Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எடு வண்டிய".. பாஜகவுக்கு "டபுள் ஷாக்" தந்த எடப்பாடி பழனிசாமி.. பாஜகவே எதிர்பார்க்கல.. மாறுது களம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கூட்டணி முறிந்தது முறிந்ததுதான், கதம் - கதம்.. இனி மீண்டும் இணைவதற்கு வாய்ப்பே இல்லை" என்று எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம், பாஜகவில் எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியவில்லை. அதேசமயம், 3வது அணி உருவாகும் சூழலும் தமிழகத்தில் வலுவாக கிளம்பி உள்ளதாக தெரிகிறது.

இதுவரை நடந்த தேர்தல்களில், பெண்களின் வாக்குகள் அதிமுகவுக்கு எப்போதுமே அதிகம் என்பதைபோலவே, சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவுக்கு பெருத்த பலமாக இருந்து வருகிறது.

Are these 2 strategies that will help ADMK Edapadi Palanisamy and What is BJP Annamalai going to do

சிறுபான்மை வாக்குகள்: இந்த சிறுபான்மையினர் வாக்குகளை கடந்த வருடங்களில் அதிமுக இன்னும் அதிகமாகவே இழந்தும் வருகிறது.. இதற்கு காரணம் பாஜகதான் என்பதை, அதிமுக தலைவர்களே வெளிப்படையாக சொல்லி வருகிறார்கள்.

அந்தவகையில், பாஜக கூட்டணியிலிருந்து இப்போது விலகியிருப்பது, அதிமுகவுக்கு கூடுதல் பலத்தை தருவதுடன், பாஜக எதிர்ப்பு வலுவாக உள்ள தமிழகத்தில், அந்த வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தையாவது அதிமுக இந்த முறை பெற்றுவிடும் என்பதிலும் சந்தேகமில்லை. இதற்கு மேலும் வலு சேர்ப்பதற்காகவே, திமுக கூட்டணியிலிருக்கும் சில கட்சிகளையும் தங்கள் பக்கம் கொண்டுவர அதிமுக முயற்சிப்பதாக தெரிகிறது.

மெகா கூட்டணி: ஆனால் யாருடன் கூட்டணி வைப்பார் என்று இதுவரை முடிவாகவில்லை.. பாமக, தேமுதிக, தமாகா போன்ற கட்சிகள் அதிமுக பக்கம் வருவார்களா? அல்லது பாஜக பக்கம் செல்வார்களா? என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.. மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்து கிட்டத்தட்ட 2 வருடங்களாகிறது.. ஆனால், இதுவரை கூட்டணி முடிவாகவில்லை.. திமுக கூட்டணியிலிருந்தும் யாரும் செல்லவில்லை.

ஆனாலும்கூட, பாஜகவை வீழ்த்துவதற்கான வேலைகளில் அதிமுக தரப்பு இறங்கிவிட்டதாம்.. இதற்காக சில வியூகங்களை கையில் எடுத்துள்ளதாகவும் சொல்கிறார்கள். முக்கியமாக, கொங்குவில் முழு கவனத்தையும் எடப்பாடி தரப்பு திருப்பி உள்ளதாம்.

அதிமுகவின் கோட்டை எனப்படும் கொங்குவில்தான், ஈரோடு இடைத்தேர்தலில், அதிமுக மண்ணை கவ்வியது.. இந்த தேர்தலின்போதுதான், பாஜகவுடன் உரசல் அதிகமானது..

சிறுபான்மையினர் ஓட்டுக்கள்: தமிழக பாஜக தலைவர்களை, கிட்டயே சேர்க்காமல் தன்னுடைய பிரச்சாரத்தையும் நடத்தி முடித்தது அதிமுக.. ஆனாலும், சிறுபான்மையினர் ஓட்டுக்கள் போதுமான அளவுக்கு கை கொடுக்கவில்லை. எனவே, பாஜகவுக்கு பதிலடி தருவதுடன், கொங்குவில் தன்னுடைய பலத்தை மீண்டும் பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடி எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர் உள்ளிட்ட தொகுதிகளில் எப்படியும் பாஜக போட்டியிடக்கூடும் என்பதால், இந்த தொகுதிகளிலெல்லாம் அதிமுகவின் குறி விழுந்துள்ளதாம்..

மேலிட பாஜக: மாநில தலைமைக்கு அண்ணாமலை பொறுப்பேற்றபிறகு, பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது என்பதை மேலிட பாஜகவுக்கு நிரூபிக்க வேண்டும் என்பதுடன், அதிமுகவின் வாக்கு சதவீதம் எந்தவிதத்திலும் கொங்குவில் பாதிக்கப்படவில்லை என்பதையும் நிரூபிக்க வேண்டும் என்ற இரட்டிப்பு வியூகத்தை அதிமுக மேலிடம் கையில் எடுத்துள்ளதாம்.

அதுமட்டுமல்ல, அண்ணாமலை, கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதாலும், இந்த கூடுதல் முயற்சியை அதிமுக முன்னெடுத்துள்ளதாம். இதற்காக, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் மக்களிடம் செல்வாக்கு பெற்ற வேட்பாளர், பசையுள்ள வேட்பாளர்களையும் நிறுத்த திட்டமிட்டு வருகிறதாம்.

முன்னுரிமை: அதேபோல, தென்மண்டலங்களில் காலூன்ற பாஜக முயன்று வருகிறது. அதனால்தான், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோரின் ஆதரவையும் முன்கூட்டியே தக்க வைத்துள்ளதால், இந்த வியூகத்தையும் உடைக்க அதிமுக முயன்றுள்ளதாக தெரிகிறது. இதற்காகவே, தென் மாவட்டங்களில் கணிசமாக உள்ள பிற சமூகத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

குறிப்பாக, தேவேந்திர குல வேளாளர், நாடார் சமூக மக்களின் வாக்குகளை பெறும் முயற்சியில் எடப்பாடி தரப்பு இறங்கி உள்ளதாக சொல்கிறார்கள். இந்த 2 சமூகத்தை சேர்ந்தோருக்கு, கட்சிக்குள் முக்கிய பதவிகளை ஒதுக்க போகிறார்களாம். எனவே, நாடார், தேவேந்திர குல வேளாளர் சமூத்தை சேர்ந்தவர்களை மாவட்ட செயலாளர்களாக அறிவிக்கும் வாய்ப்பும் உள்ளதாக தெரிகிறது.

2 அம்புகள்: ஏற்கனவே தென்மண்டலங்களில் அதிருப்தியை பெற்றிருக்கும் நிலையில், இதுபோன்ற முன்னெடுப்புகள் எல்லாம், தங்களுக்கு வாக்குகளாக திரும்பும் என்று எடப்பாடி பழனிசாமி நம்புகிறாராம்.

இதன்மூலம், பாஜகவுக்கும் ஒரு செக் வைக்க முடியும் என்றும் கணக்கு போடுகிறாராம். ஆக, கொங்கு + தென்மாவட்டம் என 2 அம்புகளை கையில் எடுத்துள்ளது அதிமுக.. இந்த அம்புகள் அனைத்துமே வாக்குகளாக திரும்ப கிடைக்குமா? அல்லது எய்தவர்களையே பதம் பார்த்துவிடுமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+