ஃப்ரீ ஹேண்ட் தரேன்! கண்ணசைத்த ஸ்டாலின்.. களமிறங்கிய 3 ஜாம்பவான்கள்.. இது யோசிக்க முடியாத ட்விஸ்ட்!
சென்னை: தமிழ்நாட்டின் 3 முக்கியமான அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் பல்வேறு பொறுப்புகளுக்கு களமிறக்கி உள்ளார்.
3 டாப் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை, முன்னாள் அதிகாரியை ஸ்டாலின் நேரடியாக களத்திற்கு கொண்டு வந்துள்ளார். இவர்களை ஸ்டாலின் அதிகம் நம்பும் நிலையில் அவர்களுக்கு தற்போது ப்ரீ ஹேண்ட் கொடுத்துள்ளாராம்.

நம்பிக்கை 1 - டேவிட்சன் : இது போக இன்னொருவர் புதிதாக பொறுப்பேற்ற சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் . இவர் உளவுத்துறையிலேயே முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தார். ஸ்டாலினின் குட் லிஸ்டில் இவரும் இருக்கிறார்.
பொதுமக்களிடம் கனிவாகவும் மரியாதையாகவும் பேசுங்கள் பொதுமக்களிடமும் தங்களுக்குக் கீழ் பணியாற்றும் காவலர்களிடமும் மரியாதைக்குரிய வகையில் பேச வேண்டும். துயரத்துடன் புகாரளிக்க வரும் மக்கள் போலீசாரைப் பார்த்து அச்சம் கொள்ளாத வகையில் நடந்து கொள்ளுங்கள்.
புகார்தாரர்களிடம் கனிவாகப் பேசுவதோடு, 'மிஸ்டர்', 'மேடம்' உள்ளிட்ட சொற்களைப் பயன்படுத்தி அழைக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு புதிதாக பொறுப்பேற்ற சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தி உள்ளார்.
நம்பிக்கை 2 - கே. அசோக் வர்தன் ஷெட்டி, கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்தியப் பல்கலைக்கழகமான சென்னை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ஆவார். துணைவேந்தராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, ஷெட்டி 1983 ஆம் ஆண்டு பேட்ச்சின் தமிழ்நாடு கேடரில் இந்திய நிர்வாகப் பணி (IAS) உறுப்பினராக இருந்தார்.
ஐஏஎஸ் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர், கல்லூரிக் கல்வி இயக்குநர் உள்ளிட்ட பல முக்கியப் பணிகளை அவர் வகித்தார்; மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்; ஊரக வளர்ச்சி இயக்குனர்; மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம், (டாஸ்மாக்); செயலாளர், முதலமைச்சர் செயலகம்; ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மை செயலாளர்; நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் முதன்மை செயலர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வெற்றிகரமான திட்டத்தை செயல்படுத்துவது அவரது பலமாக இருந்தது. தமிழக அரசால் பலமுறை பாராட்டப்பட்டது.
அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கம் இவர். முக்கியமாக கருணாநிதிக்கு இவர் லெப்ட் ஹேண்ட் போல செயல்பட்டார். இவரை மீண்டும் தனக்கு ஆலோசனை வழங்க ஸ்டாலின் களமிறக்கி உள்ளாராம்.
நம்பிக்கை 3- கமிஷனர் அருண்: முதல்வர் ஸ்டாலின் தற்போது அதிகம் நம்பிக்கை வைத்துள்ள அதிகாரிகளில் ஒருவர் ஐபிஎஸ் அருண். சென்னை கமிஷனராக பதவி ஏற்றுள்ள அருண் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சென்னையில் ரவுடியிசத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்று கூறிய அருண்.. அதற்கான பணிகளில் இறங்கி உள்ளார்.
தானடி ரவுடிகளை ஒழிக்க காவல் ஆணையரின் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. பொது மக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும்.
சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள் உட்பட காவல் உயர் அதிகாரிகள் போலீசாரின் ரோந்து பணிகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியில் சுணக்கம் காட்டும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிடை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளார். சென்னையின் புதிய கமிஷ்னர் அருண் நேரடியாக ரவுடிகளின் வீடுகள், இருப்பிடங்களுக்கே சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று ரெய்டு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் போனதாக முக்கியமாக சென்னையில் சட்ட ஒழுங்கு சரியில்லாமல் போனதாக வந்த புகாரை அடுத்து அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டு உள்ளனர். இந்த அதிகாரிகளை முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்தது எப்படி என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடந்து வரும் சில சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும் ஒரு ரெட் நோட் சென்றுள்ளதாம். அதாவது தமிழக அரசு இது போன்ற விவகாரங்களை எதிர்கொள்ள உடனே சுதாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டி உள்ளது. முக்கியமாக சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications