கோடை விடுமுறை போக.. இப்போ மழை விடுமுறையா! பள்ளிக்கல்வித்துறை எடுக்க போகும் கசப்பான முடிவு! முக்கியம்
சென்னை: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில் தற்போது மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் பள்ளி கல்வித்துறை முக்கியமான ஒரு முடிவை விரைவில் எடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாட்டில் இந்த வருடம் கோடை வெயில் மிக மோசமாக இருந்தது. எப்போதும் இருக்கும் கோடை காலம் போல இல்லாமல் மிக மிக மோசமாக கோடை வெயில் வாட்டி எடுத்தது.

தமிழ்நாட்டில் இதுவரை இவ்வளவு மோசமாக கோடை வெயில் பதிவானதே இல்லை.. அதிலும் சென்னையில் இந்த அளவிற்கு வெயில் பதிவானதே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சென்னையில் வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருந்தது.
வெயில் குறையாமல் இருந்தது: கடந்த மாதம் 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. அதோடு 25ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்பின் ஜூன் 4ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்தது. ஆனால் கடந்த சனிக்கிழமை வரை சென்னையில் வெப்ப அலை முடியவில்லை. தென்மேற்கு பருவமழையும் தொடங்கவில்லை. வெயிலும் குறையவில்லை. இதனால் சனிக்கிழமை வரை மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி நேற்று வரை வெப்பநிலை பதிவானது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் இருந்தது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் இருந்தது.

சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இருந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் மீண்டும் சென்னையில் வெயில் அடித்து வந்தது.
இந்த கடும் வெயில் காரணமாக இந்த மாதம் 12 நாட்கள் தாமதமாகவே பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கடந்த 12ம் தேதி 6-12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டது. 1-5ம் வகுப்புகளுக்கு 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. 1ம் தேதியில் இருந்து 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு அதன்பின் மீண்டும் 12, 14 தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போன நிலையில் மீண்டும் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. விடா மழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
கசப்பான முடிவு: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில் தற்போது மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் பள்ளி கல்வித்துறை முக்கியமான ஒரு முடிவை விரைவில் எடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன.
அதன்படி பள்ளிகள் மீண்டும் திறந்த பின் இந்த டேர்ம் முழுக்க.. அதாவது காலாண்டு தேர்வு வரை தொடர்ந்து சனிக்கிழமை பள்ளிகளை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாம்.
இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் விசாரணை செய்ததில், ஏற்கனவே விடப்பட்ட விடுமுறைகளை கணக்கில் வைத்து சனிக்கிழமைகளில் கூடுதல் வகுப்பு நடத்த முடிவு செய்துள்ளோம்/ இப்போது மேலும் வரும் விடுமுறைகளை கணக்கில் வைத்து கூடுதலாக மேலும் சில சனிக்கிழமைகள் விடுமுறையை ரத்து செய்வோம்.
எவ்வளவு மணி நேரம் இழக்கப்பட்டு உள்ளதோ அதை வைத்து கூடுதல் சனிக்கிழமையை பணி நாட்களாக அறிவிப்போம் என்று கூறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications