பொன்மகன் சேமிப்பு திட்டம்.. ரூ.500 கட்டினால் லட்சங்களை அள்ளலாம்.. ஆண் குழந்தைகளுக்கான சூப்பர் சான்ஸ்
சென்னை: ஆண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமாக கருதப்படும் பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் பலன்கள் என்னென்ன? அதன் வரிவிகிதங்கள் எப்படி இருக்கின்றன? இந்த திட்டத்திற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன?
பெண் குழந்தைகளுக்கான திட்டமாக விளங்கி கொண்டிருக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தை போலவே, ஆண் குழந்தைகளை வைத்திருப்பவர்களும்கூட, தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு திட்டம் வேண்டும் என்று அஞ்சலகங்களை அணுகி கோரிக்கை வைத்தபடியே இருந்துள்ளனர்.

கோரிக்கை: இதையடுத்தே பொதுமக்களின் நன்மையை கருதி இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.. ஏற்கெனவே இருந்த PPF என்ற பொது வைப்பு நிதித்திட்டத்தின் கீழ் "மைனர்" என வரைமுறைப்படுத்தப்படும் 18 வயது பூர்த்தி ஆகாதோருக்கான திட்டத்தின் கீழ் சேமிப்பை தொடங்கலாம் என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில், பொன்மகன் சேமிப்பு திட்டம் அறிமுகமானது.
தமிழகத்திலேயே ஆண்களுக்கு மட்டும் இருக்கும் சிறுசேமிப்பு திட்டமாகும்.. இது கடந்த செப்டம்பர் 2015-ல் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டம் என்பதே இதன் கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாகும்.
முதலீடு: இந்த பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 8.5 சதவீதம் வட்டி விகிதம் அளிக்கப்படுகின்றது. பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத்தொகை ரூ. 500 ஆகும்.. அதிகபட்ச வருடாந்திர வைப்புத்தொகை ரூ. 1.5 லட்சமாகும்.. இதன் முதிர்வு காலம் மொத்தம் 15 ஆண்டுகள் ஆகும்.
எனினும், அடுத்த 5 வருடங்களை தொகுப்புகளாக அதிகரித்து கொள்ளலாம். அதற்கு முன்பு பணம் எடுக்க முடியாது என்றாலும், பிபிஎன்எஸ் கணக்கைத் தொடங்கிய 7வது நிதியாண்டிலிருந்து பகுதியளவு திரும்பப் பெறலாம். ஆண் குழந்தை 18 வயதை பூர்த்தி செய்ததுமே வட்டி உட்பட முழுத்தொகையும் ஆண் குழந்தைக்கு வழங்கப்பட்டுவிடும்.. குறைந்தபட்ச வயது வரம்பு என்றும் ஏதும் இதில் கிடையாது.
நிலையான வட்டி: PPNS கணக்கிற்கான குறைந்தபட்ச முதலீடு அல்லது வைப்புத் தொகை ரூ.100 ஆக உள்ளதுடன், நிலையான வட்டியும் விகிதத்தையும் இந்த திட்டம் வழங்குகிறது,.. அதாவது மற்ற சிறு சேமிப்பு திட்டங்களால் வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட அதிகமாகும்.
இதன் வரிச்சலுகையை பொறுத்தவரை, முதலீட்டாளர்கள் PPNS கணக்குகளில் தங்கள் முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளைப் பெறலாம். நிலையான வட்டி விகிதம் அதன் முதிர்ச்சியின்போது உறுதியளிக்கப்பட்ட கட்டணத்தை வழங்குகிறது..
வருமான வரி: வருமான வரி சட்டம், 1961 பிரிவு 80Cன் கீழ் ரூ.1.5 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு இந்த திட்டத்தில் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.. பொன்மகன் பொது வைப்பு நிதித் திட்ட கணக்கில் செலுத்தப்படும் வட்டிக்கும் வரி இல்லை.
அதேபோல, 7 சதவீதத்துக்கும் குறையாமல்தான் வட்டியே வழங்கப்படுகிறது. தற்போது இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 1.1% குறைவாகவே உள்ளது. ஒருவேளை, இந்த திட்டத்தின்போது குழந்தையின் பெற்றோர் அல்லது காப்பாளர் இறந்துவிட்டால், குழந்தை 18 வயதை பூர்த்தியடைந்திருக்கும் பட்சத்தில், குழந்தைக்கு பணம் கிடைக்கும். இல்லாவிட்டால், அவரது பாதுகாவலர் பணத்தை பெறலாம்.
எப்படி இணைவது: தமிழகத்தில் 2 ஆயிரம் தலைமை-துணை அஞ்சலகங்களும், சென்னையில் மட்டுமே 600-க்கும் மேற்பட்ட தலைமை-துணை அஞ்சலகங்களும் செயல்படுகின்றன.
அந்தவகையில், இந்த திட்டத்தை எளிதாக அணுகி துவங்கிவிடலாம். 10 வயதை பூர்த்திச் செய்திருந்தால் ஆண் குழந்தை தானாகவே பொன் மகன் சேமிப்புத் திட்டத்தில் இணையலாம். ஆண் குழந்தைக்கு 10 வயதுக்குக் குறைவாக இருக்கின்றது என்றால் பாதுகாவலர் உதவியுடன் கணக்கு ஆரம்பிக்கலாம்.
பொன்மகன் திட்டத்துக்கு தேவையான ஆவணங்கள்:
- பொன்மகன் திட்டத்துக்கான விண்ணப்ப படிவம்
- ஆண் குழந்தையின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
- பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் வருமான சான்றிதழ்
- ஆண் குழந்தையின் நடப்பு கல்வியாண்டின் பள்ளி சான்றிதழ்
- ஆண் குழந்தையின் வங்கி கணக்கு விவரங்கள்
- இருப்பிட ஆதாரம் (வாக்காளர் ஐடி, ரேஷன் கார்டு அல்லது ஆதார் அட்டை)
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications