப்புக்கு டென்ஷன் அப்போதே எகிறியது.. தூக்கத்தை அன்று முதலே தொலைத்துவிட்டது எடப்பாடி டீம்.. இன்றைய தினம் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது.. எனினும், சுப்ரீம்கோர்ட்டுக்கு எடப்பாடி பழனிசாமி அப்பீலுக்கு போவார் என்றே தெரிகிறது.. அப்படியே அப்பீலுக்கு போனாலும், இன்றைய தினம் ஓபிஎஸ் பக்கம் காற்று வீசுவதாக கணிக்கப்படுகிறது.

     சக்ஸஸ் + ஓபிஎஸ்

    சக்ஸஸ் + ஓபிஎஸ்

    ஏற்கனவே, ஓபிஎஸ் இந்த வழக்கை நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றதால், உறுதியான நீதிமன்ற தீர்ப்பு வரை, எந்த அதிகாரத்தையும் எடப்பாடி செலுத்த முடியாது என்று கோர்ட் சொல்லியிருந்தது.. இப்போது, தீர்ப்பும் ஓபிஎஸ்ஸுக்கு சாதமாகவே வந்துள்ளது.. ஆக, தற்காலிக பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டும்கூட, மெஜாரிட்டி ஆதரவாளர்கள் தன் பக்கம் இருந்தும்கூட, எடப்பாடியால் கடைசிவரை தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தவே முடியவில்லை என்பதுதான் தற்போதைய ஹைலைட்டாக உள்ளது.. இதைதான் ஓபிஎஸ் சத்தமில்லாமல் சாதித்து காட்டியும் உள்ளார். எனினும் இது தற்காலிகம்தான்.

     கரிசனம்

    கரிசனம்

    எல்லாவற்றுக்கும் மேலாக, டெல்லி ஆதரவும் ஓபிஎஸ்ஸுக்கு இருப்பதை மறுக்க முடியாது.. இந்த பொதுக்குழு பிரச்சனை வெடித்து, இரு தரப்புமே கோர்ட்டுக்கு சென்ற நிலையில், எடப்பாடிக்கு மட்டுமே தீர்ப்புகள் சாதகமாக வந்து கொண்டிருந்தன.. ஆனால், டெல்லி மேலிட கரிசனம் ஓபிஎஸ் மீது விழுந்ததையடுத்து, எப்படியும் ஓபிஎஸ் பக்கமே இனி அடுத்தடுத்த தீர்ப்புகள் வெளியாகும் என்றும் அரசியல் நோக்கர்கள் சொல்லி வந்தனர்.. எதிர்பார்த்ததுபோலவே, அதிமுக பொதுக்குழு முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது.

     சாதனை

    சாதனை

    நீதிமன்றம் தன் வாத விசாரணையில் நடுநிலையோடு இந்த வழக்கை அணுகியிருந்தது என்பதையும் மறுக்க முடியாது.. வாதங்களின்போது, எடப்பாடி தரப்புக்கு எழுப்பியிருந்த கேள்விகளே இதற்கு சாட்சியாகும்.. குறிப்பாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது எனில், எவ்வாறு காலாவதியானது? என்ற நீதிமன்றத்தின் கேள்விதான் இந்த வழக்கை அடியோடு புரட்டி போட காரணமாக இருந்தது என்கிறார்கள்..

     ஹேப்பியில் ஓபிஎஸ் டீம்

    ஹேப்பியில் ஓபிஎஸ் டீம்

    அதனால்தான், இந்த விஷயத்தில்தான், கடைசிவரை, நீதிமன்றத்தை விடாமல் நம்பினார் ஓபிஎஸ்.. அதன் பலனையும் இன்று பெற்றுவிட்டார். "தட்டிப் பறிப்பவர் வாழ்ந்ததில்லை.. விட்டுக் கொடுப்பவர் வீழ்ந்ததில்லை, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பின்பு தர்மமே வெல்லும் ஓபிஎஸ் வாழ்க" என்று அவரது ஆதரவாளர்கள் குஷியாக சொல்லி வருகின்றனர்.

     சான்ஸ் இருக்கே...

    சான்ஸ் இருக்கே...

    அதேசமயம், இந்த விஷயத்தில் எடப்பாடியால் மீண்டும் கட்சியை கொண்டு வர முடியும் என்று சொல்கிறார்கள்.. இத்தனை நாளும் நீதிமன்ற உத்தரவுப்படியும், கட்சி விதிகளை மீறாமலும் உள்ளதே மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது.. மேல்முறையீடு சென்றாலும், இந்த வாதத்தைதான் மேலும் முன்வைக்கப்படும் என்று தெரிகிறது.. அதேசமயம், ஒருவேளை பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஓபிஎஸ் ஒத்துழைக்காவிட்டால், இதையும் ஒரு காரணமாக எடப்பாடி கோர்ட்டில் முறையிடலாம் என்கிறார்கள்.அப்படியே முறையிடும்பட்சத்தில், செல்லலாததாக அறிவிக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும், மீண்டும் உயிர்ப்பெற்றுவிடக்கூடும் என்றும் சொல்கிறார்கள்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+