"முதன்முறையாக" தமிழகத்தில் கால் வைக்கும் பிரதமர் மோடி.. இதுதான் ப்ளான்.. பாஜக ஹேப்பி.. எல்லாம் ரெடி
சென்னை: பிரதமர் மோடி வருகிற 20ம் தேதி சென்னைக்கு வருகை தருகிறார். பிரதமரின் இந்த பயணம்தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பாஜகவினரிடம் ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே 6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன... சென்னை - கோவை, சென்னை- நெல்லை, சென்னை - மைசூர், கோவை- பெங்களூர், சென்னை- விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி கொண்டிருக்கின்றன..

இந்த சேவைகளுக்கான ஆதரவையும் பொதுமக்கள் அபரிமிதமாகவே வழங்கி வருகிறார்கள். அதனால்தான் வந்தே பாரத் ரயிலுக்கான தேவை என்பது பெருகிகொண்டே வருகிறது.
அந்தவகையில், சென்னை எழும்பூர் - நாகர்கோயில் இடையே வாராந்திர வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது.. ஆனால் சென்னை எழும்பூர்-நாகர்கோயில் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை தினசரி ரயில் சேவையாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து கோரிக்கையை வைத்தபடியே இருந்தனர்.. இதற்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக, சென்னை எழும்பூர் - நாகர்கோயில் இடையே தினசரி வந்தே பாரத் ரயில் சேவையை இயக்க அனுமதி அளித்துள்ளது.
சென்னை: இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி சென்னைக்கு வருகிறார். அப்போது வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் இந்த வருகையையொட்டி, ரயில்வே அதிகாரிகள் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி பொறுப்பேற்ற பிறகு, சென்னைக்கு முதல்முறையாக வரவுள்ளார் மோடி. இந்தப் பயணத்தின் போது சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
அதிகாரிகள்: இந்த திட்டம் தொடர்பாகவும், பிரதமரின் வருகை தொடர்பாகவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் சில தகவல்களையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
"பிரதமர் மோடி 20-ம் தேதி சென்னைக்கு வருகிறார். அப்போது அவர் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விழாவுக்கான ஏற்பாடு செய்யப்படவுள்ளது. சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதேபோல பேசின்பாலம் யார்டில் வந்தே பாரத் பராமரிப்பு பணிமனை அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.
நாகர்கோவில்: ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் மற்றும் மேலப்பாளையம் - திருநெல்வேலி இடையே நிறைவடைந்த இரட்டை ரயில்பாதை திட்டத்தையும், நாகர்கோவில் டவுன் - நாகர்கோவில் சந்திப்பு- கன்னியாகுமரி இடையே முடிக்கப்பட்ட இரட்டை ரயில்பாதை திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதனை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக துவங்கி வைக்கிறார். அதேபோல, மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையையும், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தொடங்கிவைக்கிறார்.
இப்போதைய அட்டவணைப்படி இந்த திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை சென்னை சென்ட்ரலில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டாலும், இந்த ரயிலின் வழக்கமான சேவை சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றனர் ரயில்வே அதிகாரிகள்.
அறிவுறுத்தல்கள்: பிரதமரின் வருகைக்கான விழா முன்னேற்பாடுகள் குறித்து, தெற்கு ரயில்வே பொது மேலாளர் பாதுகாப்பு படை வீரர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்.. இதனிடையே, பிரதமராக 3-வது முறையாக பதவியேற்ற பிறகு முதன்முறையாக தமிழகத்துக்கு வருகிறார் பிரதமர் மோடி.. இதனால், பாஜக நிர்வாகிகள் மிகவும் மகிழ்ச்சியுமும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில், எதிர்பார்த்த சீட்டுக்களை தேசிய பாஜக பெறவில்லை.. அதேபோல தமிழகத்திலும், அண்ணாமலையின் நடைபயணமும், பிரதமர் மோடியின் பிரத்யேக வருகைகளும், தமிழக பாஜகவுக்கு பலம் சேர்க்கும் என்றே நம்பப்பட்டது. ஆனால் பெரிதாக எந்த பலனையும் தரவில்லை.. எனினும் 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளதால், பாஜகவினர் படுஉற்சாகத்தில் உள்ளனர்.
வாசன்: இன்றுகூட, தமாகா தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, மக்களின் நம்பிக்கையை பெற்று, மரியாதைக்குரிய சதவீதத்தை பாஜக கூட்டணி பெற்றுள்ளது. இந்த சதவீதத்தின் அடிப்படையிலே பாஜக தலைமையில் அனைத்து கட்சி தலைவர்கள் தொடர்புடைய உழைப்பை பாராட்டுகிறேன். இந்த சதவீதம் என்பது வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நிச்சயமாக எங்களுக்கு அடித்தளமாக அமையும்" என்று பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
அந்தவகையில், தமிழக பாஜக மட்டுமல்லாமல், கூட்டணி கட்சியினரும் பிரதமரின் சென்னை வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.. பிரதமருக்கு உற்சாக வரவேற்பினை கொடுக்கவும் கமலாலயம் தயாராகி கொண்டிருக்கிறது...!!
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications