Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணி மணியாக.. 8 அதிரடி அறிவிப்புகள்.. தமிழ்நாடு மக்களுக்கு ஏகப்பட்ட குட் நியூஸ்.. ஸ்டாலின் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த சில நாட்களில் மட்டும் அடுத்தடுத்து 8 முக்கியமான அறிவிப்புகளை, நல்ல செய்திகளை தெரிவித்துள்ளது. மக்கள் இடையே இந்த அறிவிப்புகள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மின்சாரத்துறை தொடங்கி டாஸ்மாக் வரை பல முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்புகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

 Are these 8 Good news from Tamil Nadu Government to people in last few weeks?

அறிவிப்பு 1: தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிவிப்பு 2: தமிழ்நாட்டில் உள்ள பெண் சுயஉதவிக்குழுக்களுக்கு என்று முக்கியமான நல்ல செய்தி ஒன்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சியில் உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.இந்த நிலையில் முதல்முறையாக தமிழ்நாட்டில் மாநிலம் முழுக்க இதேபோல் பெண்கள் குழுக்கள் பயன் அடையும் வகையில் உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும். பெண்கள் குழுக்கள் மூலம் கடன் வாங்கியது போக, வருவாய் ஈட்ட முக்கிய வழிவகுக்கும். இதேபோல் மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக சுயஉதவிக் குழுக்கள் தொடங்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை செய்து கொண்டு இருக்கிறார்.

அறிவிப்பு 3: தமிழ்நாட்டில் பென்சன் வாங்குபவர்களுக்கு முக்கியமான குட் நியூஸ் ஒன்றை தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது யுனெடைட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பென்சன் பெறுவோருக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது. இதற்காக கொடுக்கப்பட்டு உள்ள அடையாள அட்டையில் புகைப்படம் இல்லை. புகைப்படம் இல்லாத வெறும் பெயர் மட்டும் கொண்ட அடையாள அட்டை உள்ளது. இதனால் இன்சூரன்ஸில் முறைகேடு நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் பென்ஷன் பெறும் அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் புகைப்படத்துடன் கூடிய மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையை புகைப்படத்துடன் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் இதற்கான படிவங்களை டவுன்லோட் செய்ய முடியும்.அந்த படிவங்களை நிரப்பி, கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் அப்லோட் செய்ய வேண்டும். இதில் போட்டோவை பதிவேற்றுவது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் கொடுப்பட்டு இருக்கும். உங்களுடைய போட்டோ அப்டேட் செய்யப்பட்டபின், நீங்களே ஆன்லைன் வழியாக கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் தரவு தளத்தில் உங்கள் புதிய அடையாள அட்டையை பெற முடியும்.

அறிவிப்பு 4: ஸ்மார்ட் மீட்டர் விரைவில் பொருத்தப்படும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பின் மாதம் மாதம் மின் கட்டணம் வசூலிக்கப்படும். 2 மாத நடைமுறை கைவிடப்படும். தமிழ்நாட்டில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் முதலில் சோதனை முயற்சியாக தி நகரில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி சுமார் 1.10 லட்சம் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றிபெற்றுள்ளது.

அறிவிப்பு 5: ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக அபராதம் எதுவும் அறிவிக்கப்படவில்லை . அதனால் பொருத்த முடியாமல் போகும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. சென்னையின் பிற பகுதிகளுக்கு ஸ்மார்ட் மீட்டரை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்பின் தமிழ்நாடு முழுக்கவும் நடைமுறை படுத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக ஸ்மார்ட் மீட்டர் வாங்கும் டெண்டர் பணிகள் நடந்து வருகின்றன. 3 கட்டமாக தமிழ்நாடு முழுக்க ஸ்மார்ட் மீட்டர்களை பொறுத்த முடிவு செய்துள்ளனர்.

அறிவிப்பு 6: இரவு நேரங்களில் 20 சதவிகிதம் கூடுதல் மின்சார கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசு திட்டத்திற்கு தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அறிவிப்பு 7: மதுரை மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய முக்கிய செய்தி ஒன்றை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி மதுரையில் ரேஸ்கோர்ஸ் சாலை முதல் அத்திகுளம் சந்திப்பு வரையிலான எட்டு கிலோமீட்டர் தூரத்தில் சுகாதார நடைபாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த பகுதிகளை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் செய்த அமைச்சர் மா. சு, டோக்கியோவில் 'ஹெல்த் வால்க்' பகுதிகளை பார்வையிட்டார். இதையடுத்து, மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் இதேபோல் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதன் ஒரு கட்டமாக டோக்கியோவில் இருப்பது போல மதுரை அமைக்க முடிவு செய்துள்ளார்.

தமிழ் சங்க கட்டிடம், சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் மதுரையின் பல பிரபலமான உணவகங்கள் உள்ளிட்ட நகரின் பல முக்கிய அடையாளங்கள் இந்த பகுதியில் வருவதால் ரேஸ்கோர்ஸ் சாலை மற்றும் அத்திகுளம் சந்திப்பு இடையேயான பகுதியை இந்த ஹெல்த் வால்க் அமைப்பதற்காக நாங்கள் தேர்வு செய்தோம் என்று அமைச்சர் கூறி உள்ளார்.

அறிவிப்பு 8: தமிழ்நாட்டில் உள்ள 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்த அறிவிப்பும் மக்கள் இடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன. அதேபோல் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பில் கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+