Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் வேட்பாளரா ஸ்டாலின்? - கள நிலவரம் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஒரு திரியை கொளுத்திப் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். அந்தப் பொறி இப்போது தேசிய செய்தியாக மாறி இருக்கிறது.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது பிரதமர் வேட்பாளராக ஸ்டாலினை முன்வைக்கப்படுவாரா? எனக் கேட்டதற்கு 'ஏன் கூடாது' என்று மிகத் தைரியமாகப் பதிலளித்திருந்தார் அவர்.

கடந்த 2019, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் ராகுல்காந்தி பங்கேற்றபோது, வரும் காலத்தில் கூட்டணிக்கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுலே இருப்பார் என்று முதன்முதலாக ஸ்டாலின்தான் முன்மொழிந்தார்.

 Are there any chance MK Stalin as PM candidate in 2024 parliamentary elections?

ஆனால், இன்று அரசியல்களம் மாறிவிட்டது. மாநிலத்தின் முதல்வர் என்ற எல்லையைக் கடந்து இந்தியாவிலுள்ள பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஸ்டாலின் முதலிடத்தில் நிற்கிறார்.

அதனைத் தொடர்ந்து இன்றைக்குப் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் அவரது பெயரும் அடிபட ஆரம்பித்துள்ளது. அதை உறுதிசெய்யும் விதமாக இந்தியாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஃபரூக் அப்துல்லா கருத்து கூறி இருக்கிறார்.

இந்நிலையில் இந்தக் கருத்தை அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? அதைக் குறித்து அவர்களே சொல்கிறார்கள். படியுங்கள்.

 Are there any chance MK Stalin as PM candidate in 2024 parliamentary elections?

முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா

"திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, நாடாளுமன்றத்தில் நேருவின் கொள்ளுப் பெயரன் சொல்கிறார். இந்திராகாந்தியின் பெயரன் சொல்கிறார். ராஜீவ்காந்தியின் மகன் சொல்லுகிறார். பிரதமர் மோடியைப் பார்த்து, 'முடிந்தால் தமிழ்நாட்டில் போய் நின்று பாருங்கள்' என்று.

இந்தியாவை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட, உங்களுக்குக் கடைசி இடமாகத் தமிழ்நாடுதான் விளங்குகிறது. அதை உருவாக்கிக் கொடுத்த பெருமை திராவிட இயக்கத்தைச் சார்ந்தது என்பது எங்களுக்குப் பெருமை. பெரியார் சொன்னார், 'தேசியம் என்பது கற்பிதம்' என்றார்.

மேலும், 'தேசியம் என்பது அயோக்கியர்களின் கடைசி புகலிடம்' என்றார். அவரது கோபத்தின் நியாயத்தை உணர்வதற்குத் தேசியவாதியான ராகுல்காந்திக்கு 50 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. அதை உணர்த்தி காட்டிய பெருமை எங்களின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு மட்டும்தான் உண்டு.

நாடாளுமன்றத்தில் முதல்நாள் மோடி பேசினார், 'இங்குள்ள உறுப்பினர்கள் என்னை நம்பவில்லை என்றால் பரவாயில்லை. வெளியே உள்ள 140 கோடி மக்கள் என்னை நம்புகிறார்கள்' என்று.

 Are there any chance MK Stalin as PM candidate in 2024 parliamentary elections?

மறுநாள் நான் பேசினேன். 'மிஸ்டர் மோடி, உங்களை 140 கோடி பேர் நம்புவதாகச் சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? இந்த நாடாளுமன்ற அவையில் உள்ள 210 உறுப்பினர்கள் உங்களை ஏற்கவில்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் 20 லட்சம் மக்களின் பிரதிநிதி.

அப்படி என்றால் 210க்கு எனக் கணக்கிட்டால், சராசரியாக 45 கோடி பேர் மோடியை ஏற்காமல் மக்களின் பிரதிநிதியாக அவைக்குள் இருக்கிறோம்.

நாங்கள் அனைவரும் 'மோடி வேண்டாம்' எனச் சொல்லி ஓட்டு கேட்டு, வெற்றிபெற்று இந்த அவைக்குள் வந்துள்ளோம். அப்படி என்றால் 140கோடி பேர் உங்களை நம்புவதாகச் சொல்ல உங்களால் எப்படி முடியும் எனப் பேசினேன். அவை குறிப்பில் அந்தப் பேச்சு இருக்கிறது, போய் பாருங்கள். அந்தத் தைரியத்தை இந்தத் திமுகதான் எனக்குக் கொடுத்திருக்கிறது.

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், இன்றைக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மட்டும் அல்ல; மோடியைக் கட்டுப்படுத்தும் முதலமைச்சர்" என்கிறார்

 Are there any chance MK Stalin as PM candidate in 2024 parliamentary elections?

பத்திரிகையாளர் எஸ்.பி.லக்ஷ்மணன்

இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, "நான் ஏற்கெனவே தேசிய அரசியலில்தான் இருக்கிறேன்" என்று விளக்கம் அளித்தார்.

அது குறித்து பத்திரிகையாளர் எஸ்.பி.லக்ஷ்மணன் என்ன சொல்கிறார்? "தேசிய அரசியலில் திமுகவின் பங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ளதை நாம் அறிவோம். பிரதமரைத் தேர்வு செய்வதில் அல்லது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதில் ஒரு முக்கிய சக்தியாக முன்னாள் முதல்வர் கருணாநிதி இருந்துள்ளார்.

இன்றைக்கு பாஜக எதிர்ப்பில் திமுக தேசிய அளவில் அரசியல் செய்துவருகிறது. அதில் ஸ்டாலினின் பங்கு பெரிய அளவிலிருந்து வருகிறது. ஆகவேதான் அவர் நான் முன்பே தேசிய அரசியலில் உள்ளேன் என்கிறார். 100% சரியான வார்த்தை.

தேசிய அரசியல் என்பது டெல்லியில் உட்கார்ந்து கொண்டு தினசரி பத்திரிகையாளர்களைச் சந்திப்பது, உத்தரப்பிரதேசம் போவது, இமாச்சல பிரதேசம் போய் பிரச்சாரம் செய்வது இவை மட்டுமே தேசிய அரசியல் ஈடுபாடு என்று அர்த்தம் அல்ல.

தேசிய அரசியலில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து அடுத்து எப்படி நகர்த்திக்கொண்டு செல்வது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவதுகூட தேசிய அரசியல்தான். அதை ஏற்கெனவே ஸ்டாலின் செய்து வருகிறார்" என்கிறார்

இவரிடம் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் பேச்சுக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றோம். அதற்கு அவர், "அவரது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மிகத்தெளிவாகச் சிலருக்கு ஒரு செய்தியைத் தெரிவித்திருக்கிறார்.

 Are there any chance MK Stalin as PM candidate in 2024 parliamentary elections?

அதாவது காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி என்பது அது பாஜகவுக்குச் சாதகமாகத்தான் போய் முடியும் என்பதைச் சுட்டுக்காட்டி இருக்கிறார். இதை யாருக்குச் சொல்கிறார் என்றால், மம்தாவுக்கும் அகிலேஷ் யாதவுக்கும் சந்திரசேகர ராவ் உள்ளிட்டவர்களை மனதில் வைத்துத்தான் அவர் சொல்கிறார்.

காங்கிரஸ் தலைமை ஏற்காத, பாஜக கூட்டணியை விரும்பாத இந்தத் தலைவர்கள் மூன்றாம் அணியை அமைக்கும் முயற்சி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதை உணர்ந்துதான் ஸ்டாலின் இதனைக் கூறுகிறார்" என்றவரிடம் ஸ்டாலின் வரும் 2024 யார் பிரதமராக வரவேண்டும் என்ற முடிவெடுக்கப் போகின்ற தேர்தல் இல்லை.

யார் பிரதமராக வரக் கூடாது என்பதைத் தீர்மானிக்கப்போகும் தேர்தல் என்கிறார். இதன் மூலம் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதை அழுத்தமாக அவர் சொல்லி இருக்கிறார். அப்படி என்றால் யார் பிரதமர்?

"ஸ்டாலின் பிரதமர் யார் என்று சொல்லவில்லை. இந்தக் கட்சியிலிருந்துதான் வருவார் என்பதையும் சொல்லவில்லை. நமக்கும் அந்த வாய்ப்பு உள்ளது என்பதை உணர்ந்தே அவர் அப்படிப் பேசி இருக்கிறார். அப்படிப் பார்த்தால், நவீன் பட்நாயக், சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி ஆகியோரின் வரிசையில் இப்போது மு.க.ஸ்டாலினும் இருக்கிறார்.

 Are there any chance MK Stalin as PM candidate in 2024 parliamentary elections?

தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம்:

மதுக்கூர் ராமலிங்கம் "சோவியத் ஒன்றியத்தை ஆண்ட ஜோசப் ஸ்டாலின், அன்றைக்கு இரண்டாம் உலகப் போரிலே ஹிட்லரின் பாசிசத்தை முறியடித்து உலகநாயகனாக உயர்ந்தார். அதே பாசிசத்தின் இந்திய வடிவமாக இருக்கின்ற சனாதன தர்மத்தின் சல்லிவேரை அறுக்கின்ற சக்தியாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ஒன்றிய அரசு என்ற ஒற்றை வார்த்தையில் ஒட்டுமொத்த சங்கிகளைக் கதறவிட்டவர். 'கருணாநிதியைவிட அதிகம் ஆபத்தானவர் ஸ்டாலின்' என்று அஞ்சும் அளவுக்கு அரசியல் செய்பவர். தற்போது அவருக்குத் தேசிய அரசியல் களம் சாதகமாக இருக்கிறது" என்கிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+