செங்கல்பட்டில் நிலப்பட்டா தேங்கி நிக்குது.. மதுராந்தம் தாலுகா ஆபீசில் என்னவாம்? கலெக்டரிடம் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை, அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப்பேரவை விடுத்திருக்கிறது. பட்டா உள்ளிட்ட அனைத்து பணிகளும் தேக்க நிலையில் உள்ளதால், இதற்கெல்லாம் உரிய தீர்வு ஒன்றை பெற்றுத்தர வேண்டும் என்றும் அப்பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.

அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையானது, தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி விவகாரத்தில் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருந்தார் அப்பேரவையின் தலைவர் ஹென்றி.

chengalpattu patta documents maduranthakam taluk office


அரசாணை:
அதேபோல, விழியற்றவர்களின் வாழ்விற்கும், பயிற்சி திறன் மேம்பாட்டிற்கும், வேலை வாய்ப்புக்கும் எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியிருந்தார். சமீபத்தில்கூட, பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், விதிகளுக்கு புறம்பாக கும்பகோணம் அசூர் புறவழிச் சாலையில் செயல்படும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட மக்களின் நடைமுறை சிக்கலை கருத்தில்கொண்டு, அம்மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் டாக்டர் ஹென்றி எழுதி உள்ளதாவது:

செங்கல்பட்டு மாவட்டம்: "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் நாளும் பல வகையிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் தங்களின் சீரிய நிர்வாகத் தலைமையின் கீழ் அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக மண்டல துணை வட்டாட்சியர் மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஆகிய நிர்வாக பொறுப்புகளில் பொறுப்பு வகித்தவர்கள் பணி மாறுதலுக்கு உள்ளாகியதால், அந்த பொறுப்புக்கு உட்பட்ட எந்த பணிகளும் நடைபெறாமல், பட்டா உள்ளிட்ட அனைத்து பணிகளும் தேக்க நிலையில் உள்ளதாக தெரிய வருகிறது.

தேக்க நிலை: மேற்கண்ட பொறுப்புகளுக்கு கடந்த 01.12.2024 அன்று உரிய அலுவலர்களை நியமித்து தாங்கள் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை அவர்கள் பொறுப்பேற்காததால் இன்னும் பணி தேக்க நிலை அடைந்து கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்றாட பணிகளை மேற்கொள்ள மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஆகவே பெருமதிப்பிற்குரிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் நலன் கருதி கனிவுடன் பரிசீலித்து, பொதுமக்கள் தங்களின் தேவைகளுக்காக மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இதுவரை தீர்வு ஏற்படாமல் தேக்க நிலையில் உள்ள கோப்புகளை விரைந்து முடித்து தீர்வு காண வேண்டியிருக்கிறது.

கோரிக்கை: எனவே, போர்க்கால அடிப்படையில், போதிய அளவிற்கு கூடுதல் பொறுப்புகளில் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் உரிய அலுவலர்களை நியமித்து உடனடியாக பொறுப்பேற்பதற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து, உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும்" என்று மக்கள் நலப் பேரவை தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையானது செங்கல்பட்டு மாவட்ட மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. இந்த கோரிக்கை விரைந்து நிறைவேறும்பட்சத்தில், வட்டாட்சியர் அலுவலகத்தில் தேங்கி கிடக்கும் பணிகள் துரிதமாகும் என்பதுடன், இதனால் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+