சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாசத்துக்கு ஒன்னு.. 10 காவிகள்.. ரெடியா இருங்க! தமிழ்நாட்டிற்காக அமித் ஷாவின் மெகா "அஸ்திரம்".. ஆஹா!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டிற்காக பாஜக முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய அளவில் வலிமையான கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. ஆனால் நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு இருக்கும் பெரும்பாலான இடங்கள் வட மாநிலங்களில் இருந்து வந்த இடங்கள்தான்.

தென் மாநிலங்களில் குறைவான அளவிலேயே பாஜக எம்பிக்கள் உள்ளனர். தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக கொஞ்சம் வலிமையாக உள்ளது.

தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாட்டில் பாஜக இன்னும் வளர்ச்சி அடையவில்லை. இந்த 4 நான்கு மாநிலங்களை கைப்பற்றுவதற்காக பாஜக கடந்த சில மாதங்களாகவே பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

மேகாலயாவிலும் உடைகிறது பாஜக கூட்டணி? ஒரு மாதத்திற்குள் முடிவு.. அமித் ஷா பிளான்! காரணம் இதுதான்மேகாலயாவிலும் உடைகிறது பாஜக கூட்டணி? ஒரு மாதத்திற்குள் முடிவு.. அமித் ஷா பிளான்! காரணம் இதுதான்

என்ன பிளான்?

என்ன பிளான்?

இதற்காக தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்தில் நடிகர்களுடன் ஆலோசனை, என்டிஆர் குடும்பத்துடன் ஆலோசனை, சில முக்கிய மத போதகர்களுடன் ஆலோசனை என்று பாஜக பிஸியாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு, கேரளாவிற்கு இன்னும் பாஜகவால் முறையான திட்டத்தை களமிறக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் இதுவரை பாஜக செய்த முயற்சிகள் எதுவும் பெரிதாக அக்கட்சிக்கு உதவியாக இல்லை. பல சினிமா நடிகர்களை களமிறக்கியும் பாஜகவால் தமிழ்நாட்டில் வலுவாக காலூன்ற முடியவில்லை.

வார்டு பிரச்சனை

வார்டு பிரச்சனை

முக்கியமாக தமிழ்நாட்டில் பாஜகவிற்கு இருக்கும் பிரச்சனையே வார்டு ரீதியாக அக்கட்சி வலிமையாக இல்லை. வார்டு அளவிலும் சரி, வாக்குச்சாவடி அளவிலும் சரி அக்கட்சிக்கு முகவர்கள் மிக மிக குறைவாக உள்ளனர். பல மாநிலங்களில் பாஜக தேர்தல்களில் வெற்றிபெறவே இந்த முகவர்கள்தான் முக்கிய காரணமாக இருந்தனர். ஆனால் அக்கட்சியால் தமிழ்நாட்டில் கிரவுண்ட் லெவல் அளவில் இன்னும் வளர்ச்சி அடையவில்லை.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இதனால் தமிழ்நாடு பாஜக பாஜக நிர்வாகிகள் மீது அமித் ஷா அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்த அளவிற்கு பாஜக அடிமட்ட அளவில் முன்னேற்றம் அடையவில்லை என்ற ரிப்போர்ட் அமித் ஷாவிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவில் உட்கட்சி தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகளை போட்டோம். ஆனால் அவர்கள் அமைப்பு ரீதியாக இதுவரை கட்சியை பலப்படுத்தவில்லை. எங்கும் நிர்வாகிகள் எண்ணிக்கை உயரவில்லை என்று அமித் ஷா அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

 பாஜக திட்டம்

பாஜக திட்டம்

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டிற்காக பாஜக முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி தமிழ்நாட்டிற்காக 10 அமைச்சர்களை பொறுப்பாளராக பாஜக நியமிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டு அரசியலில் மீண்டும் இணை அமைச்சர்கள் எல்.முருகன் கவனம் பெற்றுள்ளார். எல் முருகனுக்கு பாஜக அலுவலகத்தில் புதிதாக அறை உருவாக்கப்பட்டு உள்ளது. இது போக 10 அமைச்சர்கள் தமிழ்நாடு வர உள்ளனர்.

தமிழ்நாடு திட்டம்

தமிழ்நாடு திட்டம்

மாதம் மாதம் 10 அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வருவார்கள். இவர்கள் மாவட்ட வாரியாக கட்சியை முன்னேற்றுவதில் கவனம் செலுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களை எல்லாம் ஒரு முக்கியமான அமைச்சர் கட்டுப்படுத்துவார் என்று கூறப்படுகிறது. கடந்த முறை உத்தர பிரதேச தேர்தலில் பாஜகவிற்காக வேலை பார்த்த ஒரு அமைச்சரை பாஜக தமிழ்நாட்டிற்காக களமிறக்க போவதாக கூறப்படுகிறது. இவரின் தலைமையில் மாத மாதம் 10 அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கட்சியை பலப்படுத்த போவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Are these 10 ministers fielded by Minister Amit Shah for Tamil Nadu and what is the plan?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X