ஸ்டாலினுக்கு பெருகும் "தலைவலி".. அன்று திருமாவளவன்.. இப்ப வேல்முருகன்.. "அவங்க" தான் காரணமாம்..!

திமுக நிர்வாகிகள் மீது வேல்முருகன் குற்றஞ்சாட்டி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சியினரை திமுகவினர் மரியாதையாக நடத்தவில்லை என்றும், திமுக நிர்வாகிகள் தங்கள் மனதை புண்படுத்துகிறார்கள் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த எம்பி தேர்தலின்போது ரொம்பவும் ஜாக்கிரதையாகவும், உஷாராகவும் காய் நகர்த்துகிறோம் என்ற பெயரில் திமுக, கூட்டணி விஷயத்தில் மொத்தமாக சொதப்பல் செய்துவிட்டது!

இதனால் தேமுதிக, பாமக செல்வாக்கு உள்ள வட மாவட்டங்களின் ஆதரவை திமுக முற்றிலும் இழக்க வேண்டி வந்தது. இந்த இரு கட்சி தொண்டர்களின் எதிர்ப்பையும் வரும் தேர்தலில் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் ஆளானது.

 வன்னியர்கள்

வன்னியர்கள்

அதனால்தான் வன்னியர்களின் எதிர்ப்பை சம்பாதித்துவிடக்கூடாது என்று, வடதமிழக தனி தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் திமுக போட்டியிடவும் முடிவு செய்தது.. கடைசி முயற்சியாக வேல்முருகனிடம் பேசிவும், அவரும் திமுகவுக்கு முழு ஆதரவு தருவதாக அறிவித்தார்.. வன்னிய ஓட்டுக்கள் திமுகவுக்கு சாதமாக விழும் எல்லா முயற்சிகளையும் வேல்முருகனும் அப்போது எடுத்திருந்தார்.

 வடமாவட்டம்

வடமாவட்டம்

வடமாவட்டத்தில் பாமகவுக்கு இணையாக இல்லாவிட்டாலும் கணிசமான வாக்குகள் வேல்முருகனுக்கு உள்ளது. மற்றொரு பக்கம் காடுவெட்டி குரு ஆதரவாளர்களும் வேல்முருகனுக்கு துணையாக இருக்கிறார்கள். இவை அத்தனையையும் திமுகவுக்கு வாக்குகளாக மாற்ற வேல்முருகன் களம் இறங்குவார்.. அதாவது பாமக பெல்ட்டில் உள்ள வேல்முருகனை வைத்து வாக்குகளை அள்ளவே திமுக பிளான் போட்டது.. அதில் வெற்றியும் கிடைத்தது.. இப்படித்தான் வேல்முருகனுக்கும், திமுகவுக்குமானஉறவு படர ஆரம்பித்தது.

திருமாவளவன்

திருமாவளவன்

இப்போது திமுக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளிடம் சில அதிருப்திகள் வெடித்து கொண்டிருக்கின்றன.. இதற்கு காரணம் சில திமுக நிர்வாகிகளின் அதிரடி போக்குகள் என்றும் கூறப்படுகின்றன.. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இந்த விவகாரம் தலைதூக்கவும் திருமாவளவன் ஓபனாகவே, தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தார்.. அதற்குபிறகுதான் முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகிகளை எச்சரித்தார்.. அவர்களை கண்டித்தார்.. நிலைமையும் சீரானது.

வேல்முருகன்

வேல்முருகன்


இப்போது வேல்முருகன் அடுத்த பிரச்சனையை கிளப்பி உள்ளார்.. சென்னை, கோயம்பேட்டில் உள்ள தனியார் உணவு விடுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்,கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், திமுக மீதான தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்


"ஊரக உள்ளாட்சி தேர்தலில் தங்களின் கட்சிக்கு போதுமான இடங்கள் ஒதுக்கப்படவில்லை.. இந்த முறையும் நடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு வழங்கபட்ட இடங்களை காட்டிலும் எங்களுக்கு மிக சொற்ப இடங்கள் தரப்பட்டது. பட்டம்பாக்கம் பேரூராட்சி துணைத்தலைவர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி துணைத்தலைவர், விருதாச்சலம் அல்லது பண்ருட்டி நகராட்சித் துணைத் தலைவர், நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் மூன்றில் ஒரு பதவி வழங்கப்படும் என்று முதல்வர் சொன்னார்.

 ராஜினாமா?

ராஜினாமா?

ஆனால் இந்த இடங்களை திமுகவினர் கைப்பற்றி முதல்வரின் உத்தரவிற்கு பிறகும் பதவியை ராஜினாமா செய்யாமல் காலம் தாழ்த்துகினற்னர்.. இன்றைக்கு மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவராக இருப்பதற்கு தங்களின் கட்சி சார்பாகவும் வாக்களித்து உள்ளோம்.. முதல்வரை சந்தித்து அளித்த வேண்டுகோளுக்கு கூட இதுவரை எந்த ஒரு பதிலும் இல்லை.. காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற திமுகவினர் முதல்வரின் உத்தரவுபடி பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், தங்களின் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டும் ராஜினாமா செய்யாமல் இருப்பது ஏன்?

 அதிருப்தி

அதிருப்தி


தமிழக வாழ்வுரிமை கட்சியினரை திமுகவினர் மரியாதையாக நடத்தவில்லை.. எத்தனையோ இடங்களில் திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் எங்களது கட்சியினரை புண்படுத்தி மனதளவில் காயப்படுத்துகிறார்கள்.. இவை அனைத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்" என்று வேதனை தெரிவித்தார். கூட்டணியில் உள்ள அடுத்தடுத்த தலைவர்கள், புகார்களை சொல்ல ஆரம்பித்துள்ளது, தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+