"உல்டா"வா போச்சே.. வலையை "மாற்றி" வீசும் திமுக.. ஆட்டத்தை கலைத்தாடும் எடப்பாடி: காரணம் "அவர்" ஒருவரே
மநீம இந்த முறை திமுக அல்லது அதிமுக இரண்டில் யாருடன் கூட்டணி வைப்பார்
சென்னை: கடந்த வாரம் வட்டமடித்து கொண்டிருந்த ஒரு அனுமானத்துக்கு, மநீம முற்றுப்புள்ளி வைத்துள்ளது.. அத்துடன் தன்னுடைய கூட்டணி நிலைப்பாட்டிலும், கமல் தந்த சிக்னல், எதிர்க்கட்சிகளை அதிர செய்து வருகிறது.
மநீம பொறுத்தவரை, இந்த முறை தேர்தலில் தங்களை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும், தங்களின் எதிர்கால அரசியலை தீர்மானிக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது..
அதனால்தான், தனித்து போட்டியிடுவோம் என்று துணிந்து சொல்ல முடியாத நிலைமை மய்யத்துக்கு சூழ்ந்துள்ளது.. அதேபோல, மய்யத்தை தாங்கி பிடித்த பல தூண்கள் இன்று அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றுவிட்டார்கள்.. தேர்தல்களில் அடுத்தடுத்த தோல்விகளில் தொண்டர்களும் சோர்ந்து உள்ளனர்.. அதனால், கூட்டணி என்ற விஷயத்தை தவிர்க்க முடியாத நிலைமை, கமலுக்கு ஏற்பட்டுள்ளது.

ப்ளான் 3
திமுக வலுவாகவே இருந்தாலும்கூட, வலிமை பொருந்திய பாஜகவை எதிர்க்க, மெகா எதிர்ப்பு கூட்டணி ஒன்று இங்கு தேவையாக இருக்கிறது.. அந்தவகையில், மநீம எப்படியாவது திமுக கூட்டணிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்றும், கமலுக்கு களத்தில் இருக்கும், இரண்டரை சதம் வாக்குவீதத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் திமுகவுக்கு உள்ளதாக தெரிகிறது.. எப்படியாவது மய்யத்தை திமுகவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற அசைன்மெண்ட் உதயநிதியிடம் தரப்பட்டு, கூட்டணி தொடர்பாக சீட் விவகாரமும், தொகுதி உடன்பாடும் மறைமுகமாக நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன.

1+1 அனுமானம்
1+1 சீட்களை மய்யத்துக்கு ஒதுக்கீடு செய்வது அல்லது 2 மக்களவை தொகுதிகளை மய்யத்துக்கு ஒதுக்கீடு செய்வது, பாஜக போட்டியிடும் தென் சென்னை அல்லது கோவையிலேயே களமிறக்கலாமா என்று யோசனை செய்வது என பரபரப்பு யூகங்களும் பறந்துகொண்டே இருக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான் கடந்த வாரம், மூத்த பத்திரிகையாளர் மணி ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், "ஓபிஎஸ் + எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைந்து, அதில், டிடிவி தினகரன் + டாக்டர் கிருஷ்ணசாமி+ பாஜக + பாமக + வாசன் + தேமுதிக இன்னும் சில கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்தித்தால், 2024 தேர்தலில், மிகப்பெரிய வலிமை வாய்ந்த கூட்டணியாக இருப்பார்கள்.. இந்த அதிமுக கூட்டணியில் கமலும் சேருவார் என்கிறார்கள்" என்று தன்னுடைய அனுமானத்தை கூறியிருந்தார்.

தூண்டில்
அந்தவகையில், கமலுக்கு அதிமுக தரப்பும் தூண்டில் போடுவதாக தெரிகிறது.. எனினும், மய்யம், அதிமுகவுடன் கூட்டணியா? திமுகவுடன் கூட்டணியா? என்ற குழப்பமும் சந்தேகமும் அதிகரித்தபடியே வந்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான், ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இந்த யாத்திரையில் கமல்ஹாசனுடன் அக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.. சென்னையில் நேற்றுமுன்தினம், மய்யத்தின் மா.செ.க்களுடன் கமல் ஆலோசனை நடத்திய நிலையில், இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கமல் + காங்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் உள்ளது.. ஏற்கனவே திமுகவுடன் கமல் கூட்டணி வைப்பார் என்ற அனுமானங்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் நிகழ்வில் கமல் பங்கேற்பது கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்வது போலவே உள்ளது.. அதாவது, திமுக + காங்கிரஸ் + கமல் என்ற கூட்டணி ஓரளவு தெரியவருகிறது.. அதேபோல இன்னொரு விஷயத்தையும் அரசியல் பார்வையாளர்கள் விளக்குகிறார்கள்.. காங்கிரஸை பொறுத்தவரை திமுகவுடன் நெருடல் போக்கே உள்ளது.. சில விஷயங்களில் திமுகவுடன் உடன்படாமலும், அதிருப்தியிலும் உள்ளது.

ரேட் எகிறியது
கடந்த முறையைவிட இந்த முறை அதிக சீட் கேட்போம் என்றும், காங்கிரஸ் இல்லாமல் திமுகவால் வெற்றி பெற முடியாது என்றும் அழகிரி கூறியிருந்ததுடன், திமுகவுக்கும் ஒரு ஜெர்க் தந்துள்ளதாகவே தெரிகிறது.. கூட்டணி ரேட்டை அழகிரி உயர்த்த காரணமும் விளங்காமல் இல்லை.. பாஜக மேலிட தலைவர்களை, எடப்பாடி பழனிசாமி எதிர்க்க துணிந்துவிட்டார் என்ற செய்திகள் அரசல் புரசலாக எழுந்தபோதே, காங்கிரசுடன் எடப்பாடி சேர போகிறார் என்ற தகவலும் வட்டமடித்தது.. ராகுலுக்கு போனை போட்டு எடப்பாடி பேசியதாகவும் சொன்னார்கள்..

மிதுன் மிதுன்
எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், அரசியல் ஆலோசகர் சுனிலுடன் இணைந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதாகவும், விரைவில் பாஜகவுக்கும் துரோகம் செய்துவிட்டு, காங்கிரசுடன் எடப்பாடி சேர போகிறார் என்றும், ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ், பற்றவைத்திருந்தார்.. எடப்பாடியுடன் காங்கிரஸ் நெருங்கி வருவதாக, எடப்பாடியின் ஐடி விங்கிலேயே செய்திகள் பரப்பி விடப்படுவதாக, இன்னொரு பரபரப்பும் கிளம்பியது. இப்படி எத்தனையோ யூகங்கள் வெளிவந்தபடி உள்ளதால், எடப்பாடி உண்மையிலேயே காங்கிரசுடன் கூட்டணி வைக்க போகிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.. அப்படி கூட்டணி வைத்தால், அதிமுகவுடன் கமலும் இணைவாரா? என்பதும் தெரியவில்லை..

இடியாப்ப சிக்கல்
எப்படி பார்த்தாலும், எடப்பாடி பழனிசாமி முன்னெடுக்க போகும் கூட்டணியை வைத்துதான், திமுகவின் கூட்டணியும் உறுதிசெய்யப்படும் என தெரிகிறது.. இன்னொன்றையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. காங்கிரஸை தவிர்த்துவிட்டு, திமுக தனித்து போட்டியிட்டால், இஸ்லாமிய மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெறுவதிலும் சிக்கல் உள்ளது.. அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் திமுக தொடர்ந்து வெற்றி பெற வேண்டுமானால், அது காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் இணைந்து சென்றால் மட்டுமே சாத்தியம் என்பதையும் நாம் அழுத்தமாக பதிவு செய்ய வேண்டி உள்ளது.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications