சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜயபாஸ்கரா.. ஓபிஆர் + அறிவாலயம்.. எடப்பாடிக்கு எகிறும் டென்ஷன்.. வெள்ளை கொடிக்கு மறுபடியும் வேலையா

திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் ஏன் கிளம்பின

Google Oneindia Tamil News

சென்னை: ஓபிஎஸ் நடவடிக்கைக்கு பின்னால் திமுக இருக்கிறது, அந்த கட்சியின் பேச்சை கேட்டு ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டுகள் வலுத்து வருகின்றன.. இந்த புகார்கள் உண்மையா?

காப்பாத்துங்க! 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்! சுரங்கம் தோண்டி பத்திரமாக மீட்பு காப்பாத்துங்க! 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்! சுரங்கம் தோண்டி பத்திரமாக மீட்பு

ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை எடப்பாடி அளவுக்கு ஸ்டிராங் இல்லை என்ற ஒரு பேச்சு உள்ளது.. எதிலும் உறுதிப்பாடு இல்லாததும், ஒரு விஷயத்திலும் நிலையான முடிவு எடுக்காததும், விமர்சனங்களாக உள்ளன.
சமீபகாலமாகவே, அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், இன்னொரு குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள்.. ஓபிஎஸ் திமுகவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், திமுகவுடன் அவருக்கு கூட்டு என்றும் பரபரப்பாக பேட்டிகளை தந்து வருகிறார்கள்..

ஓபி ரவீந்திரநாத்

ஓபி ரவீந்திரநாத்

இவர்கள் இப்படி சொல்வதற்கு காரணம், திமுகவை ஓபிஎஸ் காட்டமாக விமர்சிக்காமல் உள்ளதுதான் என்கிறார்கள்.. தமிழகத்தை பொறுத்தவரை, திமுகவும், அதிமுகவும் நேர் எதிர் விரோத கட்சிகள்.. அப்படி இருக்கும்போது, எடப்பாடி பழனிசாமி மட்டுமே, திமுகவை சரமாரியாக விமர்சித்து வருவதாகவும், ஓபிஎஸ் மென்மை போக்கை கடைப்பிடிப்பதாகவும் கூறப்படுகிறது.. கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போதுகூட, தேனியை தவிர ஓபிஎஸ் வேறு எங்குமே திமுகவை கண்டித்து பிரச்சாரம் செய்யவில்லை.

ரவீந்திரநாத்

ரவீந்திரநாத்

போதாக்குறைக்கு சட்டசபையில் கருணாநிதியை பாராட்டியது, முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கையை பாராட்டுவது என்று அடிக்கடி பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறார்.. அனைத்தையும்விட, ஓபிஎஸ் மகன் தனிமையில் சந்தித்து பாராட்டியதுடன், வாழ்த்து சொல்லி, பரிசும் தந்ததுதான், எல்லாவற்றிற்கும் மேலாக, அதிமுகவினரை கடுப்பாக்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.. எனவே, திமுகவை தீவிரமாக எதிர்க்கும் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தங்கள் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்றும், ஓபிஎஸ்ஸை நாங்கள் வெறுக்க இதுதான் காரணம் என்றும் மாஜிக்களும், நிர்வாகிகளும் பேட்டி தந்து வருகிறார்கள்.

ஒற்றை தலைமை

ஒற்றை தலைமை

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நாம், ஓபிஎஸ் தரப்பினர் சிலரிடம் பேசினோம்.. ஓபிஎஸ் மீது இத்தனை புகார்கள் சொல்லி வருகிறார்களே, அதெல்லாம் உண்மையா? ஓபிஎஸ் பின்னணியில் திமுக உள்ளதா? என்று கேட்டோம்.. அதற்கு அவர்கள் சொன்னதாவது: "ஓபிஎஸ் மகன், ஸ்டாலினை சந்தித்தது எந்த தேதியில்? ஒற்றை தலைமை விவகாரம் வெடித்தது எந்த தேதியில்? ஒற்றை தலைமை பிரச்சனை வந்துவிட்டதாலேயே, முதல்வரை ரவீந்திரநாத் சந்தித்தாரா? அல்லது ரவீந்திரநாத் முதல்வரை சந்தித்ததால், ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கியதா?

செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ

ஒரு எம்பி முதல்வரை நேரில் சந்தித்தார் என்பதைதவிர, வேறு என்ன இதில் காரணம் உள்ளது? ரவீந்திரநாத் மட்டும்தான் முதல்வரை பாராட்டினாரா? ஏன் சட்டசபையில் செங்கோட்டையன் பாராட்டவில்லையா? செல்லூர் ராஜு பாராட்டவில்லையா? அவ்வளவு ஏன்? எடப்பாடியின் ஆதரவாளரான, ராஜேந்திரபாலாஜி பாராட்டவில்லையா? இவர்கள் மட்டும் தமிழக அரசையும், முதல்வரையும் புகழலாம்.. ஒரு எம்பி, தமிழக அரசை பாராட்டக்கூடாதா?

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

பாஜக தலைவர் அண்ணாமலை, அன்னைக்கு திமுக ஊழல் பற்றி லிஸ்ட் வெளியிட்டு புட்டு புட்டு வைத்தாரே.. திமுக அரசின் சுகாதாரத்துறை மீதும், பத்திரப்பதிவு துறை மீதும் தானே புகார்களை சொன்னார்? மாற்று கட்சியில் உள்ள பாஜக இப்படி குற்றச்சாட்டை சொல்லும்போது, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக என்ன செய்தது? இதற்கு எடப்பாடி தரப்பில் வந்ததா? அவ்வளவு ஏன்? அந்தந்த துறையின் மாஜிக்களான விஜயபாஸ்கர், கேசி வீரமணியாவது, குறைந்தபட்சம் திமுக ஊழல் புகார் பற்றி கேள்வி கேட்டார்களா? ஏன் கேட்கவில்லை.

அபாண்டம்

அபாண்டம்

காரணம், இவர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளது.. இவர்கள் மீதும் எந்நேரமும் கேஸ் பாயலாம்.. ரெய்டு நடக்கலாம்.. இவர்கள் அமைதியாக கமுக்கமாக நடந்து கொள்வதை பார்த்தால், திமுகவுக்கு அடிபணிவது போல இல்லையா? கேட்க வேண்டும் என்று நினைத்தால் எவ்வளவோ கேட்கலாம்.. ஒரு எம்பி மாநில முதல்வரை சந்தித்ததை வைத்து, காரணமாக்கியதுடன், பின்னணியில் திமுக இருக்கிறது என்று அபாண்டத்தையும் எங்கள் மீது திணிக்கிறார்கள்" என்று பொரிந்து தள்ளிவிட்டனர்.

Recommended Video

    OPS-க்கு பதில் கடிதம் எழுதிய EPS... திமிறி எழும் 5 சந்தேகங்கள் *Politics
    குழப்பம்

    குழப்பம்

    இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தரப்பு கையை பிசைந்து வருகிறதாம்.. எதையோ செய்ய போய், பிரச்சனை எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறதே என்று நினைக்கிறாராம்.. ஓபிஎஸ் சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க மாட்டார், வழக்கம்போல் பேசியே சமாதானப்படுத்திவிடலாம் என்றுதான் எடப்பாடி டீம் யோசித்ததாம்.. ஆனால், இதை விட்டால் தன்னுடைய எதிர்கால அரசியல் முடிவுக்கு வந்துவிடும் என்பதை நினைத்துதான், ஓபிஎஸ் விடாப்பிடியாக பிடிவாதம் காட்ட ஆரம்பித்ததாக தெரிகிறது. சுப்ரீம் கோர்ட், தேர்தல் ஆணையம், இவர்கள் என்ன செய்ய போகிறார்களோ? என்பதுதான் எடப்பாடியின் கவலையாக சூழ்ந்துள்ளது. ஓபிஆர் விஷயத்தை கையில் எடுத்தால், அவர்களும் பதிலுக்கு நம் தரப்பை கேள்வி கேட்பார்களே என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளதாம்..!

    English summary
    are OPS and his team working in favor of DMK and What are Edappadi palanisamys accusations திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் டீம் செயல்பட்டு கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X