"துண்டு" போட்டாச்சு.. வேலி தாண்டும் வெள்ளாடுகள்.. யாரு வைத்திலிங்கமா.. 4 பேரை தூக்கும் எடப்பாடி..!
ஓபிஎஸ் டீமில் உள்ள 4 பேர் எடப்பாடி பக்கம் செல்வதாக கூறப்படுகிறது
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு மவுசு கூடிக்கொண்டே வரும் நிலையில், 4 புள்ளிகளுக்கு வலை விரிக்கப்பட்டு வருகிறது.. இது ஓபிஎஸ்ஸுக்கு டென்ஷனை எகிறி வைத்து வருகிறதாம்.
கடந்த ஒரு வாரமாகவே ஓபிஎஸ் அமைதியாக இருந்த இன்றுதான் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.. ஆனால், அடுத்தக்கட்டமாக என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொண்டர்களின் செல்வாக்கும் பெருமளவு இல்லாத நிலையில், எடப்பாடி டீமில் உள்ள ஆதரவாளர்களை இழுக்க நிறைய முயற்சிகளை கடந்த மாதம் முழுவதும் மேற்கொண்டார் ஓபிஎஸ். ஆனால், கோர்ட் தீர்ப்பு வந்துவிடட்டுமே, பிறகு உங்களிடமே வந்துவிடுகிறோம் என்று ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி டீமில் இருக்கும் சில முக்கிய நிர்வாகிகள் நம்பிக்கை தந்தனர்.

மீட் வித் டிடிவி
எடப்பாடிக்கே கோர்ட் தீர்ப்பு சாதகமாகவிட்ட நிலையில், ஒருவரும் ஓபிஎஸ் பக்கம் வரவில்லை.. பாஜகவும் கைவிட்டுவிட்டது.. டிடிவி, சசிகலா போன்றோரும் பகிரங்க ஆதரவை இதுவரை தரவில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான், டிடிவி தினகரனை 2 நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.. அப்போது சில விஷயங்களை மனம் விட்டும் பேசினாராம்.. "தேர்தல் வரப்போகிறது.. கட்சி ஒன்றாக வேண்டும்.. இப்படி இருப்பது கட்சிக்கு நல்லதல்ல.. வேண்டுமானால் பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடியே தொடரட்டும்.. இணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கொள்கிறேன்.. கட்சி தான் முக்கியம்" என்றாராம்.

ஸாரி?
ஓபிஎஸ் இப்படி இணங்கி வருவார் என்பதை எடப்பாடி தரப்பு ஏற்கனவே கணித்துள்ளது என்றாலும், மறுபடியும் அதிமுகவுக்கு வந்தால் ஓபிஎஸ்ஸை ஏற்க மாட்டோம், மன்னிக்க மாட்டோம் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.. தினகரனை சந்தித்ததும், மூத்த தலைவர் பண்ருட்டியாரையும் ஓபிஎஸ் சந்தித்து புலம்பியதாக கூறப்படுகிறது.. அப்போது பண்ருட்டி, சட்ட ரீதியாக பல விஷயங்களை ஓபிஎஸ்சுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார்.. அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு ஓபிஎஸ்ஸும், தங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மீண்டும் பண்ருட்டியாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பண்ருட்டியார்
இப்படி, டிடிவியையும், பண்ருட்டியையும் நேரில் சந்தித்து ஓபிஎஸ் புலம்பி வரும் நிலையில், ஓபிஎஸ் டீமில் உள்ள 2ம்கட்ட நிர்வாகிகளே முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.. நடப்பதெல்லாம் எடப்பாடிக்கு சாதகமாகவே சென்று கொண்டிருக்கிறதே, நம் பக்கம் தொடர்ந்து பலவீனமாகி வருகிறதே.. அப்படின்னா, கட்சி மொத்தமாக எடப்பாடிக்கே சென்றுவிடுமா? என்ற கலக்கம் சூழ்ந்து வருகிறதாம்.. இதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள எடப்பாடி டீம் முயற்சிக்கிறதாம்.

வைத்திலிங்கம்
அதாவது 2ம் கட்ட நிர்வாகிகள் என்றில்லாமல், ஓபிஎஸ்ஸுடன் இருக்கும் அந்த 4 சீனியர்களுக்குதான் வலையை விரித்துள்ளதாக கூறப்படுகிறது.. அதாவது, "இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஓபிஎஸ்சை நம்பி கொண்டிருப்பீர்கள்? அம்மா வளர்த்த கட்சியை வலுப்படுத்த வாருங்கள்" என்று நூல்விட்டு வருகிறார்களாம்.. அதிலும், குறிப்பாக வைத்திலிங்கம், தர்மன் எம்பி., மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் என்று பெயர் சொல்லும் அளவில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகளை ஒவ்வொருவராக இழுப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றனவாம்.. ஒருவேளை முக்கிய பொறுப்புகளை எடப்பாடி வழங்குவதாக உறுதிதந்தால், நிச்சயம் இந்த தலைகளும், எடப்பாடி பக்கம் சென்றுவிடக்கூடும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து சொல்கிறார்கள்..

தனிமரம்
ஏனென்றால், கடந்த கால ஆட்சியின்போதும் சரி, இந்த முறை பொதுக்குழு நடந்து பொறுப்புகளை வழங்கியபோதும் சரி, கொங்கு புள்ளிகளுக்கு மட்டுமே எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் தந்ததாக புலம்பி கொண்டிருந்தவர்கள் தான் இந்த 4 பேரும்.. அதனால், முக்கியத்துவமும், போஸ்டிங்கும் இந்த முறை எடப்பாடி தருவாரா? அதற்கான உத்தரவாதம் கிடைக்குமா? என்பதுதான் முக்கிய குழப்பமாக இருக்கிறதாம்.. இவர்கள் 4 பேரும் எடப்பாடி டீம் பக்கம் ஜம்ப் ஆனால், ஓபிஎஸ் தனிமரமாகிவிடுவாரா?! அல்லது அவரும் எடப்பாடியுடன் இணங்கி செல்ல ஓபனாக சம்மதிப்பாரா? தெரியவில்லை.. பார்ப்போம்..!
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications