"பஞ்ச தந்திரம்".. அச்சாணியே முறியுதே.. யார் 5 புள்ளிகள்.. பட்ட பாடெல்லாம் போச்சா.. அசராத "மேலிடம்"
தமிழக பாஜகவில் உட்கட்சி பூசல்கள் தலைதூக்கி வருவதாக கூறப்படுகிறது
சென்னை: தமிழக பாஜகவில் பரபரப்பும், சலசலப்பும், முணுமுணுப்புகளும் ஓடிக் கொண்டிருக்கின்றன.. இந்த புகைச்சல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதுதான், பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. என்ன நடக்கிறது பாஜகவில்?
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்கள் என்பது இப்போதுவரை முடிவாகவில்லை.. திரைமறைவில் இதற்கான வேலைகள் நடக்கிறது என்றாலும், வெளிப்படையாக எதுவுமே தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன்பு, சசிகலா, ஓபிஎஸ் + டிடிவி தினகரன் விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்ய, 2 மேலிட தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த சேலத்திற்கு வந்தார்களாம்..

ஹோப் வானதி
அப்போது, ஆலோசனை நடத்த வந்த பாஜக மேலிட தலைவர்களிடம், "முதலில் தமிழகத்தில் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றுங்கள்.. மூத்த தலைவர்கள் சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்றோரை தலைவராக போடுங்கள். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் குறித்து பேசக்கூடாது... அப்படி செய்தால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அப்போது அவர்களிடம் சொன்னாராம்.. அந்த அளவுக்கு அதிமுக தலைவர்களே தமிழக பாஜக தலைமை குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

புகைச்சல்
தமிழக பாஜகவுக்குள்ளேயே இதே கோரிக்கைதான் கடந்த ஒரு வருட காலமாகவே மேலிடம் வரை பறந்து கொண்டிருக்கிறது.. சீனியர்கள் சிலரும், இதே புகாரை டெல்லி வரை கொண்டு சென்றுள்ளள்ளனர்.. காயத்ரி உள்ளிட்ட எத்தனையோ பேர் தமிழக பாஜகவில் இருந்தும் விலகி வரும் அல்லது நீக்கப்பட்டு வரும் நிலையிலும், அண்ணாமலை மீதே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.. ஒருபக்கம் எடப்பாடி தரப்பு, இன்னொரு பக்கம் தமிழக பாஜக தரப்பு, மற்றொரு பக்கம், அதிருப்தியாளர்கள் என அத்தனை பேரும் அண்ணாமலை மாற்றுங்கள் என்றே கோரிக்கையை டெல்லிக்கு விடுத்து வந்தநிலையில், அண்ணாமலை பதவி பறிக்கப்படுகிறதோ என்ற சந்தேகமும் எழுந்தபடியே உள்ளது.

கச்சேரி இருக்கு
அதற்கேற்றபடி, கடந்த சில நாட்களாகவே, சீனியர்களின் முணுமுணுப்புகளும் வெடித்து கிளம்பி உள்ளதாக கூறப்படுகிறது.. தங்களுக்கு எதிலும் முக்கியத்துவம் இல்லை என்பதால் டெல்லி தலைமையிடமும் இதுகுறித்து புலம்பியும், மேலிடம் எதையும் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.. தற்போது தமிழக அரசியலில், அண்ணாமலையின் காய்நகர்த்தலே மிகச்சரி என்று மேலிடம் நினைக்கிறதாம்.. அதனால்தான், சமீபத்தில் நடந்த கட்சி நிர்வாகிகள் நியமனத்திலும் கூட புதியவர்களாக, அதுவும் தனக்கு வேண்டியவர்களாக பார்த்து நியமனம் செய்திருக்கிறார் அண்ணாமலை என்ற குமுறல்களும் எழுந்திருக்கின்றன.

சிபி ராதா
அதுமட்டுமல்ல, எம்பி தேர்தலில் சீனியர்கள் யாருக்கும் சீட்டு தரக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம் அண்ணாமலை. இதனால், பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் போன்ற சீனியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்களும் கசிந்தபடியே உள்ளன.. இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு விஷயமும் கசிந்துள்ளது.. கடந்த மாதம் 22ம் தேதி, தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள் 3 பேரும், முக்கியமான மாநில நிர்வாகிகள் 2 பேரும் டெல்லி சென்றார்களாம்.. அங்கே பக்கத்து மாநில பாஜகவின் ராஜ்யசபா எம்பி ஒருவரின் வீட்டில் இவர்கள் அனைவரும் நீண்ட நேரம் ரகசிய ஆலோசனையும் நடத்தினார்களாம்.

ரகசிய மீட்டிங்
அப்போது எல்லாருமே மாறி மாறி புலம்பியிருக்கிறார்கள்.. அண்ணாமலைக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அதிகமாகி வரும் நிலையில், தங்களை யாருமே கண்டுகொள்வதில்லை, இதே நிலைமை நீடித்தால், கட்சியில் காணாமல் போய்விடுவோம், எம்பி சீட்டு கிடைப்பதும் சிக்கலாகிவிடும்.. எனவே, நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயல்பட வேண்டும் என்று நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்களாம்.. இப்படி ஒரு ரகசிய ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததே தமிழக பாஜகவில் 2ம் இடம் வகிப்பவரும், பக்கத்து மாநில முக்கிய அரசு பதவியில் இருப்பவரும்தானாம்.. இதுவரை பாஜகவில் கோஷ்டி பூசல் இருந்தது கிடையாது.. ஆனால், இனி கோஷ்டிகள் உருவாக ஆரம்பித்துவிட்டது, பெரிய பஞ்சாயத்து ஒன்று கமலாலயத்தில் காத்திருக்கிறது என்கிறார்கள்.

முருகன் துணை
ஏற்கனவே காயத்ரி விவகாரத்திற்கு பின்னால், எல்.முருகன் இருப்பதாக ஒரு பேச்சு உள்ளது.. முருகன் தரும் தைரியத்தினால்தான், காயத்ரி இப்படியெல்லாம் அண்ணாமலையை விமர்சித்து வருவதாகவும் சொன்னார்கள்.. அதனால்தான் கட்சியை விட்டு காயத்ரியை நீக்குவதற்காக பாஜக மேலிடம் ஓகே சொன்னதுமே, அந்த தகவல், முருகன் தரப்பு மூலம், காயத்ரிக்கு முன்கூட்டியே பாஸ் செய்யப்பட்டுவிட்டதாகவும், அதனாலேயே தன் பதவியை தானே முன்வந்து காயத்ரி ராஜினாமா செய்வதாகவும் சலசலப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன..

காந்தராஜ்
அதேபோல, இந்த முறை எப்படியாவது தனக்கு சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், கடந்த 6 மாத காலமாகவே, தன்னுடைய தொகுதியை பொன்.ராதா கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிகிறது.. ஆனால், சீனியர்களுக்கு சீட் கிடைக்குமா? என்பதே சந்தேகமாக இருக்கிறதாம்.. இப்படி எத்தனையோ பூடகமான தகவல்கள் வெளிவந்த நிலையில், உண்மையிலேயே சீனியர்கள் எல்லாம் என்ன செய்ய போகிறார்கள் என்று தெரியவில்லை.. சில நாட்களுக்கு முன்பு, மூத்த அரசியல் விமர்சனர் டாக்டர் காந்தராஜ், நம் ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி தந்திருந்தார்.. அப்போது அண்ணாமலை பற்றின கேள்வியை அவரிடம் நாம் எழுப்பினோம்.

மங்கும் குரல்கள்
அதற்கு காந்தராஜ், "அண்ணாமலையை பொறுத்தவரை, அவர் பெயரை அவராகவே கெடுத்து கொள்கிறாரே தவிர, ஊடகங்கள் அதற்கு காரணம் இல்லை.. அவர் பேசும் பேச்சுக்களை வைத்து பார்க்கும்போது, முதிர்ச்சியற்ற தலைவராக தெரிகிறார்.. அவரது பேச்சுக்களில் கண்ணியம் இல்லை, விஷயங்களும் இருப்பதில்லை.. கொள்கை ரீதியான விளக்கங்களும் இல்லை.. போராட்டங்களும் இல்லை.. விளையாட்டு பிள்ளை மாதிரி பேசினால் எப்படி? எல்.முருகனை அண்ணாமலை எதிர்ப்பதாக பேச்சு உள்ளது.. அதற்கு காரணம், எல்.முருகனை ஓரங்கட்டியதே அண்ணாமலைதானே.. அட்ரஸ் இல்லாத மந்திரியாக அவரை ஆக்கிவிட்டார்கள்.. அந்த கோபமாகவும் இருக்கலாம்..

ஓரம்போ ஓரம்போ
இதெல்லாம் உட்கட்சி பிரச்சனை.. கண்டிப்பாக எல்லா கட்சியிலும் இது இருக்கத்தான் செய்யும்.. 2 வருடமாக தமிழகத்தில் அடிபட்டு கொண்டிருந்த பாஜக தலைவர்களின் பெயர்கள் அத்தனையையும், புயல் மாதிரி அண்ணாமலை வந்து அடித்து ஓரங்கட்டிவிட்டாரே.. பாஜக என்றாலே அண்ணாமலை என்றாகிவிட்டதே.. அந்த சாமர்த்தியம் அண்ணாமலைக்கு உள்ளது.. அதற்கு அவருக்கு நாம் வாழ்த்துக்களை சொல்லலாம். ஆனால், ஒரு தேசிய கட்சிக்கு இது பலவீனமும்கூட" என்று சொல்லியிருந்ததையும், இங்கு நாம் நினைவுகூர வேண்டி உள்ளது..!!!

அப்செட்
என்னதான் ஆயிரம் விமர்சனங்களை அண்ணாமலை மீது வைத்தாலும், மேலிடத்தின் நன்மதிப்பை அண்ணாமலை நேரடியாகவே பெற்றுள்ளார் என்கிறார்கள்.. சமீபத்தில் கோவை வந்திருந்த பாஜகவின் தேசிய தலைவர் நட்டாவிடம் அண்ணாமலை குறித்து சில சீனியர்கள் நேரடியாகவே புகார்களை அடுக்கினார்களாம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட நட்டா, "நீங்கள் என்ன சொன்னாலும் சரி, 2026 வரை அண்ணாமலை தான் தலைவராக இருப்பார். எம்பி தேர்தலில் போட்டியிட்டு அவர் மத்திய அமைச்சரே ஆனாலும், அவரே மாநில தலைவராகவும் நீடிப்பார். அதனால், இனிமேல் யாரும் அண்ணாமலையை மாற்றச் சொல்லி டெல்லிக்கு பெட்டிஷன் போடாதீர்கள் என்று கண்டிஷனாக சொல்லிவிட்டாராம்.. இதனால் அண்ணாமலை தரப்பு இன்னும் குஷியாகி உள்ள நிலையில், சீனியர்களும் எடப்பாடி டீமும் அப்செட்டாகிவிட்டதாம்..!!
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications