சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 "சம்பவம்" இருக்காமே.. நாளும் குறிச்சாச்சு.. ஆளுநரை அவர் சந்திக்கிறாரா.. அதென்ன "எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்?"

எடப்பாடி பழனிசாமி படுகுஷியில் இருக்க காரணம் என்ன? 7ம் தேதி என்ன நடக்க போகிறது?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசியல் களத்தில் 2 சம்பவங்கள், அடுத்த 2 நாளில் நடக்க போவதாக கூறப்படுகிறது.. இது மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பேயே, உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்துக்கு செல்லும் பகுதிகளில் எல்லாம், ஒரு தலைவருக்கான உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டு வந்ததை மறுக்க முடியாது.

எம்பி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதற்கு உதயநிதி ஸ்டாலினின் பிரசார ராசியும் ஒரு காரணம் என்று கட்சி தொண்டர்கள் மத்தியில் வெளிப்படையாகவே பேசப்பட்டது...

திமுக இளைஞரணி அமைப்பாளர் திடீர் ராஜினாமா.. அப்செட்டில் ஸ்டாலின்.. மூத்த எம்.பியை அனுப்ப திட்டம்!திமுக இளைஞரணி அமைப்பாளர் திடீர் ராஜினாமா.. அப்செட்டில் ஸ்டாலின்.. மூத்த எம்.பியை அனுப்ப திட்டம்!

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

தற்போது, எம்எல்ஏ ஆன பிறகு, கட்சி கூட்டங்களிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அதிகம் வழங்கப்பட்டு வருகிறது... சட்டசபையிலும் உதயநிதி வரும்போது, அவருக்கு எம்எல்ஏக்கள் அதிக மரியாதை கொடுத்து வருகின்றனர். எனினும் அவர் அமைச்சராகி மாநிலம் முழுவதும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

 2 விஷயங்கள்

2 விஷயங்கள்

இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆவதால் இந்தமுறை அமைச்சரவை மாற்றம் நடைபெறும் போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி விடுவார் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து சொல்லி வருகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானால், உள்ளாட்சி துறை பதவி நிச்சயம் கிடைக்கும் என்றும் அறிவாலய வட்டாரங்கள் அடித்து சொல்கிறார்கள். எப்படியும் வரும் 7-ம் தேதி அமைச்சராக பொறுப்பேற்பார் என்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான் 2 விஷயங்கள் கசிந்து வருகிறது.

 ஆளுநர் மாளிகை

ஆளுநர் மாளிகை

அதன்படி, வரும் 7ம் தேதி, உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்திக்க போகிறாராம்.. அதாவது, ஆளுநர் மாளிகையிலேயே அவர் அமைச்சராகவும் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது.. அந்த நாளில், டிஆர்பி ராஜா, திமுக எம்எல்ஏ தாயகம் கவி ஆகியோரும் உதயநிதியுடனுட ன் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில், யார் யாருக்கு என்னென்ன துறைகள் என்பதுதான் தெரியவில்லை.

 எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்

எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்

அதுமட்டுமல்ல, உதயநிதி ஸ்டாலினின் காரில், அமைச்சர்களின் காரில் முன்பகுதியில் பொருத்தப்படும் இலச்சினை போலவே, உதயநிதியின் காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்தான் அமைச்சர் பதவியை ஊர்ஜிதம் செய்து வைத்தும் வருகிறது.. மற்றொரு பக்கம், அதே 7-ம் தேதிக்கு பிறகு, கொடநாடு விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

சசிகலா

சசிகலா

இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில், சசிகலாவிடம் திடீரென 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.. அப்போது அவர் தந்த சில முக்கிய தகவல்களின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக கூறினார்கள்.. அந்த வகையில் வரும் 7ம் தேதிக்கு பிறகு இந்த விசாரணை நடக்கலாம் என்கிறார்கள்..

 வாக்குமூலங்கள்

வாக்குமூலங்கள்

ஆனால், "கொடநாடு விவகாரத்தில் எடப்பாடிக்கு சம்மன் அனுப்ப முடியுமா? நேரடியாக சிக்க வைக்க ஆதாரம் உள்ளதா" என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு, திமுக மேலிடம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை விசாரித்துள்ளது.. அதற்கு அதிகாரிகள், "எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக இருப்பது வெறும் வாக்கு மூலங்கள் மட்டுமே, நேரடியாக அவரை தொடர்புபடுத்தும் ஆதாரங்கள், சந்திப்புகள், ஆடியோ-வீடியோ காட்சிகள் எதுவும் கிடையாது, இருப்பதெல்லாம் குற்றவாளிகள் தரப்பிலிருந்து கிடைத்த வாக்குமூலங்கள்தான், இதனை வைத்து எடப்பாடி மீது வழக்குப் போட்டால் அவர் எளிதில் நிரபராதி என வெளியே வந்து விடவே வாய்ப்புகள் அதிகம்" என்றார்களாம்..

 குஷியோ குஷி

குஷியோ குஷி

இந்த தகவல் எடப்பாடிக்கும் எட்டியதையடுத்து, பெருத்த குஷியை அவருக்குள் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.. எனினும், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்பட்டாலும்கூட, அந்த அளவு காட்டமான முடிவை தராதது என்றும் சொல்லப்படுகிறது.. ஆக மொத்தம் 7-ம் தேதி முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும் என்றுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. பார்ப்போம்..!

English summary
Are there reasons for edapadi palanisamy to be happy and What is going to happen on the 7th எடப்பாடி பழனிசாமி படுகுஷியில் இருக்க காரணம் என்ன? 7ம் தேதி என்ன நடக்க போகிறது?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X