Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷனில் "இந்த"பொருளுக்கு இனி சிக்கல்? அண்டை மாநிலங்களுக்கு பறந்த கடிதம்? ரேஷன் அட்டைதாரர்கள் கலக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியில், போதுமான இருப்பு இருக்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை.. இதுகுறித்து தகவல் ஒன்றும் கசிந்துள்ளது.

சமீபகாலமாகவே, பருப்பு பதுக்கலை தடுக்கும்படியான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது... எனினும், நாடு முழுவதும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் கொள்முதல் குறைந்து விட்டதாலும், இருப்பு அளவுக்கு மீறி குறைந்துவிட்டதாலும், பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.

என்ன காரணம்: எனவே, நுகர்வோர்களுக்கு எளிதாக பருப்பு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், தொடர்ந்து மாநிலங்களில் இருக்கும் பருப்புகளின் இருப்பு நிலையை கண்காணித்து பருப்பு பதுக்கலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருக்கிறது.

மெட்ரிக் டன்: அதேபோல, 10 நாட்களுக்கு முன்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பின் இருப்பு நிலையை பற்றி, ஆய்வு செய்வதற்கான கூட்டம் நடத்தப்பட்டது.. அந்த கூட்டத்தில், வரும் அக்டோபர் 31ம் தேதி வரைக்கும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்த விற்பனையாளர்களுக்கான பருப்பு இருப்பு வரம்பு 200 மெட்ரிக் டன் என்றும், சில்லறை வியாபாரிகளுக்கான இருப்பு வரம்பு 5 மெட்ரிக் டன்னாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

Are ration shops affected by central government notification and Is there a shortage of ration rice in Tamil Nadu

அத்துடன், விற்பனையாளர்கள் அவ்வப்போது பருப்புகளின் இருப்பு நிலையை https://fcainfoweb.nic.in/psp என்கிற இணையதள பக்கத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

வரத்து அதிகம்: அதாவது, தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கும், அந்தியோதயா கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது. அதில் முன்னுரிமை பெற்ற மற்றும் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கான அரிசியை, மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. முன்னுரிமையற்ற கார்டுதாரருக்கு வழங்க மாதம், 45,000 டன் அரிசி, கிலோ, 34 ரூபாய்க்கு, இந்திய உணவு கழகத்திடம் இருந்து, தமிழக நுகர்வோர் வாணிப கழகம் வாங்கி வருகிறது.

ஆனால், திடீரென அரிசி, பருப்பு விநியோகத்தினை மாநிலங்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகவும் பொதுமக்கள் மத்தியில் கலக்கம் சூழ்ந்து கொண்டது.. தமிழகத்தில் மட்டும், 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வரும்நிலையில், ரேஷன்தாரர்கள் இதனால் பாதிக்கப்படுவார்களா என்ற பீதியும் கிளம்பியது.

முன்னுரிமை: ஆனால், மத்திய அரசு அறிவிப்பினால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று அதிகாரிகள் அப்போதே விளக்கம் ஒன்றை தந்திருந்தார். அதாவது, தமிழகத்தில் மாதத்துக்கு 3.40 லட்சம் டன் அரிசி தேவையாக இருக்கிறது.. அதில், முன்னுரிமை தந்து, அந்தியோதயா பிரிவுகளுக்கு தேவைப்படும், 2 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு இலவசமாகவே வழங்கி வருகிறது..

இதைத்தவிர, கிலோ அரிசி, 8.30 ரூபாய் விலையில், 93,000 டன் தரப்படுகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, மத்திய அரசின் ஒப்பந்தத்தின் கீழ், நுகர்பொருள் வாணிப கழகமானது, விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லை, அரிசியாக மாற்றி, தமிழகத்திற்கான ஒதுக்கீட்டில் ஈடு செய்து வருகிறது.

நிம்மதி பெருமூச்சு: அந்தவகையில், இந்த சீசனில் விவசாயிகளிடமிருந்து, 40 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.. இப்போதைக்கு 7.50 லட்சம் டன் அரிசி இருப்பு இருக்கிறது.. இது வரும் ஆகஸ்ட் வரை போதுமானதாக உள்ளது.. அதனால், மத்திய அரசு வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் அரிசி விற்பனையை நிறுத்தினாலும்கூட, தமிழக ரேஷன் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என்றார்கள்.

இப்போது விஷயம் என்னவென்றால், அரிசி பற்றாக்குறை தமிழகத்தில் எழுந்திருக்கிறதாம்.. "உங்கள் மாநிலத்தில், மாநில தேவை போக உபரி அரிசி இருக்கிறதா? என்ன விலைக்கு வழங்கப்படும்?" என்று தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர், கர்நாடகா மாநிலங்களுக்கு, தமிழக உணவு துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரிசி கேட்டு பிற மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது, ரேஷன் அட்டைதாரர்களிடம் கலக்கத்தினை ஏற்படுத்தி வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+