சில்லாக சிதறிய எடப்பாடி பிளான்! 48 மணி நேரத்தில் அடுத்தடுத்து போன கெட்ட செய்தி! நெடுஞ்சாலை குலுங்குதே
சென்னை: கடந்த 48 மணி நேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து பல கெட்ட செய்திகள் சென்றுள்ளன. அவர் போட்ட திட்டங்கள் பலவும் அதிமுகவிற்கு எதிராகவே திரும்பி உள்ளன. அப்படி என்னதான் நடந்தது... எடப்பாடி பழனிசாமிக்கு போன கெட்ட செய்திகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
விக்கிரவாண்டிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடந்தது. நேற்று நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவு ஆனது. அதிமுக இடைத்தேர்தலை புறக்கணித்திருந்த நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அப்படி இருக்க 82.48% வாக்குகள் பதிவு ஆனது

கெட்ட செய்தி 1: இதன் அர்த்தம் அதிமுக தேர்தல் புறக்கணிப்பை மக்கள் கண்டுகொள்ளவில்லை. அதிமுகவிற்கு பாரம்பரியமாக வாக்களிக்கும் மக்களும் அதிமுக இல்லை என்றாலும் கவலைபடாமல் வந்து வாக்களித்து உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட்ட போது பதிவான வாக்குகள்-182426.
எடப்பாடி பழனிச்சாமி தேர்தலை புறக்கணிப்போம் அறிவிப்பு செய்தபோது பதிவான வாக்குகள்-195495. இதன் அர்த்தம் அதிமுக இல்லையென்றாலும் அதை மக்கள் பொருட்டாக கருதவில்லை. இங்கே சராசரியாக 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகும். இந்த முறை அதை தாண்டி கிட்டத்தட்ட 83 சதவிகிதம் பதிவாகி உள்ளது.
இதில் திமுகவிற்கு பாரம்பரியமாக செல்லும் 46-50 சதவிகிதம் சென்றுவிட்டது என்று வைத்துக்கொள்ளலாம். மீதம் உள்ள வாக்குகள் அதிமுக இல்லாமல் பாமக, நாம் தமிழருக்கு சென்று இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆளும் கட்சி என்பதால் திமுகவிற்கு மேலும் 10 சதவிகிதம் வாக்குகள் வந்தாலும் கூட.. 60 சதவிகிதத்தை திமுக எடுத்தாலும் கூட மீதம் உள்ள 20 சதவிகிதத்தை பாமக, நாம் தமிழர் பகிர்ந்து கொள்ளும்.
மொத்தத்தில் எடப்பாடி தேர்தலை புறக்கணித்தும் கூட அதிமுகவினர் கூட்டம் கூட்டமாக வந்து வேறு கட்சிக்கு வாக்களித்து உள்ளனர். இப்படி விக்கிரவாண்டி பிளான் சொதப்பியதை பற்றி எடப்பாடி பழனிசாமிக்கும் தகவல் சென்றுள்ளது. விக்கிரவாண்டியை நாம் புறக்கணித்தும் கூட.. இப்படி நடந்து உள்ளது.. மக்கள் கூட்டம் கூட்டமாக வாக்களித்துள்ளனர் என்று தகவல் சென்றுள்ளது.
கெட்ட செய்தி 2: எடப்பாடி பழனிசாமியிடம் கொங்கு மண்டலத்தை சேர்ந்த 6 மாஜி அமைச்சர்கள், இன்னும் 2 மாஜி அமைச்சர்கள் எடப்பாடியை மீண்டும் சந்தித்து கடுமையான சில கோரிக்கைகளை வைத்து இருக்கிறார்களாம். அவரின் நெடுஞ்சாலை வீட்டிலேயே இந்த கூட்டம் நடந்துள்ளது. டப்பாடியிடம் பேசிய சீனியர்கள், அதிமுக கட்சி பல விதமாக பிரிந்தது. ஓபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு தென் மண்டலங்களில் , டெல்டாவில் வாக்குகளை பிரிக்கின்றனர். இவர்களை இணைக்க வேண்டும். அதிமுகவில் வேட்பாளர் தேர்வு சொதப்பல். பல தொகுதிகளில் உள்ளூர் ஆட்களுக்கே தெரியாதவர்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். சில இடங்களில் வெளியூர் ஆட்கள் வேட்பாளர்கள் ஆனார்கள். கல்லை கூட ஜெயிக்க வைக்க எடப்பாடி ஒன்றும் ஜெயலலிதா இல்லையே
அதிமுக மீண்டும் ஒருங்கிணைவதே முக்கியம். நீங்க தனியா வழிநடத்துனா சரியா இருக்காது.. அதிமுக ஒருங்கிணைய வேண்டும் . கட்சி ஒன்றாக இருந்தால் மட்டுமே நிலைமை சரியாகும். கட்சியை விட்டு நீக்கப்பட்டவர்கள் மீண்டும் இணைய வேண்டும். அதிமுக கட்சி பல விதமாக பிரிந்தது. ஓபிஎஸ் தரப்பு, டிடிவி தரப்பு தென் மண்டலங்களில் , டெல்டாவில் வாக்குகளை பிரிக்கின்றனர். இவர்களை இணைக்க வேண்டும்.
நீங்கள் தனியாக வளரவில்லை.. உங்களை நீக்கப்பட்டவர்கள்தான் வளர்த்துவிட்டனர். அவர்கள் மீண்டும் வந்தால்தான் கட்சிக்கு நன்றாக இருக்கும் என்று கூறி 8 பேரும் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.
கெட்ட செய்தி 3: எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் ₹100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ளார்
இந்த நிலையில் அவரின் வீடுகளில் ரெய்டு நடக்கிறது.கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சி அம்மன் நகரில் உள்ள அதிமுக தொழில்நுட்ப அணியின் நிர்வாகி கவின் வீட்டிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுகவின் மாஜி அமைச்சர் ஒருவர் தலைமறைவாகி உள்ளார். அவரின் வீடுகளில் ரெய்டும் நடக்கிறது. ஆனால் எடப்பாடி இதை பற்றி எதுவும் சொல்ல முடியாத அளவிற்கு அவர் மற்ற விஷயங்களில் பிசியாக வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார் விஜயபாஸ்கர். தலைமறைவாகியுள்ள அவரை கைது செய்ய முயன்று வருகின்றனர்.
தேடுதல்: அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு பக்கம் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சென்னை மற்றும் கரூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகங்கள் , அவரது ஆதரவாளர்களின் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தி நிறைய ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. இதில், போலீசார் எதிர்பார்க்காத வேறு விவகாரங்கள் குறித்த டாகுமெண்டுகளும் கிடைத்துள்ளதாம்.
அதிமுகவின் மாஜி அமைச்சர் ஒருவர் தலைமறைவாகி உள்ளார். அவரின் வீடுகளில் ரெய்டும் நடக்கிறது. ஆனால் எடப்பாடி இதை பற்றி எதுவும் சொல்ல முடியாத அளவிற்கு அவர் மற்ற விஷ்யங்களில் பிசியாக வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
கெட்ட செய்தி 4: எடப்பாடி உடனே இருக்கும் நிர்வாகிகளே அவரை எதிர்க்க தொடங்கி உள்ளனர். அவரின் லெப்ட் ஹேண்ட், ரைட் ஹேண்ட் கூட அவரை எதிர்க்க தொடங்கி உள்ளனர். ஒருங்கிணைந்த அதிமுக வேண்டும் என்று டாப் லீடர்களே அவரிடம் சொல்ல தொடங்கிவிட்டனர். எடப்பாடி இத்தனை காலம் கட்சியை கட்டுப்படுத்த காரணமாக இருந்த டாப் தலைவர்களே அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர். அப்படி இருக்க அவர் இனி எப்படி கட்சியை கட்டுப்படுத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிட்டத்தட்ட தென் மண்டலம், கொங்கு மண்டலம், வடமண்டலம் என்று 3 மண்டலங்களை சேர்ந்து 10 தலைவர்கள், 25+ எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு இதில் பிரஷர் கொடுக்க தொடங்கி உள்ளனராம். கடந்த 1 வாரமாக எடப்பாடி மட்டுமே ஓ பன்னீர்செல்வத்தின் விமர்சனங்களுக்கு பதில் சொல்கிறார். மற்ற நிர்வாகிகள் யாரும் ஓ பன்னீர்செல்வத்திற்கு பதில் சொல்லவில்லை. அப்படி இருக்க எடப்பாடி தனித்து விடப்பட்டு விட்டாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications