மீண்டு(ம்) பன்னீர்செல்வம்.. வேற மாதிரி குஷி.. ஓபிஎஸ்ஸே எதிர்பார்க்கல.. 414 புள்ளி? பார்க்குது பாஜக
சென்னை: தேர்தல் நெருங்கும் சூழலில், ஓபிஎஸ்ஸுக்கு எத்தனை சீட், என்னென்ன தொகுதிகளை பாஜக ஒதுக்கும் என்று தெரியவில்லை.. ஆனால், பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை ஜரூராக துவக்கியிருக்கிறார் ஓபிஎஸ்.
பாஜகவுடன் இணைந்து வரப்போகும் தேர்தலை சந்திக்க முடிவு செய்துவிட்டார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.. அதனால்தான், பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று தொடர்ந்து கூறிவருகிறார்.
2 நாட்களுக்கு முன்பு, தேர்தல் தொடர்பாக ஆதரவாளர்களுடன் தன்னுடைய ஆலோசனையை நடத்தியிருந்தார் ஓபிஎஸ்.. பிறகு, தங்கள் அணி சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனு குறித்த தகவலையும் வெளியிட்டிருந்தார்.
போட்டி: தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 10 ஆயிரம் ரூபாயை செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அளித்த நபர்களிடம் மாலை 6 மணி முதல் நேர்காணல் நடைபெறும் என்று கூறி, பாஜகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்து ஓபிஎஸ் உத்தரவிட்டிருந்தார்..
இந்தக் குழுவில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன்,ஜே.சி.டி பிரபாகர், தர்மர், கு.ப. கிருஷ்ணன், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக நிர்வாகிகள் மற்றும் ஓபிஎஸ் தரப்பினரிடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதுகுறித்து ஓபிஎஸ் சொல்லும்போது, "அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்க போகிறோம்.. பாஜக பொறுப்பாளர்கள் எங்களுடைய கோரிக்கைகளை தெளிவாக கேட்டுள்ளனர்.. தொகுதிகள் குறித்து மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி தெரிவிப்பதாகவும் சொல்லி உள்ளனர்..
அரசியல் கட்சி: மற்ற கட்சிகளுடன் கேட்டு அனைவரும் ஏற்கும் வகையில் முடிவு எட்டப்ப்படும்... டிடிவி தினகரன் தனியாக அரசியல் கட்சியை நடத்துகிறார்.. அதனால், அவரையும் அழைத்துப் பேச இருக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
தாமரை சின்னம்: இதில் எத்தனை சாத்தியமாகும் என்று தெரியவில்லை.. அதேபோல, தாமரை சின்னத்தில் ஓபிஎஸ் தரப்பு நிற்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்த வாய்ப்புள்ளதாம்.. எனினும், தனி சின்னத்தில் நிற்கவே ஓபிஎஸ் விரும்புகிறாராம்.
இப்படிப்பட்ட சூழலில், யாருமே எதிர்பார்க்காத வகையில், ஓபிஎஸ் அணியில் குட்நியூஸ் ஒன்று நடந்துள்ளது.. அதாவது, நேற்று காலை 10:00லிருந்து மாலை 4:00 மணி வரை, விருப்ப மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன... தலா 10 தொகுதிகள் வீதம், 4 குழுக்களாக விண்ணப்ப படிவங்களும் வழங்கப்பட்டுள்ளன.. அதை பெற்றவர்கள் உடனடியாக பூர்த்தி செய்து வழங்கினார்கள்.
மாலை 6:00 மணிக்கு ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணலை ஓபிஎஸ் நடத்தினார்.. விருப்ப மனு கொடுத்தவர்களிடம், அவர்களின் வெற்றி வாய்ப்பு குறித்தும் கேட்கப்பட்டிருக்கிறது.
விருப்ப மனு: அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், இந்த தேர்தலில் போட்டியிட, மொத்தம் 414 பேர் விருப்ப மனு அளித்திருக்கிறார்களாம். ஓபிஎஸ் டீமில் நிர்வாகிகள் அவ்வளவாக இல்லை, தேர்தலில் போட்டியிட யாரும் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் கிளம்பிய நிலையில், ஒரேநாளில் 414 பேர் விருப்ப மனு தந்து அசரடித்திருக்கிறார்கள். இது ஓபிஎஸ் தரப்புக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications