பாஜக மீது கோபத்தில் "முக்குலத்தோர்"?.. ஓபிஎஸ் இப்படி பண்ணிருக்கவே கூடாதாமே.. அப்படி என்ன நடந்தது?
சென்னை: பாஜகவினர் மீது முக்குலத்தோரே கோபமாக இருக்கின்றனர். டிடிவி தினகரனை கைது செய்தது பாஜக. சசிகலாவை பழி வாங்கியது பாஜகதான்... இதனால் பாஜகவினர் மீது முக்குலத்தோரே கோபமாக இருக்கின்றனர், என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்த போதும் சரி, அதிமுகவை விட்டு நீக்கப்பட்ட போதும் சரி.. ஓ பன்னீர்செல்வம் ஒரு முடிவில் மட்டும் உறுதியாக இருந்தார். அது பாஜக ஆதரவு. மோடியை பார்க்க காத்து இருப்பது.. அதிமுக ஒன்று என்றால் குரல் கொடுப்பேன்.. பாஜகவிற்கு ஒன்று என்றால் என்னையே கொடுப்பேன் என்று சொல்லும் அளவிற்கு மிக தீவிரமாக பாஜகவிற்கு ஆதரவு அளித்து வந்தார்.

அதிமுக தலைவர்களை மிக தீவிரமாக எதிர்த்து பாஜக தலைவர்களை கடுமையாக ஆதரித்து வந்தார் ஓ பன்னீர்செல்வம். ஆனால் லோக்சபா தேர்தலில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஒரே ஒரு இடம் கொடுக்கப்பட்டு உள்ளது. முதலில் 6 இடங்களை அவர் கேட்ட நிலையில் 4 இடங்களை கொடுக்க பாஜக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் உங்களுக்கு இரட்டை இலை சின்னம் இல்லை.
அப்படி இருக்க தனியாக சின்னத்தில் நிற்க வேண்டாம். உங்கள் மகன் உள்ளிட்டோர் நிற்க வேண்டும் என்றால்.. தனியாக சின்னத்தில் நிற்க வேண்டாம். பாஜகவின் தாமரை சின்னத்திலேயே நில்லுங்கள். அதுதான் முக்கியம். அப்போதுதான் நீங்களும் வெல்ல முடியும்.. தனி சின்னத்தில் நின்றால் 1 சீட்தான் என்று பாஜகவினர் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதையடுத்து வேறு வழியின்றி ஓ பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்கு பின் என்ன நடந்தது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
பேட்டி: ஒன்இந்தியாவிற்கு ப்ரியன் அளித்த பேட்டியில்., ஓ பன்னீர்செல்வம் தவறான தொகுதியை தேர்வு செய்துள்ளார். தேனியை தினகரனுக்கு விட்டுக்கொடுத்துவிட்டார். ஓ பன்னீர்செல்வம் சொந்த தொகுதியை விட்டுவிட்டு செல்ல கூடாது. ஏற்கனவே அங்கே அன்வர் ராஜா இருக்கிறார். நவாஸ் கனி வெற்றிவேட்பாளர். இப்படி இருக்க சுயேட்சை சின்னத்தில் ஓ பன்னீர்செல்வம் இறங்குவது மோசமான நிலையை ஏற்படுத்தும். ஓ பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைவு.
அன்வர் ராஜா ஓ பன்னீர்செல்வம் வெற்றிபெற அனுமதிக்கவே மாட்டார். திமுக வேட்பாளரை வெற்றிபெற வைக்க கூட சில அதிமுக தலைகள் முயற்சி செய்யலாம் . சுயேச்சை சின்னம் + ஓ பன்னீர்செல்வம் என்பது மோசமான காம்பினேஷன். அங்கே யாதவர்கள் சிறுபான்மை தொகுதிகள் வாக்குகள் அதிகம் உள்ளது. பாஜகவிற்கு அரசியல் ஆதாயம் இல்லை என்றால் யாருக்கும் எந்த பதவியும் கொடுக்க மாட்டார்கள். அவர்களை ஆதரிக்கவும் மாட்டார்கள்.
அப்படி இருக்க ஓ பன்னீர்செல்வத்தை அவர்கள் ஆதரிப்பது கடினம். சொந்த கட்சிக்காரர்களுக்கு வேண்டும் என்றால் அவர்கள் இதை எல்லாம் செய்வார்கள். ஆனால் மற்ற கட்சிக்காரர்களுக்கு செய்ய மாட்டார்கள். பாஜகவினர் மீது முக்குலத்தோரே கோபமாக இருக்கின்றனர். டிடிவி தினகரனை கைது செய்தது பாஜக. சசிகலாவை பழி வாங்கியது பாஜகதான்.
இப்படி முக்குலத்தோரை பழி வாங்கிய பாஜகவுடன் இவர்கள் கூட்டணி வைப்பதை முக்குலத்தோர் இளைஞர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. இதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். நம் இனத்தை சேர்ந்தவர்களை அவமானப்படுத்திவிட்டார்கள் என்று முக்குலத்தோர் வருத்தத்தில் இருக்கின்றனர்., என்று ப்ரியன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications