"எனக்கு ஆதரவு கொடுங்கள்".. அண்ணாமலையிடம் பேசி வைத்த ஓபிஎஸ்? "அவர்" சொல்வது உண்மையா? என்ன நடந்தது?
ஓபிஎஸ்ஸுக்கு அடிமட்ட தொண்டர்கள் பலம் இல்லை. தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை, அதனால்தான் அவர் பாஜக தயவை நம்பி இருக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஓபிஎஸ்ஸை மீண்டும் அதிமுக உள்ளே கொண்டு வர கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார், திரும்பி ஓபிஎஸ்ஸை உள்ளே கொண்டு வந்தால் தனக்கு சிக்கல் வரும், தன் நிலை கவலைக்கிடமாகும் என்று எடப்பாடிக்கு தெரியும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் ஒருவரை களமிறக்க உள்ளது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஒரு வேட்பாளரை களமிறக்கும் போட்டிக்கு வேட்பாளரை களமிறக்க போவதாக அறிவித்து உள்ளது.
அதிமுக சார்பாக இரண்டு பேருமே வேட்பாளரை களமிறக்கி தாங்கள்தான் அதிமுகவின் வேட்பாளர் என்று கூறினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது தேர்தல் ஆணைய ஆவணங்களில் ஓ பன்னீர்செல்வம்தான் ஒருங்கிணைப்பாளர். எடப்பாடி பழனிசாமிதான் இணை ஒருங்கிணைப்பாளர். இந்த நிலையில் அதிமுகவில் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றால் பி பார்மில் இருவரும்தான் கையெழுத்து போட வேண்டும். அப்படி இருக்கும் போது இரண்டு பேரும் வேறு வேறு வேட்பாளரை நிறுத்தினால் சின்னம் முடங்கும் நிலை ஏற்படும்.
இந்த நிலையில் அதிமுகவில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். .

பேட்டி
அவர் தனது பேட்டியில், ஓபிஎஸ்ஸுக்கு அடிமட்ட தொண்டர்கள் பலம் இல்லை. ஓபிஎஸ்ஸுக்கு கட்சியில் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் சப்போர்ட் இல்லை. தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. எடப்பாடியும் ஓபிஎஸ் போலத்தான் ஆட்சிக்கு வந்தார். ஆனால் எடப்பாடி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டார். அரசியலில் இதை எல்லாம் நம்பிக்கை துரோகம் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் இதெல்லாம்தான் அரசியல். ஓபிஎஸ் செய்ய முடியாததை எடப்பாடி செய்தார். அவர் தொண்டர்கள் மத்தியிலும், கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றார். ஓபிஎஸ் அது போல நிர்வாகிகள் ஆதரவை எல்லாம் பெறவில்லை.

பாஜக நம்பிக்கை
இதனால் ஓபிஎஸ் பாஜகவை நம்பி இருக்கிறார். எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லாம் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் காசு கொடுத்து வாங்கப்பட்டார்கள், தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கமே இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் ஓபிஎஸ் போகிற இடங்களுக்கு எல்லாம் தொண்டர்கள் படையெடுக்க வேண்டுமே? ஏன் இல்லை? தொண்டர்கள் அவரை சூழ்ந்து இருக்க வேண்டுமே? எங்கே அவர்கள்? தொண்டர்களின் பிரதிநிதிகள் தானே மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள்.

எடப்பாடி பக்கம்
அவர்கள் எடப்பாடி பக்கம் தானே நிற்கிறார்கள். ஓபிஎஸ் தனக்கு ஆதரவு இல்லை என்றுதான் பாஜகவிற்கு ஆதரவு தருவதாக கூறி உள்ளார். அண்ணாமலையுடன் பேசி வைத்துவிட்டுதான் ஓபிஎஸ் இப்படி கூறி இருப்பார். நான் நிற்பேன் எனக்கு ஆதரவு கொடுங்கள் என்று அண்ணாமலை கூறி இருக்கலாம். அதனால்தான் பாஜகவிற்கு ஆதரவு கொடுப்பதாக கூறி உள்ளார். இது எல்லாம் தெரிந்தே பாஜக முதல் நாளே தேர்தல் கமிட்டியை உருவாக்கி உள்ளது. ஆனால் எங்கிருந்தோ வந்த உத்தரவு அண்ணாமலையை பின்வாங்க வைத்துள்ளது.

சிக்கல்
எடப்பாடியை ஒருவேளை பாஜக ஆதரித்துவிட்டால்.. அது ஓபிஎஸ்ஸுக்கு சிக்கல். எடப்பாடி ஓபிஎஸ்ஸை உள்ளே கொண்டு வர கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். திரும்பி ஓபிஎஸ்ஸை உள்ளே கொண்டு வந்தால் தனக்கு சிக்கல் வரும். தன் நிலை கவலைக்கிடமாகும் என்று எடப்பாடிக்கு தெரியும். கடைசியில் ஓபிஎஸ்தான் அடங்கி போய்விடுவார். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கெஞ்சி கூத்தாடி ஏதாவது இரண்டாம் கட்ட பதவியை பெற்றாவது ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் போய் சேர்ந்துவிடுவார். முன்பே எடப்பாடியை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும், ஓபிஎஸ்ஸை துணை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என்றுதான் சொன்னார்கள்.

என்ன நடக்கும்?
அதை ஓபிஎஸ் அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது வேறு வழியில்லை என்றால் அதே பதவியை கேட்டு வாங்கிக்கொண்டு ஓபிஎஸ் அதிமுகவில் ஐக்கியம் ஆக வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் நெருக்கடியாக இருக்க போகிறது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 7 மாநிலங்களில் பாஜகவிற்கு நெருக்கடி உள்ளது. 50-55 இடங்கள் கூட பாஜகவிற்கு குறையும் என்று சிலர் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு எம்பிகளும் அவர்களுக்கு முக்கியம். அதனால் தமிழ்நாட்டில் எடப்பாடி - ஓபிஎஸ் சேர்ந்து இருக்க வேண்டும். அவர்களின் கூட்டணிக்கு கீழ் இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.

வேறு வழியில்லை
இவர்கள் சேர்ந்து இருந்தால்தான் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று பாஜக நினைக்கிறது. இன்னொரு பக்கம் எடப்பாடி இந்த தொகுதியில் நிற்பார் என்று சிலர் கூறுகிறார்கள். அவர் இங்கே நிற்பார் என்று நம்பிக்கை இல்லை. அவர் ஏற்கனவே ஆர். கே நகர் இடைத்தேர்தலில் வென்றார். அதன்பின் சட்டசபை தேர்தலில் தென் மண்டலத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மீண்டும் இன்னொரு தொகுதியில் அவர் போட்டியிடுவாரா என்பது சந்தேகம்தான், என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா?












Click it and Unblock the Notifications