இளையராஜாவுக்கு "குறி".. திருமாவளவனின் ஆதரவு பார்வை.. "அம்பேத்கரியமே தேவை" அடித்து சொன்ன வன்னி அரசு
திருமாவளவனை தொடர்ந்து வன்னியரசும் இளையராஜா குறித்து கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: இளையராஜாவுக்கு குறி வைக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் நேற்றைய தினம் கூறியிருந்த நிலையில், "இளையராஜாவால் இன்று அவரால் துயரப்படுகிறோம். இப்போது பாடல்கள் தேவை அல்ல, அம்பேத்கரியமே தேவை" என்று விசிகவின் வன்னி அரசு வலியுறுத்தி உள்ளார்.
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில் புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார்.

இளையராஜா பெருமிதம்
அதில், "பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்பன உட்பட சில வரிகளை பாராட்டி குறிப்பிட்டிருக்கிறார்.

இளையராஜா
இதுதான் நேற்றில் இருந்து சோஷியல் மீடியாவில் டிரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது.. இளையராஜாவுக்கு ஆதரவான கருத்துக்கள் ஓரளவு வந்தாலும், எதிர்ப்புக் கருத்துக்களே ஏராளமாக குவிந்து கொண்டிருக்கிறது.. சர்ச்சையாக வெடித்து வருகிறது.. மிகப்பெரும் விவாதத்தை தூண்டியிருக்கிறது... மோடியை அம்பேத்கரை எப்படி ஒப்பிடலாம்? முற்றிலும் தவறானது, முரணானது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.. இளையராஜா மீதான விமர்சனத்துக்கு எதிராகவும் பதிவுகள் ஷேர் ஆகி வருகின்றன.

திருமாவளவன் சுளீர்
பலர் கருத்து தெரிவித்தாலும், திருமாவளவன் பேசிய பேச்சு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.. "சமூகத்தில் யார் மக்களோடு நெருக்கமாக இருக்கிறார்களோ, அவர்களை சந்திப்பது தான் ஆர்எஸ்எஸ்கார்களின் நோக்கம்... ஆர்எஸ்எஸ்காரர்கள் அப்படி இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும்.. அம்பேத்கர் மோடி சிந்தனையாளர்கள் செயல்பாட்டாளர்களும் என்ற புத்தகத்தை கொடுத்து அணிந்துரை கேட்டிருக்கிறார்கள். அவரும் 2 பக்கம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

விசிக
அம்பேத்கர் இருந்திருந்தால் மோடியை பாராட்டி இருப்பார் என்றுதான் இசைஞானி சொல்லியிருக்கிறார். மற்றபடி, மோடியை எப்படி அவர் விமர்சித்து இருப்பார் என்று சொல்ல முடியாது. அவரால் மோடியை சகித்திருக்க முடியாது. அவர் இருந்திருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்திருக்க முடியாது. அவர் இன்னும் 5 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால், இந்தியாவின் தலையெழுத்தே மாறியிருக்கும்; திசை வழியே மாறியிருக்கும்.

இளையராஜா பாவம்
அவர் மறைந்த பிறகு இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். சனாதன கும்பலின் முதல் எதிரி அம்பேத்கர். ஆர்.எஸ்.எஸ் யின் அரசியலை இறுதி மூச்சுவரை மூர்க்கமாக எதிர்த்தார் அம்பேத்கர். இசைஞானி இளையராஜா போன்றவர்களை குறி வைப்பதே ஆர்எஸ்எஸ்ன் முக்கிய நோக்கம்... இளையராஜா பாவம்.. நான் இரக்கம் காட்ட விரும்புகிறேன்" என்று கூறியிருந்தார்..

திருமாவளவன்
தன் சொந்த கருத்தை சொல்லவோ, அல்லது தனக்கு விருப்பமான தலைவரை பாராட்டவோ ஒருவருக்கு தனிமனித உரிமை உள்ளது என்ற கோணத்தில்தான் பலரும் நேற்று முதல் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.. ஆனால், திருமாவளவனின் ஆதரவு பார்வையோ, சற்று வித்தியாசமாக பார்க்கப்பட்டு வருகிறது.. ஏராளமானோரால் அவரது கருத்தும் ஏற்கப்பட்டும் வருகிறது..

வன்னி அரசு
இதனிடையே விசிகவின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு காட்டமாக ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதில், "புரட்சியாளர் அம்பேத்கரோடு மோடியை ஒப்பிடுவதே அருவருப்பானது. சனநாயகத்தையும் சனாதனத்தையும் சமமாக ஒப்பிடுவதைப்போல அரசியல் ஏதும் உண்டா? சந்தனத்தையும் சாக்கடையையும் ஒன்றாக ஒப்பிட முடியுமா? இளையராஜாவையும் இசையே தெரியாத அரைவேக்காடை ஒப்பிடுவதைப்போலத்தான். இசைமேதை புரிந்து கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தி இருந்தார்..
Recommended Video

இளையராஜா
இதற்கு பிறகுதான் 2வதாக பதிவிட்ட ட்வீட்டில், "எத்தனை சோகங்கள் எத்தனை துயரங்கள் வந்தாலும் நம்மை ஆற்றுப்படுத்துவதும் தேற்றுவதும் இசை மேதை இளையராஜாவின் பாடல்கள் தான்.. ஆனால், இன்றோ அவரால் துயரப்படுகிறோம். இப்போது ஆற்றுப்படுத்துவதற்கு பாடல்கள் தேவை அல்ல; அம்பேத்கரியமே! அதுவே முழுமையான விடுதலை பாடல்!" என்று சற்று காட்டத்தை குறைத்து பதிவிட்டுள்ளார்.. எனினும் இளையராஜா குறித்த விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன..












Click it and Unblock the Notifications