"கருப்பு ஆடு" சிக்குது.. திமுகவை வட்டமிடும் கழுகு.. எங்கியுமே நகரவிடாமல் யாரது ரகசியமாய்? இது வேறயா
சென்னை: தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள் வெளியாகி உள்ள நிலையில் தேர்தல் தீவிரம் உச்சத்துக்கு சென்றுள்ளது.. இந்நிலையில், தேர்தல் தொடர்பாக பிரத்யேகமான செய்தி ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
எப்போதுமே வடமாநிலங்களில் வலுவாக உள்ள தேசிய கட்சி பாஜக.. ஆனால், கடந்த 2 வருடங்களில் நடந்த ஒரு சில தேர்தல்களில் தோல்வியை தழுவ நேரிட்டது.. சில இடங்களில் முட்டிமோதி "ஜஸ்ட் பாஸ்" ஆனது..

என்ன காரணம்: இதற்கெல்லாம் காரணம், காங்கிரசும், ஆம் ஆத்மியும் பாஜகவை முந்திக்கொண்டு மேலேழுந்து கொண்டிருக்கின்றன.. எனினும், வடமாநிலங்களில் இப்போதுவரை டாப்பில் உள்ளது பாஜகதான். எப்படியாவது 400 சீட்டுக்கு மேல் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.
அதேசமயம், தென்மாநிலங்களிலும் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் காய்நகர்த்தி வருகிறது. முக்கியமாக, தமிழகத்தில் தென்மாவட்டங்களில், காலூன்றுவதுடன், இந்த முறை வாக்கு வங்கியையும் கணிசமாக உயர்த்திவிட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளது.
தனித்து போட்டி: அதுமட்டுமல்ல, வழக்கமாக திராவிட கட்சிகளின் உதவியுடன் போட்டியிடும் பாஜக, இந்த முறை தனித்து கூட்டணி அமைத்து களம் காண்கிறது.. இப்படி ஒரு ரிஸ்க்கை பாஜக எடுப்பது பலருக்கும் ஆச்சரியத்தையே ஏற்படுத்தி வருகிறது. இந்த முறை பாஜகவின் வேட்பாளர்கள் லிஸ்ட்டை பார்த்தாலே, அக்கட்சியின் தீவிரத்தை நம்மால் உணர முடியும்..
பாஜக சார்பில் போட்டியிடும் பிரமுகர்கள் அனைவருமே பிரபலமானவர்கள் என்பதால், தங்களது வெற்றியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கும் நெருக்கடிக்கும் ஆளாகியிருக்கிறார்கள்.. அதைவிட முக்கியமாக திமுகவை குறி வைத்தே, தன்னுடைய தேர்தல் வியூகங்களையும் பாஜக முன்னெடுத்து வருவதாக தெரிகிறது. இப்படிப்பட்ட சூழலில் நமக்கு பிரத்யேகமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அசைன்மென்ட்: அதாவது, தேர்தல் காலத்தை மையப்படுத்தி அமலாக்கத்துறை, IT., டி.ஆர்.ஐ. உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு பல அசைன்மெண்ட்கள் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.. தமிழகத்தில் திமுக மற்றும் திமுக கூட்டணிகளின் எம்பிக்கள், அவர்களுக்கு தொடர்புடைய தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களை கண்காணிக்கும் அசைன்மெண்ட் தரப்பட்டிருக்கிறதாம்.
குறிப்பாக, இவர்கள் சென்னையை விட்டு எங்கு செல்கிறார்கள் ? இவர்களை சந்திக்க யார் யாரெல்லாம் வருகிறார்கள்? என்பதை நோட்டவிடுகிறார்களாம்..
இதற்காக, சென்னை ஏர்போர்ட்டில், ஐ.டி. மற்றும் டி.ஆர்.ஐ., ஈ.டி. அதிகாரிகளின் நடமாட்டம் ரகசியமாக நடந்து வருவதாக சொல்கிறார்கள். கடந்த 1 வாரத்துக்கு முன்பு வரை, ஒரு ஷிப்டுக்கு 1 நபர் என 3 ஷிப்ட்டுக்கு 3 நபர்கள் கண்காணிப்பு பணியில் இருப்பார்களாம். தற்போது 3 ஷிப்டுகளிலும் 20 பேர் நியமிக்கப்பட்டுள்ளனராம்.
திமுக கூட்டணி: 8 மணி நேரத்துக்கு ஒரு ஷிப்ட் என 3 ஷிப்டுகளிலும் அதிகாரிகள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால், வேறு வேறு உடைகளில் வலம் வரும் அவர்கள், திமுகவையும் திமுக கூட்டணியையும் உற்று கண்காணித்து வருகிறார்கள். இதனை தங்கள் சோர்ஸ் மூலம் அறிந்துள்ள மாநில உளவுத்துறையினர், அரசு மேலிடத்திற்கு ரிப்போர்ட் அனுப்பி வைத்திருக்கிறார்காளம்.












Click it and Unblock the Notifications