"ஹரிஜன்".. ரவி என்ன ஆளுநரா?.. அரசியல்வாதியா?.. "சாத்தானின் பிள்ளையா".. வன்னி அரசுக்கு வந்த கோபம்
ஆளுநர் ரவியின் செயல்பாட்டை கண்டித்து வன்னி அரசு ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை ஆளுநர் விஷயத்தில் விசிகவின் வன்னி அரசு போட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
நீட் விவகாரத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்த நிலையில், திமுகவுக்கு அடுத்து, ஆளுநருக்கு அதிக கண்டனத்தை தெரிவித்தது திருமாவளவன்தான்.
அதேபோல, சட்டசபையில் கடந்த வாரம் துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமனம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு முதலில் முன்வந்து ஆதரவு தந்ததும் விசிக தான்.

சிந்தனைசெல்வன்
அதுமட்டுமல்ல, இந்த விவாதத்தின்போது, விசிகவின் சிந்தனை செல்வன் பேசிய பேச்சு தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.. ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநர் ரவியை காலி செய்ய வேண்டும், அவருக்கு வேறு இடத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.. நீட் விவகாரம் தலைதூக்கியபோது, ஆளுநருக்கு மசோதா தீர்மானங்களை திருப்பி அனுப்ப ஷரத்தில் இடமுள்ளதா? என்ற சந்தேகம் பரவலாக எழுந்தது.

திருமாவளவன்
அதற்கு திருமாவளவன் ஒரு கருத்து கூறியிருந்தார்.. ஆளுநருக்கு திருப்பி அனுப்புகிற அதிகாரம் உண்டு எந்த அடிப்படையில் என்றால் அந்த மசோதாவில் திருத்தம் கோர வேண்டும் அல்லது விளக்கம் கோர வேண்டும் என்ற அடிப்படையில் வேண்டுமானால் திருப்பி அனுப்பலாம்.. ஆனால், ஆளுநர் ரவி, அந்த நீட் மசோதாவை திருப்பி அனுப்பவில்லை, மாறாக நிராகரித்திருக்கிறார். அதனை நிராகரிக்க கூடிய அதிகாரம் ஆளுநருக்கு இல்லை.. ஆகவே ஆளுநர் அதிகார வரம்பு மீறல் செய்திருக்கிறார்" என்று ஆணித்தரமாக கூறிருந்தார் திருமாவளவன்.

ஆளுநர் ரவி
இப்படி ஆளுநர் விஷயத்தில் தொடர்ந்து தங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வரும்நிலையில், மீண்டும் ஆளுநர் செயல்பாட்டை விமர்சித்துள்ளது விசிக.. நேற்று மே தினத்தன்று, தலித் இனத்தை சேர்ந்த இளைய தலைவர்களை, ஆளுநர் ரவி சந்தித்துள்ளார்.. அதுகுறித்த ஒரு ட்வீட்டும் ஆளுநர் மாளிகை தரப்பில் போடப்பட்டுள்ளது.. அந்த தலித்துகள் என்பதற்கு பதிலாக ஹரிஜன்கள் எனற வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருந்தது.. அத்துடன் சம்பந்தப்பட்ட போட்டோவும் பதிவிடப்பட்டிருந்தது.

ஹரிஜன்
இதற்கு தான் வன்னி அரசு கொந்தளித்துள்ளார்.. பதிலுக்கு தானும் 2 ட்வீட்களை பதிவிட்டுள்ளார்.. அதில், தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் போடப்பட்ட மசோதாக்களுக்கு சட்டவடிவம் கொடுக்க வேண்டிய கடமையை செய்யாமல், ஒரு அரசியல்வாதியை போல செயல்படுவது ஆளுநருக்கு அழகா? தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க தலித்கள் மீது கும்பல் படுகொலைகளும் ஆணவப்படுகொலைகளும் நடந்துவருகின்றன.

இந்துத்துவ கும்பல்
இப்படுகொலைகளை சனாதனத்தை ஏற்றுக்கொண்ட இந்துத்துவக்கும்பல் தான் நடத்துகின்றன. இக்கொடுமைகளை கண்டும் காணமல் இருந்து கொண்டு, இப்படி தலித்களோடு போட்டோவுக்கு போஸ் கொடுப்பது ஏமாற்று வேலை தானே? அது சரி, தலித்களை அரிஜன் என அழைக்கும் நீங்கள் என்ன சாத்தானின் பிள்ளையா? என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். இந்த ட்வீட்டுக்கு சிறுத்தைகள் பலரும் திரண்டு வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.. அத்துடன், "எல்லாரும் தொப்பி அணிந்து இருக்கிறார்கள்...ஆளுநர் மட்டும் அணியவில்லையே ஏன்" என்றும் அந்த ட்வீட்டில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications