Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிஜாப் தடை: தமிழ்நாட்டிலும் பரவியது போராட்டம்! புதுக் கல்லூரி மாணவர்கள், இஸ்லாமிய அமைப்புகள் தர்ணா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்நாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த தடை தொடரும் என்ற அம்மாநில உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கி இருக்கின்றன.

கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு PU கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கும் மேலாக வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டனர்.

கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியக்கூடாது என்றும் சீருடையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது.

அதனை அடிப்படையாக கொண்டே தொடர்ந்து மாணவிகளை அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர்.

 கர்நாடகாவில் பூதாகரமான ஹிஜாப் சர்ச்சை

கர்நாடகாவில் பூதாகரமான ஹிஜாப் சர்ச்சை

இந்த நிலையில் குந்தபுராவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினர் காவித் துண்டு அணிந்து வகுப்புக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த பிரச்சனையும் போராட்டமும் மற்ற கல்லூரிகளுக்கும் பரவி கர்நாடகாவில் வன்முறையாக வெடித்தது.

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இதனிடையே உடுப்பி மாணவிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் நேற்று இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர். நேற்று தீர்ப்பு வெளியான உடனே சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஏராளமான மாணவர்கள் ஒன்று திரண்டு ஹிஜாப் தடைக்கும், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஜெய்பீம்! அல்லாஹு அக்பர்! முழக்கம்

ஜெய்பீம்! அல்லாஹு அக்பர்! முழக்கம்


கர்நாடகாவில் நடைபெற்ற ஹிஜாப் போராட்டங்களில் ஒலித்த "ஜெய்பீம்! அல்லாஹு அக்பர்!" ஆகிய முழக்கங்கள் புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் எழுப்பப்பட்டன. புதுக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஹிஜாப் தடை செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து மாணவர் அமைப்புகள், இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டங்களை கையில் எடுக்கத் தொடங்கியுள்ளன.

நாகூர் தர்கா முன் போராட்டம்

நாகூர் தர்கா முன் போராட்டம்

நேற்று மாலை நாகூர் தர்கா முன்பாக இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில், ஊர் மக்கள் பலர் கலந்துகொண்டு ஹிஜாப் தடை தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்டனர்.

அதிராம்பட்டினம் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

அதிராம்பட்டினம் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள பழமையான காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஏராளமான இன்று காலை கிழக்கு கடற்சாலையில் உள்ள கல்லூரி வாயில் முன் நின்று பதாகைகளை ஏந்தி ஹிஜாப் தடை தீர்ப்புக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்

Recommended Video

    Timeline of Hijab Case in Karnataka
    போராட்டத்தை கையில் எடுக்கும் இஸ்லாமிய அமைப்புகள்

    போராட்டத்தை கையில் எடுக்கும் இஸ்லாமிய அமைப்புகள்

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பான சமூக நீதி மாணவர் இயக்கம் ஹிஜாப் தடை தொடரும் என்ற கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து இன்று மாலை 4 மணியளவில் சென்னை தாம்பரம் தபால் நிலையத்தை முற்றுகையிட இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

    இதேபோல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் ஹிஜாப் தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அந்த அமைப்பு அறிவித்து உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+