"சக்ஸஸ்" ஓபிஎஸ்ஸூக்கே?.. ஏகப்பட்ட "பிளஸ்" இருக்காமே.. கிளைமேக்ஸை நெருங்கும் அதிமுக பொதுக்குழு கேஸ்

எடப்பாடி பழனிசாமி தரப்பு முன்வைக்கும் வாதங்கள் கோர்ட்டில் எடுபடுமா என்ற சந்தேகம் நிலவுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டப்படியும், விதிப்படியும் ஓபிஎஸ் தரப்பு பக்கமே சாதகமான விஷயங்கள் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பொதுக்குழு குறித்து கருத்து கூறி வருகிறார்கள்.

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இன்று பிற்பகல் சுப்ரீம்கோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பினர் ஈபிஎஸ் தரப்பினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வாதம் செய்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், "கட்சி விதிகளின்படி, ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரிக்கையின் அடிப்படையில் பொதுக்குழுவை கூட்ட முடியும். அதன்படி தான் கடந்த ஜூலை மாதம் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. எனவே அந்தப் பொதுக்குழு சட்டவிரோதமானது அல்ல" என்று வாதிடப்பட்டது.

டாக்குமெண்ட்கள்

டாக்குமெண்ட்கள்

அப்போது ஓபிஎஸ் தரப்பில், "ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனது அனுமதி இல்லாமல் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு தேர்தல் தொடர்பான ஆவணங்களில் கூட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில்தான் ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கடந்த 2022 ஜூலை 11-க்கு முன்னர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றிருந்த நிலையே மீண்டும் தொடர வேண்டும்.. ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும்" என்று வாதிடப்பட்டது.

 ஜெ.ஜெ.

ஜெ.ஜெ.

செயற்குழு என்றால் என்ன? பொதுச்செயலாளர் பொறுப்பை மாற்றி இரட்டை தலைமையை உருவாக்கியது பொதுக்குழுவா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு ஓபிஎஸ் தரப்பு பதிலளித்தது.. மேலும் ஜெயலலிதா மரணத்திற்கு பின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவியே நிர்வாக பதவி என்றும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலம் 5 வருடங்கள் இதில் நிர்வாகிகள் நியமனம் உட்பட அனைத்திலும் இருவரும் இணைந்தே முடிவு எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் நீதிபதிகளிடம் வாதத்தை முன் வைத்துள்ளனர்.

 கிளம்பிய டவுட்

கிளம்பிய டவுட்

மேலும், பொதுச்செயலாளர் பதவியை குறுக்கு வழியில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முயற்சி செய்து வருவதாகவும், குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு செயல்பட்டு வருவதாகவும் ஓபிஎஸ் தரப்பு நீதிபதியிடம் மேலும் குற்றஞ்சாட்டியது.. இந்நிலையில், மேற்கண்ட இந்த குற்றச்சாட்டு குறித்து, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பிரபல டிவி சேனல் ஒன்று கேள்வி எழுப்பியது.. இதுபோன்ற குற்றச்சாட்டுகள், பொதுக்குழு வழக்கிற்கு உறுதுணையாக இருக்குமா? என்றும் சந்தேகம் கேட்கப்பட்டது.

தெளிவு

தெளிவு

அதற்கு ரவீந்திரன் துரைசாமி அளித்த பதில்தான் இது: "இரட்டை தலைமையில்தான், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரு பதவிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.. இந்த பதவிகள்தான், தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.. இரட்டை தலைவர்களாக இருவருமே அங்கீரிக்கப்பட்டுள்ளனர்.. வரும் 2026வரை இந்த பதவிகள் செல்லுபடியாகும் என்று இன்றைக்கும் தேர்தல் ஆணையத்தில் உள்ளது.. இதைதான் ஓபிஎஸ் தரப்பினர் வாதங்களாக முன்வைத்து வருகிறார்கள்..

 ஸ்டிராங் பாயிண்ட்

ஸ்டிராங் பாயிண்ட்

தெளிவான முறையில் தேர்தல் நடத்தப்பட்டு, 2 தலைவர்கள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.. ஆனால், இதற்கு மாறான எடப்பாடி தரப்பினர் முன்வைக்கும் வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்குமா என்பது கேள்விக்குறிதான்.. காரணம், இவர்கள் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது கிடையாது.. முறையான தேர்தல் என்றால், வேட்பு மனு தாக்கல், அதில் போட்டியிடுபவர்கள் யார் யார்? அவர்களின் வேட்பு மனு செல்லுபடியாகுமா? ஆகாதா? என்ற பரிசீலனைகள் எதுவுமே இல்லை. அதனால் எப்படி பார்த்தாலும், சட்டரீதியாக பல விஷயங்கள் ஓபிஎஸ்ஸுக்கு ஸ்ட்டிராங்காகவே உள்ளன என்பதே நம்முடைய பார்வை.. என்றாலும், நீதிமன்ற தீர்ப்பு எப்படி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+