"160/100".. வலையில் மாட்டிய செந்தில்பாலாஜி.. இந்த "4 விஷயங்கள்" உங்களுக்கு தெரியுமா? இதான் நடைமுறையே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள நிலையில், இதற்கான நடைமுறைகள் என்னென்ன தெரியுமா?

இன்று அதிகாலை கைது நடவடிக்கையில் இறங்கிய நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.. ஆனால், அமைச்சருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுவிடவும், உடனடியாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஐசியூவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.. தொடர் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது..

Are these the enforcement arrest procedures and How is senthil balajis health condition now

ஆனால், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து வெளியாகும் தகவல்கள் எல்லாம் அதிர்ச்சி தந்து வருகின்றன..

உடல்நிலை பாதிப்பு: மயக்க நிலையில் இருப்பதாக சொல்கிறார்கள்.. காது பக்கம் லேசாக வீக்கம் இருப்பதாக சொல்கிறார்கள்.. நான்கைந்து முறை கூப்பிட்டு பார்த்தும், அவர் கண் விழிக்கவில்லை என்கிறார்கள்.. அமைச்சர்கள் மருத்துவமனையிலேயே விழிப்பாய் இருக்கிறார்கள்.. ஒவ்வொருவராக தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறார்கள். இதனால் தமிழகம் உட்பட திமுகவுக்குள்ளேயே ஒருவித பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

உடல்நலக்குறைவு: முன்னதாக, விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து செல்ல முயன்றபோதுதான், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது.. பிறகுதான், அவரது கைது குறித்து செந்தில் பாலாஜி சகோதரரிடம் தெரிவிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள்..

விஷயத்தை கேள்விப்பட்டதுமே, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.. செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்... ஏற்கனவே, ஓமந்தூரார் மருத்துவமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இப்போது, சிஆர்பிஎஃப். வீரர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகைக்குண்டுகளுடன் அவர்கள் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளது, மிகப்பெரிய பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது.

160/100: இதனிடையே, செந்தில்பாலாஜி உடல்நிலை எப்படி உள்ளது என்று ஒரு பேட்டிக்கு மருத்துவமனை டாக்டர்கள் பேட்டி தந்துள்ளனர்.. அதில், 'செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட போது அவருடைய உயர் ரத்த அழுத்தம் 160/100 ஆக இருந்தது. இதய துடிப்பில் மாற்றம் இருந்தது. ECG யில் சில மாறுதல்கள் இருந்ததால் அவருக்கு மாரடைப்பு வராமல் இருக்க ICUவில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளனராம்.

ரெய்டு: வழக்கமான ரெய்டு போல இல்லாமல், நேரடியாகவே குறி வைக்கப்பட்டுதான், அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியிருக்கிறார்கள்... எனினும், அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தால், அதற்கான நடைமுறைகள் என்ன? என்பதையும் அறிய வேண்டி உள்ளது. அதுவும், அமைச்சராக இருக்கும் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தால், மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை பார்ப்போமா:

1. அமலாக்கத்துறை அதிகாரிகள், ஆளும் கட்சியில் உள்ள ஒரு அமைச்சரை கைது செய்தார்கள் என்றால், அதுகுறித்து உடனடியாக சட்டப்பேரவை செயலகத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்படும்.

2. சட்டப்பேரவை செயலகம் மூலம், சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்படும்.

3. ஒருவேளை கைது சம்பவம் நடக்கும்போது, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தால், உடனடியாக சட்டப்பேரவையில் அறிவிக்கப்படும்.

4. சட்டப்பேரவை நடைபெறாத பட்சத்தில், 5 நாட்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

ஆனால், இந்த நடைமுறை எதையுமே அதிகாரிகள் பின்பற்றவில்லை என்கிறார்கள் திமுகவினர்.. அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாகனத்தில் மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வீட்டில் இருந்து வெளியே அழைத்து செல்ல முயன்றனர்.

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. காரில் படுத்துக் கொண்டு கதறியுள்ளார்.. அதனால் அவர் அங்கிருந்து ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டனர்.. இதனால் திமுகவினர் கடுமையான ஆத்திரத்தில் உள்ளனர்.. இதுதான் முறையா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

முறையா?: இதுகுறித்து செந்தில் பாலாஜியின் வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்ஆர் இளங்கோ சொல்லும்போது, "சரியான எந்த தகவலையும் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை.. மனித உரிமைகளுக்கு எதிராக சித்திரவதைக்கு அவர் ஆளாக்கப்பட்டுள்ளார்.. அவர் கைது செய்யப்பட்டாரா இல்லையா என்பதை கூட அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை என்று அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+