"ஸ்பெஷல்" அறிவிப்பு.. ஸ்டிரைட்டா விஷயத்துக்கு வந்த எடப்பாடி.. இனி இப்படித்தானா?.. ஜெ.தொண்டர்கள் ஷாக்

எடப்பாடி பழனிசாமி உருவாக்கி உள்ள புதிய விதி தொண்டர்களை அதிர செய்துள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுக்குழுவை நடத்தி வரும் நிலையில், 2 முக்கிய விஷயங்கள், தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தந்து வருகிறதாம்.

Recommended Video

    AIADMK பொதுக்குழுக்கூட்டம் | ரத்தக்களறியான ராயப்பேட்டை | EPS VS OPS

    முதல்வர் & பொதுச்செயலாளர் என்ற இந்த இரண்டு பதவியையுமே மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடைசிவரை விடாமல் தன்னிடம் வைத்திருந்தார்..

    சிறைக்கு செல்ல நேர்ந்தபோதுகூட அந்த பதவியை ஓபிஎஸ்-யிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாரே தவிர, திரும்பவும் தன்னிடமே அதை இறுதிவரை வைத்திருந்தார்.

     காய் நகர்த்தல்

    காய் நகர்த்தல்

    இப்படிப்பட்ட ஆளுமை நிறைந்தவரிடம் இருந்த அந்த முக்கிய பதவிதான், அதிமுக இன்று இரண்டாக பிளவுபடும் அளவுக்கு சென்றுவிட்டது.. ஜெ.போலவே, தனக்கும் ஒற்றை தலைமை மூலம் இந்த பதவி கிடைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் ஆரம்ப கால திட்டமாக இருந்து வந்தது.. இந்த பதவிக்காக, ஜெ.போலவே காய் நகர்த்தலையும் ஆரம்பித்தார் எடப்பாடி பழனிசாமி.. இந்த ஒரு வருட காலமாகவே, தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்ற போஸ்டிங்கில் இருந்துகொண்டே, மறுபக்கம், அதிமுகவை தன் பக்கம் கொண்டுவருவதற்கான இதற்காக களரீதியாக இறங்கினார்..

     தென்மண்டலம்

    தென்மண்டலம்

    ஏற்கனவே கொங்குவை தன்பிடியில் இறுக்கமாக வைத்திருந்த நிலையில், தென்மண்டலங்களில்தான் தன் குறியை வீசினார் எடப்பாடி பழனிசாமி.. இத்தனைக்கும் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஒட்டுமொத்த தென்மண்டலமே எடப்பாடி மீது கோபத்தில் இருந்தது.. வருத்தத்தில் இருந்தது.. ஆனால், அதையும் மீறி அத்தனை அதிருப்தியாளர்களையும் தன்பக்கம் கொண்டு வந்ததுடன், தென்மண்டலங்களில் ஓபிஎஸ்ஸுக்கான செல்வாக்கையும் இழக்க செய்தார்.. இதெல்லாம் ஜெ.வின் ராஜதந்திரங்களில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.

     ஜெ.பாணி ரூட்

    ஜெ.பாணி ரூட்

    வழக்கமாக, தேர்தல் பிரச்சாரம் என்றாலும்கூட, ஜெ.பாணியில்தான் எடப்பாடி தன்னுடைய பிரச்சாரங்களை மேற்கொள்வார்.. அதுபோலவேதான், ஒற்றை தலைமை விவகாரத்திலும் ஜெ.பாணி ரூட்டை பிடித்தார்.. அதனால்தான், இவரது துணிவையும், சாதுர்யத்தையும் கண்டு, அதிருப்தியில் இருந்தவர்களே மனம்மாறி, எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தனர்.. இன்றைய தினம் பொதுக்குழு நடந்து வருகிறது..

     ஜெ.விவகாரம்

    ஜெ.விவகாரம்

    அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, அதிமுக பொருளாளருக்கான அதிகாரங்கள் அனைத்தையும் பொதுச்செயலாளருக்கே என்ற ரீதியில் சட்ட விதிகளிலும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது... இதுதான் ஜெயலலிதாவின் தொண்டர்களை அதிர செய்துள்ளது.. காரணம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இதே போல பொதுச்செயலாளர் விவகாரம் தலைதூக்கியது.. அப்போதெல்லாம் இந்த தலைவர்கள் 2 பேரும் சேர்ந்து சொன்னது, நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டுமே என்பதுதான்..

     புது மேட்டர்

    புது மேட்டர்

    அதனால்தான், பொதுச்செயலாளர் என்ற மேட்டருக்குள் நுழைய கூடாது என்பதற்காக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளையே உருவாக்கினர்.. இந்நிலையில்தான், பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறதாம்.. எந்தவித சட்டதிருத்தமானாலும், விதிகளாலும், ஜெயலலிதாவுக்கான முக்கியத்துவத்தை இழக்காமல் உருவாக்கப்பட்டால், அது தொண்டர்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என்கிறார்கள்.. ஆனால், ஆலமரம் போன்று கட்சியை இத்தனை வருடமாக கட்டிக்காத்த ஜெயலலிதாவின் முக்கியத்துவம் இனி என்ன என்பதே, தொண்டர்களின் கேள்வியாக உள்ளது..

     ஒற்றை தலைமை

    ஒற்றை தலைமை

    எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சினை தேவையா? அதிமுகவில் ஒற்றை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமை என்ற அதிகாரம் ஜெயலலிதாவுக்கு மட்டுமே என முடிவு செய்திருந்தோம். மீண்டும் அப்பதவியை கொண்டு வந்தால் அது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்று ஓபிஎஸ் & டீம் பலமுறை சொல்லி வந்த நிலையில், இன்று கொண்டுவந்துள்ள இந்த சட்டதிருத்த விதியை, ஓபிஎஸ் டீம் தங்களுக்கு சாதகமாகவும் இனி பயன்படுத்தவும் வாய்ப்புள்ளதாம்.

    எம்ஜிஆர்

    எம்ஜிஆர்

    அதுமட்டுமல்ல, "எம்ஜிஆரின் கட்சிக்கு சொந்தம் கொண்டாட விரும்பும் இபிஎஸ் இதுவரை ராமாபுரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு வந்ததில்லை. வெறும் பேனர் மற்றும் போஸ்டர்களின் மட்டுமே எம்ஜிஆர்க்கு மரியாதை அளிக்கிறார்கள்" என்று ஏற்கனவே ஜூனியர் எம்ஜிஆர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இனி ஜெ.வையும் எடப்பாடி தரப்பு மறந்துவிடக்கூடுமோ என்ற கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இவ்வளவு பாடுபட்டு, கட்சியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி, இந்த ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடாமல், தொண்டர்களின் உணர்வுக்கும் மதிப்பளித்து செல்ல வேண்டும் என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது..!

     அன்பழகன்

    அன்பழகன்

    ஓபிஎஸ் மட்டுமல்ல, சசிகலா தரப்புக்கும் இது துருப்புச்சீட்டாக அமைந்துள்ளது.. அம்மாவின் ஆட்சியை களங்கப்படுத்துகிறார்கள் என்று செல்லும் இடமெல்லாம் சசிகலா பதிவு செய்து வரும்நிலையில், எடப்பாடியின் இந்த முடிவு, அவருக்கே மைனஸாக அமைந்துவிடுமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.. "அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி தான் சரியான நபர் அவரால்தான் திமுகவை தைரியமாக எதிர்க்க முடியும், ஜெயலலிதா வகித்த பதவி என்பதால் அதில் யாரும் அமரக்கூடாது என சொல்வது முட்டாள்தனம் என்று
    புதுச்சேரி கிழக்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்த கருத்தை இப்போது ஜெ.விசுவாசிகள் வைரலாக்கி, எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர். நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா என முழங்கிய அதிமுக தொண்டர்கள் அவரது மறைவுக்கு பிறகு இப்படி பேசி வருவது சரியா, என்றும் ஜெ.பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+