Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தல"க்கு தில்ல பாத்தீங்களா.. எகிறியடித்த எடப்பாடி.. "கமலாலய" வாசலில் விழுந்த 2 குண்டு.. அதிரும் பாஜக

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 விதமான அதிர்ச்சி வைத்தியத்தை பாஜகவுக்கு தந்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. இதனால் அடுத்து என்ன செய்வதென்ற அடுத்த கட்ட ஆலோசனையில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பிறகு, அதிமுக பொதுச்செயலாளராகி உள்ள எடப்பாடி பழனிசாமி, எம்பி தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்தி வருகிறார். எம்பி தேர்தலில் பாஜகவுடன் தொடரும் என்று சமீபத்தில் அறிவித்திருந்த எடப்பாடி பழனிசாமி, அதற்கு பிறகு அதை பற்றி பெரிதாக பேசாமலும் உள்ளார்.

Are these the 2 shocks that Edapadi Palanisamy gave to the BJP and What is Tamil Nadu BJP going to do

நேற்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் எடப்பாடி.. தென்மண்டலங்களில் சரிந்துள்ள வாக்கு பலத்தை அதிகரிக்கவும், தன்னுடைய செல்வாக்கை முக்குலத்தோர் மத்தியில் காட்டவும், முக்குலத்தோருக்கும் தன் மீதான அதிருப்திகளை களையவும், விரைவில் மதுரையை குறி வைத்து மாநாடு நடத்துவதாக தெரிகிறது.. வருகிற ஆகஸ்டு 20-ந் தேதி மதுரையில் மாநாடு நடைபெறுவதால் அதற்கான ஆயத்த பணிகளில் மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகிறார்கள்....

மாநாடு தீவிரம்: இந்த மாநாடு குறித்து சில விஷயங்கள் நேற்றைய தினம் பேசியதாக சொல்கிறார்கள்.. இதுபோக, தேர்தல் விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பிறகு கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, தேர்தல் வரட்டும், கூட்டணி குறித்து அப்போது சொல்லப்படும் என்று சொல்லியிருந்தார். இது பாஜகவுக்கு மிகுந்த அதிர்ச்சியை தந்துள்ளதாம்.

பாஜக - அதிமுக கூட்டணி தொடரும் என்று 2 மாதங்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார்.. அந்த நேரத்தில் கர்நாடக மாநில தேர்தல் நடந்து கொண்டிருந்ததால், ஒருவேளை அம்மாநில அதிமுகவினரின் வாக்கு வங்கியை பெறுவதற்காக, இப்படி ஒரு கூட்டணி முடிவு அறிவிக்கப்பட்டதா? என்று அப்போதே அரசியல் வியூகர்கள் சந்தேகம் எழுப்பினார்கள்..

அதற்கேற்றபடி, கர்நாடக மாநில தேர்தலுக்கு பிறகு, பாஜக - அதிமுக கூட்டணி குறித்து அவ்வளவாக யாரும் பேசவில்லை. குறிப்பாக, தமிழக தலைவர்கள் அதைபற்றி பகிரங்க பேட்டிகளை தரவில்லை.. அதுபோலவே, அதிமுக தலைவர்களும், பாஜக கூட்டணி விஷயமாக பேட்டிகளை தரவில்லை. நேற்றைய தினமும், எடப்பாடி பழனிசாமி அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை..

சந்தேகம் கிளம்பியது: 2 நாட்களுக்கு முன்பு, பாஜக எங்களிடமும் பேசிக்கொண்டுதான் உள்ளது என்று ஓபிஎஸ் வெளிப்படையாக செய்தியாளர்கள் கூறியிருந்த நிலையில், வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இருக்கிறதா? இல்லையா? என்பது மறுபடியும் சந்தேகமாக உருவெடுத்துள்ளது.

பாஜகவும் அதிக சீட் கேட்டு வருவதும், ஓபிஎஸ், தினகரனை மறுபடியும் கூட்டணிக்குள் அழைத்து வர பாஜக முயற்சிப்பதும், பாதிக்கு பாதி சீட் கேட்பது, கூட்டணிக்கு தலைமை, போன்ற விஷயங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை என்று செய்திகள் வலம்வரும் நிலையில், கூட்டணி குறித்த சந்தேகம் வலுத்துள்ளது.

அதிரடி அறிவிப்பு: அதேபோல. பாஜக கொண்டு வர திட்டமிட்டுள்ள பொது சிவில் சட்டத்தை அதிமுக ஆதரிக்காது என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.. இதுவும் மிகுந்த அதிர்ச்சியை பாஜகவுக்கு தந்துள்ளது. நேற்றைய தினம் பொதுசிவில் சட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, எங்கள் தேர்தல் வாக்குறுதியில் எங்கள் நிலைப்பாட்டை தெளிவாகத் தெரிவித்திருக்கிறோம். அதைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்" என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்திருந்தார்.

அதாவது அதிமுகவின் 2019 எம்பி தேர்தல் வாக்குறுதியில், "இந்தியாவின் சிறுபான்மையினரின் மத உரிமைகளை மோசமாக பாதிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் பொது சிவில் சட்டம் உள்ளிட்ட அரசியல் சட்டத்தில் எந்தத் திருத்தமும் கொண்டுவர வேண்டாம் என இந்திய அரசை அதிமுக வலியுறுத்தும்" என்று தெரிவித்திருந்தது.. இதைதான், எடப்பாடி அவ்வாறு மறைமுகமாக கூறியுள்ளார்.

Are these the 2 shocks that Edapadi Palanisamy gave to the BJP and What is Tamil Nadu BJP going to do

அதிர்ச்சி: இதற்கு முன்பு எத்தனையோ சட்டங்களை, பாஜக கொண்டுவந்திருக்கிறது.. அந்த சட்டங்களுக்கெல்லாம் அதிமுக, கண்ணை மூடிக்கொண்டு ஆதரவை தந்திருக்கிறது.. ஆனால், பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தன் மூலம் தாங்கள் இப்போதைக்கு பாஜக பக்கம் இல்லை என்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முயலுகிறதா? என தெரியவில்லை..

ஒருவேளை, பொதுசிவில் சட்டத்தை எதிர்ப்பதன் மூலம் அதிமுகவின் பழைய சிறுபான்மையினர் வாக்கு வங்கி மறுபடியும் கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுவதாக சொல்கிறார்கள்.

டபுள் செக்: ஆக, கூட்டணி பற்றியும் சொல்லாமல், பொது சிவில் சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து, ஒரே கல்லில் ரெண்டு செக் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. இதற்கு பாஜகவின் பதிலடி எப்படி இருக்க போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+