4 நங்கூரம்.. தோனி சைலண்டாக செய்த அந்த விஷயம்! அரண்ட குஜராத்! சிஎஸ்கே வெற்றிக்கு என்ன காரணம் தெரியுமா
சென்னை: 2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி அதிரடியாக பைனல்ஸ் சென்றுள்ளது. நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி சிறப்பாக ஆடி வென்றது.
இதுவரை குஜராத் அணியிடம் வென்றதே இல்லை என்று கரையை சிஎஸ்கே அணி நேற்று போக்கியதோடு அல்லாமல் முக்கியமான ஆட்டத்தில் வென்று பைனலும் சென்றுள்ளது. இனி மும்பை லக்னோ இடையில் நடக்கும் ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி குஜராத் அணியை எதிர்கொள்ளும்.

அதில் வெற்றிபெறும் அணியை சிஎஸ்கே அணி இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும்.
நேற்று குஜராத் அணிக்கு எதிராக சிஎஸ்கே டாஸ் தோல்வி அடைந்த நிலையில், சிஎஸ்கே அணி பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சிஎஸ்கே அணியின் பவுலிங் சரியில்லாத நிலையில், ஏற்கனவே டிஃபன்ட் செய்ய முடியாமல் குஜராத்திடம் தோல்வி அடைந்த நிலையில் சிஎஸ்கே அணி வெல்லுமா என்ற சந்தேகம் இருந்தது.
இதை உணர்ந்து தொடக்கத்தில் இருந்தே ருத்துராஜ் அதிரடியாக பேட்டிங் செய்தார். 44 பந்துகள் பிடித்த அவர் 7 பவுண்டரி, 1 சிக்ஸ் என்று அதிரடியாக ஆடி 60 ரன்கள் எடுத்தார். 136.36 ஸ்டிரைக் ரேட்டில் ஆடி இருந்தாலும் கூட அவரின் தொடக்கம் சிஎஸ்கே அணிக்கு நல்ல அஸ்திவாரத்தை கொடுத்தது.
இன்னொரு பக்கம் கான்வே 34 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். இன்னொரு பக்கம் ஜடேஜா 16 பந்தில் 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுத்தார்.
இதனால் சிஎஸ்கே அணி 20 இவரில் 172-7 ரன்கள் எடுத்தது.

குஜராத் அணி: இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் இருந்தே சீராக விக்கெட்டுகளை இழந்து வந்தது.
11 பந்தில் வெறும் 12 ரன்கள் எடுத்து சாகா அவுட் ஆனார். ஒன் டவுன் இறங்கிய ஹர்திக் பாண்டியா 7 பந்தில் 8 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதேபோல் தசுன் ஷானகா 16 பந்தில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
மில்லர், விஜய் சங்கர் தலா வெறும் 4 மற்றும் 14 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். ரஷீத் கான் மட்டும் 2 சிக்ஸ், 3 பவுண்டரி என்று 16 பந்தில் 30 ரன்கள் எடுத்து பிரஷர் கொடுத்தாலும் கடைசியில் அவரும் அவுட்டாக வெற்றி சிஎஸ்கே வசமானது. கில் மட்டும் அதிரடியாக 38 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். சாஹர், தீக்சனா, பத்திரானா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இந்த போட்டியில் சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய காரணமாக 4 விஷயங்கள் பார்க்கப்படுகிறது.
நங்கூரம் போல தோனி செய்த சில மாற்றங்கள்தான் சிஎஸ்கே கப்பலை பைனல்ஸ் துறைமுகத்தில் நிலையாக நிறுத்தி உள்ளது.

வெற்றிக்கு காரணமான 4 விஷயங்கள்: 1. ஒன் டவுன் இறங்கி அதிரடி காட்ட முயன்ற ஹர்திக் பாண்டியாவிற்கு அவரை குழப்பும் விதமாக ஆஃப்சைடில் கூடுதல் பீல்டரை தோனி கொண்டு வந்தார். ஜடேஜாவை அங்கே நிறுத்திய அடுத்த பந்தில் பாண்டியா கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
2. சுப்மான் கில் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த போது Wide square leg திசையில் கூடுதல் பீல்டரை இறக்கினார் தோனி. அங்கே கான்வே வர அவரிடம் கில் கேட்ச் கொடுத்தார்;.
3. ரஷீத் கான் பேட்டிங் செய்த போது ஆப் சைட் திசையில் மட்டும் 4 பீல்டர்களை அவுட் சைட் தி சர்க்கிள் பகுதியில் வைத்து இருந்தார்.
4. இப்படி சிறப்பான பீல்டிங் ஒரு பக்கம் இருக்க.. இன்னொரு பக்கம் தோனி செய்த ஓவர் ரொட்டேஷன் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications