புயலென நுழைந்த எடப்பாடி பழனிசாமி.. சட்டசபை கூட்டம் தொடங்கியது.. எதிர்க்கட்சி துணை தலைவர் யார்..?
பரபரப்பான சூழலுக்கிடையே தமிழக சட்டசபை இன்று 2வது நாளாக கூடுகிறது
சென்னை: 2வது நாளாக தமிழக சட்டசபை இன்று கூடியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் வருகை தந்துள்ளனர்.. இதையடுத்து, எதிர்க்கட்சி துணை தலைவர் யார் என்பது குறித்த விவாதங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன.
தமிழக சட்டசபையில், கடந்த மார்ச்சில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நடந்தது.,இந்த நிகழ்வுகள் முடிந்ததும், மே மாதம் சபை ஒத்திவைக்கப்பட்டது...

முக ஸ்டாலின்
இதையடுத்து, தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் நேற்றைய தினம் கூடியது... இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வரவில்லை.. அவரைப்போலவே, அவரது தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்களும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அதேசமயம், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர்...

ஹாட் சீட்
நேற்றைய கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரம் மிகுந்த எதிர்பார்ப்பை முதல்நாளே ஏற்படுத்திவிட்டது.. எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் உட்கார்ந்திருந்தார்... கூட்டத்தொடர் தொடங்கியதுமே மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு, சட்டசபை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது... இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

எம்எல்ஏக்கள்
இந்த கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்ஸும் பங்கேற்றார்... இந்த ஆய்வு கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது... இறுதியில், சட்டசபை கூட்டத்தொடர் 2 நாட்களுக்கு (அக்டோபர் 18,19) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.. அந்தவகையில், இன்றும், நாளையும் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது..

நிதியமைச்சர்
இன்று காலை சட்டசபை கூடியதும், 2022 - 23ம் ஆண்டு கூடுதல் செலவுக்கான அறிக்கையை, நிதி அமைச்சர் தாக்கல் செய்வார் என்றும், அதைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கான அறிக்கை விவாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.. மேலும், கூடுதல் வரவு - செலவு திட்ட அறிக்கை மீது விவாதம், பதிலுரை, வாக்கெடுப்பு நடக்க வாய்ப்புள்ளதாகவும், ஏதேனும் அரசினர் சட்ட முன்வடிவுகள் வந்தால், ஆய்வு செய்து நிறைவேற்றப்படும் என்றும் நேற்றைய தினம் சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார்.. அந்தவகையில், இன்றும், நாளையும் முழுமையாக சட்டசபை நடக்க உள்ளன.. மேலும், இந்த இரண்டு நாட்களும் கேள்வி நேரமும் உண்டு..

விடமாட்டேன்
இந்த 2 நாட்கள் நடைபெற உள்ள இந்த மழைக்கால கூட்டத்தொடரில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே, இதன் 600 பக்க விசாரணை அறிக்கையை முதல்வரிடம் நேரடியாகவே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று சட்டசபையில் முன்வைக்கப்படுகிறது. தேவைப்பட்டால் அவற்றின் மீது விவாதம் நடத்தப்படும் என்று அப்பாவு கூறியிருந்த நிலையில், எதிர்பார்ப்பு எகிறி வருகிறது..!

எடப்பாடி ஆஜர்
ஆனால், அதைவிட முக்கியமாக, எதிர்க்கட்சி துணை தலைவர் யார் என்பது குறித்த பிரச்சனைதான், அதிமுக தரப்பினருக்கு முக்கியமானதாக பார்க்கப்பட்டு வருகிறது.. காரணம், நேற்றைய தினமே யாருமே, ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகரிக்காத நிலையில், ஓபிஎஸ்ஸுக்கான இருக்கை ஒதுக்கப்பட்டது.. அதனால், எடப்பாடி & கோ சபையை புறக்கணித்துவிட்டு வெளியேறிய நிலையில், இன்று ஆஜராகி உள்ளனர்.. அந்த வகையில் விவாதம் பரபரக்க போகிறது.












Click it and Unblock the Notifications