ஸ்டாலினின் மூவ்.. மீண்டும் ஆளுநர் உரை? இப்படி ஒரு மேட்டர் இருக்கா? கூடியது தமிழக அமைச்சரவை கூட்டம்
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று 23-ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூடும் இந்த அமைச்சரவை கூட்டம் மிகுந்த பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை எம்பி தேர்தல் வரப்போகிறது.. இந்த தேர்தலுக்கான மும்முரங்களில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.. அதேபோல, வரும் பிப்ரவரி மாதம், சட்டப்பேரவை கூட்டத்தொடரும் ஆரம்பமாக உள்ளது.. எனவே, இந்த கூட்டத்தொடருக்கு ஆயத்தமாவது குறித்த விஷயங்கள் இன்றைய தினம் விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு: அதேபோல, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. கடந்த வருடம் பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது.
எனவே, தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே தொடங்க வேண்டும் என்று பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்தும் ஆலோசனை நடக்கலாம் என தெரிகிறது.
அமைச்சரவை கூட்டம்: அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் துவங்கியது.. அனைத்து அமைச்சர்களுக்கும் இதற்கான அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதுடன், அனைவரும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், அனைவருமே பங்கேற்றுள்ளனர்.
வழக்கமாக வருடந்தோறும், கவர்னிரின் உடையும் முதல்கூட்டத்தொடர் துவங்கும். அந்தவகையில், அடுத்த மாதம் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. எனவே, அதுகுறித்தான விவாதம் இன்றைய தினம் நடக்கலாம் என்று தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் கவர்னரின் உரையுடன் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும்.
திராவிட மாடல்: இப்படித்தான் கடந்த வருடமும் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 9-ம் தேதி தொடங்கியது.. அப்போது உரையாற்றிய ஆளுநர் ரவி, "திராவிட மாடல்", "தமிழ்நாடு" போன்ற வார்த்தைகளை தவிர்த்துவிடவும், அது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. ஏற்கனவே, ஆளுநர் தரப்புக்கும், தமிழக அரசுக்கும் அதிருப்திகள் நிலவிவந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் மிகப்பெரிய பிளவையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்திவிட்டு போயிருந்தன.
அப்போது முதல், இப்போதுவரை இந்த மோதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றாலும், இவ்விவகாரத்தை இந்த முறை கவனமாக கையாளும் வகையில், இந்தமுறை கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல், சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு ஆயத்தமாவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு: அதேபோல, முதல்வரின் வெளிநாட்டு பயணம், திமுக இளைஞரணி கூட்டம், பிரதமரின் தமிழகம் வருகை, அடுத்து முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள், அதற்கான நிதிவிவகாரங்கள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்படஉள்ளது
இதுதவிர, வரும் 28-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லவிருக்கிறார்.. அவர் பிப்ரவரி முதல் வார இறுதியில்தான் தமிழகம் திரும்புகிறார். இப்படிப்பட்ட சூழலில், வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், சலுகைகள் அளிப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் இன்றைய அமைச்சரவை கூட்டம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை தமிழக மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications
