"வேலையை" காட்டுது பாஜக.. மலங்க விழிக்கும் எடப்பாடி பழனிசாமி.. "அவரை" ரொம்ப நம்பினாரே.. எல்லாமே போச்சா
சென்னை: அதிமுக - பாஜகவுடன் கூட்டணி வைக்குமா? வைக்காதா? என்பது வானிலை அப்டேட் போல ஆகிவிட்டது.. திடீரென இணக்கமாகிறார்கள், திடீரென சுணக்கமாகிவிடுகிறார்கள்.. என்னதான் நடக்கிறது அதிமுக கூட்டணிக்குள்?
தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணிக்குள் இணக்கமான போக்கு ஏற்பட்டே ஆக வேண்டியிருக்கிறது.. இந்த இணக்கம் ஏற்படவேண்டுமானால், அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்..

அப்படி அறிவித்தால்தான், 2 கட்சி தொண்டர்களும் இணைந்து களத்தில் பணியாற்ற முடியும் என்பது அடிப்படையான விஷயம்.. இதுவரை அப்படியான நிகழ்வு எதுவுமே நடக்கவில்லை.. உறுதிப்படுத்தப்பட்ட கூட்டணியாகவும் கருத முடியவில்லை.
வைத்திலிங்கம்: இதேபோன்ற அதிருப்தி அதிமுக தலைமைக்கும் உள்ளது.. சமீபத்தில் டெல்லியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்ஸூக்கு விடுக்கப்படாத நிலையில், தெம்பாக இருந்தது எடப்பாடி தரப்பு.. ஆனால், மறுநாளே ரவீந்திரநாத்துக்கு அழைப்பு சென்றதுமே கடுப்பாகிவிட்டதாம். ஆக, தேசிய அளவில் அதிமுக - பாஜக கூட்டணி உறதியாக இருக்கிறதே தவிர, மாநில அளவில் கூட்டணி வலுப்படவில்லை.. இன்னமும் அதிருப்திகள் இருக்கத்தான் செய்கிறது.
அமித்ஷா: இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு தகவலும் நமக்கு கிடைத்துள்ளது.. இந்த மாதம் இறுதியில் தமிழகம் முழுவதும் நடைப்பயணம் துவக்குகிறார் அண்ணாமலை. ஜூலை 28-ல் ராமேஸ்வரத்தில் துவங்கும் இந்த பயணத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
அமித்ஷா தொடங்கி வைப்பதால், இந்த தொடக்கவிழாவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக பிளான் செய்கிறதாம்.. அதன்படி, விழாவில் கலந்து கொள்ள 3 பேருக்குமே அழைப்பு விடுத்துள்ளதாம் பாஜகவின் தேசிய தலைமை. இந்த தகவல் சொல்லப்பட்டதுமே, "அவசியம் கலந்து கொள்ள வருவேன்" என்று உறுதியளித்து விட்டாராம் எடப்பாடி பழனிசாமி.
டிடிவி தினகரன்: இந்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனையும் பாஜக தலைமை அழைத்திருக்கிறது என்கிற விபரம் இப்போதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்ததாம்.. உடனே டென்ஷனாகிவிட்டாராம்.. அந்த நேரத்தில் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் புலம்பி தள்ளிவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி..
"அமித்ஷா கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் நிச்சயம் அந்த ரெண்டுபேரும் (ஓபிஎஸ், தினகரன்) வருவார்கள். அவர்கள் முகத்தில் நாம் முழிக்கணுமா? டெல்லியில் ஜேபி நட்டாவை சந்தித்தபோது அதிமுக-பாஜக கூட்டணிக்குள் அவர்களை சேர்க்கக்கூடாது" என்று ஸ்ட்ரிக்ட்டாக என்னுடைய முடிவை சொல்லியிருக்கிறேன். அப்படியிருந்தும் என்னையும் அழைத்து விட்டு அவர்களையும் அழைக்கிறார்கள் என்றால், டெல்லிக்கு என்னதான் நினைக்கிறது? அமித்ஷா தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு நான் போக மாட்டேன்" என்று நொந்து போய் சொன்னாராம்.
க்ரீன் சிக்னல்: ஆக, அண்ணாமலை நடைப்பயண தொடக்கவிழாவில் எடப்பாடி கலந்து கொள்வரா? புறக்கணிப்பாரா? என்ற கேள்வி அதிமுகவில் வட்டமடிக்கிறது. இதற்கிடையே, ஆகஸ்ட்டில் நடக்கும் அதிமுக மண்டல மாநாட்டில் கலந்துகொள்ள மோடியையும் அமித்ஷாவை கலந்துகொள்ள வைக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறார் எடப்பாடி. ஆனால், எடப்பாடியின் இந்த அழைப்பிற்கு டெல்லி இன்று காலை வரை க்ரீன் சிக்னல் தரவில்லை பாஜக என்கிறார்கள்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications